வெள்ளி 22 2015

வாங்க....வாங்க... விவசாயி அய்யா.....

விவசாயி
விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !




வாங்க..வாங்க....
விவசாயி அய்யா..
நம்ம நிலத்தையெல்லாம்
மக்களின் நண்பனான
போலீசின் அடி
உதைக்கு பயந்து
மோடியின் கார்பரேட்
கம்பெனிகளுக்கு பறி
கொடுத்து  விட்டு....

இருக்கப்பட்ட சீமான்கள்
கட்டியுள்ள  பெரிய
பங்களாக்கலில் மொட்டை
மாடியிலும் பால்கனியிலும்
அமைத்திருக்கும் தோட்டத்தில்
வேலை கேட்டு அலைவோம்

வாங்க....வாங்க..
விவசாயி அய்யா...

12 கருத்துகள்:

  1. அய்யா எத்துனைப் பெரிய விசயம். பின்னே நடக்க போவதை முன்கூட்டியே உரைத்து விட்டீர்கள்.
    மாடியிலும் பால்கனியிலும்
    அமைத்திருக்கும் தோட்டத்தில்
    வேலை கேட்டு அலைவோம்
    நடக்கும் போதும் பாதிக்கப்படுவது நாம் தான் அய்யா.

    பதிலளிநீக்கு
  2. வெள்ளம் வருமுன் அணை கட்டவது அறிவுடமை... வெள்ளம் வந்த பின் அணை கட்ட முயலுவது அறிவின்மை... பூவோடு நாறும் காய்வதுபோல் நாமும் பாதிக்கப்பட்டுதான் ஆகவேண்டும். நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. கடைசி வரிகள் மிகவும் அருமை நண்பரே... சிரிப்பதைவிட சிந்தனையை கொடுத்தது

    பதிலளிநீக்கு
  4. இப்பவே..அப்படித்தான் நிலைமை இருக்கிறது நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. நிலம் கையகப் படுத்தும் சட்டம்
    "வாங்க....வாங்க... விவசாயி அய்யா."....
    சாட்டை அடியாக கவிதை வடிவில் தெரிகிறது
    எனக்கு வலிக்கிறது வலிப் போக்கரின் கவிதை வரிகள்.
    மத்திய அரசுக்கு ?????
    தம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதோ எனக்கு தெரிந்த வழியில் சாட்டையை சுழற்றுகிறேன். அய்யா...

      நீக்கு
  6. இந்த மாதிரிக் கூத்துக்கெல்லாம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியும் காரணம் ,ஆனால் ,அவர்களும் இப்போது விவசாயிகளின் நண்பனைப் போல் நடிக்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளும் கட்சியை எதிர்ப்பதும். அந்த எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறியவுடன் ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சியாக மாறி ய கட்சி நாடகமாடி ஆளும் கட்சியை எதிப்பது தானே காந்தி தேசத்தின் வழமையான பிறப்புரிமை...ஆச்சே..

      நீக்கு
  7. வாங்க... வாங்க...
    விவசாயி அய்யா...
    என்னங்க
    இந்தக் கொடுமையை
    எந்தக் கடவுளும் கண்காணிப்பதாய்
    சொந்தக் கண்கொண்டு பார்க்க முடியுதில்லையே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...