ஞாயிறு 03 2015

பட்டுத் தெறித்த பார்வைகளில்..கண்டு கொள்ளாத ஒரு பார்வை..


கூலிங்கிளாஸ் கண்ணாடி க்கான பட முடிவு
படம்-mbasic.facebook.com

நீண்ட தூரம்
செல்லும் பாசஞ்சர்
ரயில் அது.

ஒவ்வொரு நிலையத்திலும்
அசைந்தாடி சென்று
நின்று,..நிழலாடி
கூத்தாடி உறவாடி
மெதுவாக செல்லும்
 அந்த ரயிலில்
திக்குத் தெரியாமல்
நானும்.................

மணி இரவு இரண்டு
தூக்க கலக்கத்துடன்
அந்த  நிலையத்தில்
ரயில் நின்றதும்

திமு திமு வென்று
ஏறினார்கள் அவர்கள்
கூட்டம் நிரம்பி
இருந்த போதும்
வழியில் படுத்து
இருந்தவகள் சிலரை
எழுப்பி விட்டு
தாங்கள் நிற்பதற்கு
ஒரு இடத்தை
பிடித்துக் கொண்டு
பயணித்தார்கள் அவர்கள்.

வந்தவர்களில் பலர்
இளைஞர்களாய் தெரிந்தார்கள்
அவர்களைக் கண்டவுடன்
அணிச்சைச் செயலாக
டாப்ஸ்யையும் துப்பட்டாவையும
 கூடவே தலை முடியையும்
சரி செய்து கொண்டேன்.

அவர்கள் கலகல
வென்று சிரித்துப
 பேசிக் கொண்டே
என்னை கவனித்தார்கள்.
 என்னருகில் நின்றவர்களும்
வழியில் நின்றவர்களும்
தங்களின் பேச்சின்
ஊடே என்னைப்
பார்ப்பதும் என்
பார்வையை தவிர்க்கும்
விதமாக என் மார்பை
பார்ப்பதுமாய் போக்கு
காட்டி என்னை
அளவெடுத்துக் ரசித்துக்
கொண்டு இருந்தார்கள்.

பட்டுத் தெறித்த
அவர்கள் பார்வையில்
என் முக கவர்ச்சியை
விட என் மார்பக
கவர்ச்சியைத்தான்
அவர்கள் விரும்பகிறார்கள்
என்பது தெரிந்தது.

ஒரு நிலையத்தில்
மெதுவாக சென்ற
ரயில் நின்றபோது
அடைத்துக் கொண்டு
இருந்த கூட்டம்
சிறிது குறைந்தது.

அந்தக் கட்டத்தில்
என்னை ரசிப்பதை
நிறுத்தி விட்டு
கிடைக்கும் இடத்தில்
உட்காரவும் தூங்கவும்
மான வேலையில்
கவனம் செலுத்தினார்கள்

பட்டுத் தெறித்த
பார்வையால் ரசித்தவர்கள்
தூக்கத்தினால் சோர்வடைந்து
விட்டதினால் நானும்
கண் அயர்ந்தேன்.

கண் அயர்ந்த
நேரத்தில் லக்கேஜ்
வைக்கும் இடத்தில்
இருந்து ஒரு
பார்வை ஒன்று
நான் படுத்திருக்கும்
அழகை ரசித்து
கொண்டு இருப்பது
எப்படியோ தெரிந்தது.

அந்தப் பார்வை
எனது பார்வையை
தவிர்க்கும் பொருட்டு
கூலிங் கிளாஸ்
கண்ணாடி அணிந்து
நிதானமாக ரசித்தது.

படுத்தபடியே கண்
விழித்து பார்த்தபோது
அந்த முகத்தை
எங்கேயோ அடிக்கடி
பார்த்தாக நிணைவு
எங்கு என்பது
நிணைவுக்கு வர
மறுக்கிறது...........

கண்களை அகலத்
திறந்து பார்த்தேன்
அந்தப் பார்வை
பட்டுத் தெறிக்கும்
பார்வையாக இல்லை.

எழுந்து அமர்ந்து
சுற்றும் முற்றும்
பார்த்தேன். எல்லாப்
பார்வையும் ஓய்ந்து
தூக்கத்தில் மிதந்து
கொண்டு இருந்தது.

அந்தக் கூலிங் பார்வை
தலையை ஆட்டாமல்
அசையாமல் என்னை
ரசிப்பது தெரிந்தது
நானும் ஆவலுடன்
அந்தக் கூலிங் கிளாஸ்
பார்வையை ரசித்தேன்.

அந்த முகம்
எனது கனவிலோ,
நிணைவிலோ வந்த
தெரிந்த முகமாகவே
எனக்கு தோன்றியது.

அழகு இருந்தும்
படிப்பு இருந்தும்
மாப்பிள்ளை வீட்டாரின்
அதிகப்படியான விலையால்
எனது திருமணமும்
தடை பட்டே வந்தது.

இந்த முகத்தைக்
கண்டவுடன் ஏதோ
இனம் புரியாத
சந்தோசமும் நம்பிக்கையும்
 ஏள்ப்பட்டது என்
ஆசையும் வானில்
சிறகடித்து பறந்தது.

இன் பன்னிய பேண்ட்
முழுக்கை சட்டையுடன்
கூலிங்கிளாஸ் சகிதமாய்
தலை நரைத்தும்
இளைஞனாய் காட்சி
அளித்தார்............

நான் திருமணம்
ஆகாதவள் என்பதை
காட்டுவதற்க்காக கழுத்தை
தடவிக் காட்டினேன்.
காலில் மிஞ்சி
இல்லை என்பதை
காட்டுவதற்க்காக காலை
என் மடியில்
பட்டியலாவை மேல்
துக்கி காட்டினேன்

எல்லாவற்றையும் தலை
ஆட்டாமல் திருப்பாமல்
ரசிப்பது தெரிந்தது.
மேலும் அவர் என்னை
ரசிப்பதற்க ஏதுவாக..
தடையாய் இருந்த
டாப்ஸ்க்கு மேல்
இருந்த துப்பட்டாவை
கழற்றி விட்டேன்.

நானும் பார்த்துக்
கொண்டு இருந்த
போது எந்த சலனமும்
காட்டாமல் பார்த்துக்
கொண்டு இருந்தார்.

என் பார்வையை
தவிர்த்து தங்கள்
பார்வையை என்
மார்புகளுக்கு உள்
ஊடூறுவிச் செல்லும்
பல பார்வைகளை
கண்டு உணர்ந்த
நான்..அவர்
 பார்வையும் ஊடுறுவிச்
செல்வதற்க்கு வசதியாக
அவர் மேலிருந்து
பார்வை செலுத்துவதற்கு
தோதாக டாப்ஸ்சை
தளர்த்தி  சீட்டின்
நுனிக்கு வந்து
குனிந்து உட்கார்ந்தேன்.

பார்த்தற்கு அறிகுறியாக
கன்னத்தையும் உதட்டையும்
கைளால் தடவிக்
கொண்டு இருந்தார்.

இரண்டு மணி
நேரத்தில் இறக்கி
விட வேண்டிய
ரயில் மூன்று
மணி நேரமாகியும்
இறக்கி விடவில்லையே
என்று மற்றவர்கள்
பேசியதை கேட்டபோது
அவர் இறங்க வேண்டியது
அடுத்த நிலையம்தான்
என்பதை தெரிந்து
கொண்டவுடன் ...எனக்கு

கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை,
எப்படி அவருடன்......
செல்வது என்பதும
தெரியவில்லை.....

எல்லாக் கடவுளையும்
வேண்டிக் கொண்டேன்
என்னைக் கண்டு
கொண்ட அந்தப
 பார்வைக்கு சொந்தமான
அவருடன் என்னை
அனுப்பி  வைக்க........

நிலையத்தில் வண்டி
நின்றபோது அவர்
இறங்குவதற்கு தடையாக
 நின்று அவர்
பார்க்கும்படியாக என்
உடைகளை சரி
செய்தேன். வேறு
வழியாக இறங்கிவிட்டார்.

பதறியடித்து அவருக்கு
முன் சென்று நடை
மேடையில் அவர்க்கு
முன் நின்றேன்....

அவர் மற்றவர்களுக்கு
வாழ்த்துச் சொல்லி
விடை பெற்று
கொண்டு இருந்தார்.

கடைசி வாய்ப்பாக
நடை மேடையை
கடந்து வெளி
வாயிலை கடக்கும்
இடத்தில் அவர்
வருகைக்காக நின்ற
போதும் அவர்
நண்பர்களின்
கைகைள பற்றிய
வண்ணம் என்னை
கவனிக்காமல் என்னைக்
கடந்து சென்றார்.

எனக்கு கத்த
வேண்டும் போல்
இருந்தது........

“அட..சண்டாளா..
உனக்கு கண்
அவிந்தா போய்
விட்டது  என்று”

கத்த முடியவில்லை
அதற்குப் பதிலாக
என் கண்களிலிருந்து
தாரை தாரையாக
கண்ணீர் வழிந்தது.



13 கருத்துகள்:

  1. இரயில் பயணங்களில் ஒரு குயிலின் கண்ணீர்க் காவியம்
    த ம 1
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூவத் தெரியாத குயிலின் காவியம் என்றும் சொல்லலாம் நண்பரே...

      நீக்கு
  2. ஓடும் ரயிலில் பயணிக்கும் பெண்ணே என்று சென்ற பதிவில் எச்சரிக்கை செய்தீர்கள் ,இன்று ...பெண்ணே ,ரயிலில் வம்பை விலைக்கு வாங்குவது போல் நடந்து கொள்ளச் செய்திருப்பது ,நியாயமா ?
    பார்வையற்றவர் என்பதால் விபரீதம் தவிர்க்கப் பட்டு விட்டதாகவே தெரிகிறது :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாடி அணிந்திருந்தவர் பார்வையற்றவர் அல்ல..... கண்ணாடிக்குள் தூங்கி கொண்டு இருந்தாராம்... இன்னொன்று.. பல வருடமாக பழகிய காதலே தோல்வியில் முடியும் போது கண்டவுடன் வந்த காதல் ...எப்படி..?????

      நீக்கு
  3. அருமையான வரிகள் நண்பரே மனம் கணத்தது தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. கண்களிலிருந்து நீரை வரவழைத்துவிட்டன கடைசி வரிகள்.
    மிக மிக அழகான பதிவு. அழகின் சிரிப்பை ரசித்தோம், நல்ல கவிதை வரிகளில்.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    பதிலளிநீக்கு
  5. ஏனோ என்னால் இதனை ஏற்க முடியவில்லை. இந்தளவுக்கு ,,,,,,,,,,,
    மனம் கோபத்தில் கொந்தளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. நல்லது... ஆத்திரம் அறிவை மறைக்கும என்று சொல்லக்கேள்வி...நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...