பக்கங்கள்

Tuesday, June 30, 2015

முடிந்தவரை நடை ராஜா...முடியவிட்டால் சேர் ஆட்டோ....!!!!!!

படம்-www.tamilpaper.net
 

எண்ணப்பா...வீரா   ! ஹெல்.மெட் வாங்கிவிட்டாயா... அவகாசம் இன்று முடிவடைகிறதப்பா...என்று   ஏரியா..அண்ணன் . கேட்க...

“இவிங்க நிணச்சு நிணச்சு சொல்லுவாங்கேன்னுதாண்ணே..வண்டி வாங்கும்போதே ஹெல்மெட்டையும் சேர்த்து வாங்கிட்டேண்ணே...அத இனி பயன்படுத்திக்க வேண்டியதுதாண்ணே..” பதிலுரைத்தான்.

“ நீ...தப்பிச்சிட்டேடா” என்றார் அண்ணன்..

அடுத்தவரை கேட்டபோது , அவர் சொன்னார்.

“ காசு கையில இல்லாததால மாசக் கடைசியில வாங்கலாம்னு போயி விலய கேட்டா”...650 ரூபாய்க்கு வித்தத...2500ரூபான்னு சொன்னாங்கண்ணே... அதனால வாங்கம வந்திட்டேண்ணே...”

“ நீ தப்பாம..தண்டம் கட்டியே ஆவணும்டா” என்றார் அண்ணன்.

 எக்ஸல் ஹெவ்வி டூட்டியில போயி  கடை கடைக்கு சரக்கு போடும் ஈஸ்வரனை கேட்டபோது....... தன் கோபத்தை பழைய  பாடலை தனக்கேற்றார்போல் வார்த்தைகளை சேர்த்து பாடலாகவே பாடி விட்டார்.

கடவுள் மனிதனாக
பிறக்க வேண்டும்
அவன் தன் தலையில்
 ஹெல்மெட்டை அணிந்து
 டூ வீலர் ஓட்ட
வேண்டும் ரோடென்றால்
என்னவென்று புரிய
வேண்டும், பாவி
அவன் அந்த
வேதனையை பட
வேண்டும்......”

அண்ணனைத் தவிர அந்தப் பாடலைக் கேட்டு சிரித்தார்கள்.

அண்ணன் சொன்னார்.  சத்தியமா கடவுள் மனிதனாக பிறக்க மாட்டாருப்பா..... உன் பாடல்படி ஹெல்மெட் எல்லாம் அணிந்து ஓட்டமாட்டாருப்பா..... அவரு ரேஞ்சே தனிப்பா.....


எல்லோரையும் கேட்ட , அந்த அண்ணனைப் பார்த்து வண்டியே இல்லாத ஒருத்தன் கேட்டான். அண்ணே..நீங்க.. ஹெல்மெட்” டு வாங்கிட்டீங்களா....???

நீ இப்படி கேட்பேன்னு எனக்கு தெரியுமடா.... என்ற அண்ணன் பாட்டாலே பதில் சொன்னார்.

“சட்ட திட்டம் எதுவும்
எனக்கு சரியில்ல- இந்த
சண்டாளப் பய நாட்டுலே
நான் டூ வீலர் ஓட்ட
வழியில்ல.......
சட்ட திட்டம் எதுவும்
 எனக்கு சரியில்ல...”

-பெட்ரோலும் நாளுக்கு நாளு ஏறுது... தண்டமும் கூடுது.-அதனால நான் வாங்கிய டூவிலர வித்துட்டேன்..டா..... ”முடிந்த வரைக்கும் நடை ராஜா.. ” முடியாவிட்டால் சேர் ஆட்டோ” டா.. அதுவும் முடியவிட்டால் அரசு போக்கவரத்து 50 ரூபா பயணச்சீட்டுடா என்று சொன்ன அண்ணன் ஒரு கருத்தையும் சொன்னார்.


படம்-www.yarl.com

படம்-www.vinavu.com


கஞ்சா இழுத்தவன், தண்ணி அடித்தவன்கள் ,எப்படி அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவனாக இருக்கிறானோ.அதேபோல..டூ வீலர் ஓட்டி பழகியவனும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது.. அதுபோல வழிபறி தண்டம் வசூலிப்பவனும் விடமுடியாது..தண்டம் அழகாமல் தப்பித்து விடவும் முடியாது. ஆகு தண்டம் அழுக விரும்பாதவர்கள் எல்லாம் வாய் பொத்தி மெய் வருத்தி, தண்டத்தை(ஹெல்மெட்)தலையில் மாட்டித்தான் அவதிப்படனும் என்றார்.
12 comments :

 1. Replies
  1. ஹெல் மெட் போட்டு டூ வீலர் ஓட்டுவதுதான் சிரமம் தலைவரே...

   Delete
 2. உயிரைக்காக்க இவ்வளவு பிராயசைப்படும் நீதித்”துரை”கள்
  நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடுவிளைவிப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்ற கேள்வி என்னைப் போன்ற சாதாரண ”குடி” மகனுக்கு எழுகிறது.

  நல்ல பதிவு

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மகன் செத்தாலும் பரவாயில்லை.மருமகள் தாலி அறுக்கனும் என்பது மாதிரிதான் நிதித்துறையும் அரசும்..

   Delete
 3. ஹெல்மெட் தண்டமா? என்னப்பா இது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே..... வாகன் உற்பத்தியை குறைப்பது, வேகக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது,நல்ல போக்குவரத்து சாலைகளை ஏற்படுத்தி பராமரிப்பது. பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவது.... இதைப்போன்ற பலவற்றை செய்யச் சொல்லாமல் .... ஹெல்மெட் மாட்டச் சொல்வது தண்டமில்லாமல் வேறு என்னவென்று சொல்வது....

   Delete
 4. நடப்பது நீதியின் ஆட்சியாய் இருந்தால் பரவாயில்லை ,ஒரு நீதிபதியின் ஆட்சி போலிருக்கே :)

  ReplyDelete
 5. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலையை பேருக்கு மட்டும் வைத்துக்கொண்டு...நிதிபதிகள் ஆட்சி செய்தால் இப்படித்தான் எல்லாம் நடக்கும்.

  ReplyDelete
 6. // நல்ல போக்குவரத்து சாலைகளை ஏற்படுத்தி பராமரிப்பது. பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவது.... இதைப்போன்ற பலவற்றை செய்யச் சொல்லாமல்....//
  நண்பர் இந்திய குடிமக்கள் ஜன தொகையை பெருக்கி தள்ளும் பயங்கர வேகத்திற்கு எந்த ஒரு நல்ல அரசாக இருந்தால் கூட அதனால் இந்த வசதிகளை ஓரளவுக்கு மட்டுமே ஏற்படுத்தி கொடுக்க முடியும். மற்ற நாடுகள் மாதிரி சிறப்பாக செய்து கொடுக்க முடியாது.பொதுப் போக்குவரத்து ரயில்வே ஸ்டேஷன்களில் ஜன நெருக்கடியால் மூச்சே திணறுகிறது. ஒன்பது மாதத்திற்கு ஒரு வருடத்திற்கு பின் வரும் போதே இந்த வேறுபாட்டை உணர முடிகிறது.

  ReplyDelete
 7. ஏன் ? முடியாது.... முடியும் நண்பரே...உண்மையான மக்களுக்கான அரசால் முடியும்...முடியாதது எதுவுமில்லை... பல சம்பவங்களை. நடப்புகளை.ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே போகாலாம்..

  ReplyDelete
 8. இந்த சட்டத்தின் மீது சிலர் ரொம்பவும் அக்கறை காட்டுவதைப் பார்க்கும் போது, ”ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்” என்ற கதைதான் நினைவுக்கு வந்தது.

  சிறப்பான பதிவு. நன்றாகவே சொன்னீர்கள்.

  த.ம.5

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!