பக்கங்கள்

Saturday, June 20, 2015

தீய சக்திகளின் சதி வீழ்ந்தது...!!!!!!!!!

படம்-tamilsnow.com

 நீதி வென்றது
தலைக் கவசம்
விற்பனை உயர்ந்தது
50 பேர் சென்ற
சாலையில் இன்று
5000 பேர்கள் தலை
கவசம் அணியாமல்
குண்டும் குழியும்
செம பள்ளமும்
இல்லாத  வழவழப்பான
சாலையில் இரு
சக்கர வாகனத்தில்
பகுமானமாக சென்ற
தீய சக்திகளின்
சதி வீழ்ந்தது.

தலைக் கவசதயாரிப்பு
காரனின் பிராத்தனை
பலித்தது சூது கவ்விய
தலை கவசம் சட்டத்தின
மூலம் வென்றது.

தலைக் கவச தயாரிப்பு காரனுக்கும்
காப்பீடு செய்தும் விபத்தில்
இழப்பீடு வழங்காமல் வித்தாரம்
பேசும் காப்பீட்டுக்காரனுக்கும்

சாலையின் நடுவே நின்று
வழி மறித்து 100ம் 200மாய்
வசூலித்த அங்கீகார வழிப்
பறிகாரனுக்கும்  கூடுதலாக
வழிப்பறி செய்வதற்கு
கிடைத்த வெற்றி!!!

வாழ்க! அடிமைகளின் தேசம்!!
வளர்க!!! கொள்ளையர்களின் ராஜ்ஜியம்!!!!

17 comments :

 1. வலிப்போக்கரே, இப்ப என்ன சொல்வருகிறீர்கள், தலைக்கவசம் வேண்டுமா? வேண்டாமா?

  ReplyDelete
  Replies
  1. இருசக்கர வாகன ஓட்டிகள் தவிர..மற்றவர்கள் தலைக் கவசம் வேண்டும் என்கிறார்கள்.

   Delete
 2. உண்மை உண்மை உண்மையே நண்பா...

  ReplyDelete
  Replies
  1. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் மில்லை..நண்பா...

   Delete
 3. ஹ ஹா ஹா ..
  வாழ்க வாழ்க
  தம +

  ReplyDelete
  Replies
  1. ஊரை அடிச்சு உலையில் போடுபவர்கள் வாழ்க!!

   Delete
 4. Replies
  1. எல்லாரும் தங்கள் பக்கம்தான் ரைட்டு என்கிறார்கள்.

   Delete
 5. //சாலையின் நடுவே நின்று
  வழி மறித்து 100ம் 200மாய்
  வசூலித்த அங்கீகார வழிப்
  பறிகாரனுக்கும் கூடுதலாக
  வழிப்பறி செய்வதற்கு
  கிடைத்த வெற்றி!!!//

  அற்புதமான வரிகள்.!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. நடப்பும் மாறாமல் அப்படித்தானே இருக்கிறது …..

   Delete
 6. நாட்டு நடப்பின் அவலத்துக்காகத் தலைக்கவசம் வேண்டாம் எனச் சொல்லி விட முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. பட்டினியாகவோ...நோய் வாய்பட்டோ...சாவு.. ஆனால் தலைகவசம் அணியாமல் சாகாதே என்பது போலத்தான் அய்யா....

   Delete
 7. தலையில் அடிபட்டு இறக்கக்கூடாது ,வேறு எப்படியும் இறக்கட்டும் ,நல்ல நியாயமா இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. அந்த நல்ல நியாயத்தைதான் ஜூலை 1ன்ல அமுலு படுத்தப் போறாங்களாம்.

   Delete
 8. நல்ல சட்டம்! ஆனால் தங்கள் பதிவு இன்றைய , நாளைய நடைமுறையை உணர்த்தும் உண்மைப் பதிவே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com