திங்கள் 29 2015

இரண்டில் ஒன்றைத் தொடு....???

படம்-tamil.filmibeat.com


இடப்பிரச்சிணையில்
விசாரணைக்காக காவல்
நிலையத்தில் காத்திருந்த
போது....................

இந்தியப் பிரஜையும்
தமிழ்நாட்டு குடிமகனுமான
ஒருவர் இரண்டு
விரலை நீட்டி
இரண்டில் ஒன்றைத்
தொடு என்றார்

என்ன என்று
கேள்வி கேட்டபோது
முதலில் தொடு
பிறகு சொல்கிறேன்
என்றார் அவர்.

மறு பேச்சில்லாமல்
இரண்டில் ஒன்றைத்
தொட்டேன் அவர்
முகம் மலர்ந்தார்.

இப்படி நின்ற
நான்கு பேர்களிடம்
இரண்டு விரல்களை
நீட்டி ஒரு விரலைத்
தொடச் சொன்னார்.

அவர்களும் கேள்வி
எதுவும் கேட்காமல
இரண்டில் ஒன்றைத்
தொட்டார்கள் அகம்
மலர்ந்த அந்த
தமிழ்நாட்டு குடிமகன்.
...........

சத்தம் போட்டுச்
சொன்னார் ஆர்.கே
நகர் இடைத் தேர்தலில்
அவருடைய அம்மாமதான்
வெற்றி அடையுமாம்..

12 கருத்துகள்:

  1. வணக்கம் வலிப்போக்கரே,
    அது உண்மைதானே, நான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும் இப்படித்தான் ஒத்தையா? ரெட்டையா பார்த்தேன். எப்படி
    பாஸ் ல்லா
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நீங்க தமிழ்நாட்டு குடிமகனின் இரண்டு விரல்களில் ஏதாவது ஒன்ற தொட்டிருந்தாலும் அவர் முகம் மலர்ந்திருக்கும்,அம்மாமதான் வெற்றி அடைவா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த குடி மகனுக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது போலிருக்கு... அதனால்தான் இரண்டில் ஒன்றைத்தொடு என்றார் என்று தெரிகிறது.

      நீக்கு
  3. ஒத்தையா ரெட்டையா பார்க்காவிட்டால்கூட முடிவு தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தெரியும்..ஆனா..அம்மாவின் குடிமகனுக்கு சந்தேகம் வந்தவிட்டதே...அய்யா....

      நீக்கு
  4. சந்தேகம் என்னும் சரக்கு ,குடிமகனின் மனதிலேயும் இருக்கோ :)

    பதிலளிநீக்கு
  5. ,சந்தேகம் என்னும் சரக்கு ,குடிமகனுக்கு கூடுதலாக இருக்கிறது. தலைவரே....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...