வியாழன் 25 2015

முதலில் நீங்கள் திருந்துங்கள்...!!!!



Dr.சிவராமன் அவர்களின் பேச்சின்
சுருக்கம்:-


1-- மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட், பிரட், புரோட்டா சத்து இல்லை, என்பதால் அல்ல; அதில் விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்

அழிவை காண்பீர்கள்; விழித்து கொள்ளுங்கள் .


2-- சாக்லெட் வேண்டாம்; வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3-- pizza,burgers தவிர்க்கவும்


4-- கோதுமை அரைத்து பயன்படுத்துங்கள்; கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது


5-- பழங்கள்  கொய்யா, வாழை, விதை உள்ள திராட்சை, Melons அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்


6-- corn flakes, oats வேண்டாம்; கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்


7- சீனி  வேண்டாம்; தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கல்கண்டு பயன்படுத்தவும்


8-- black tea without sugar good. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.


9-- இனி யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்;  கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்


இது என்னுடைய வேண்டுகோள். நாம் தான் முதலில் திருந்தவேண்டும். பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளுவோர், விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.


 பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு, பணம் அல்ல;ஆரோக்கியமும்  குணமுமே. உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு. Hyper activity because of this types of food also; 

அனைவருக்கும், இவை அனைத்தும் தெரிந்த விஷயம்தான்; இனியும் நீங்கள் தூங்ககூடாது', பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருப்போர் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வையுங்கள்,; வாழவேண்டும், ஆரோக்கியத்துடன்.அனைவரும் வாழ வையுங்கள்...

12 கருத்துகள்:

  1. #உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு#
    இந்த விஷயத்திலாவது அவாளுக்கும் உங்களுக்கும் பொருத்தம் இருக்கே :)

    பதிலளிநீக்கு
  2. ஆரோக்கிய தகவல்கள். சீனி வேண்டாம் என்கிறார் தேன், வெல்லம்,கருப்பட்டி, பனங்கல்கண்டு சாப்பிட சொல்கிறார். அவற்றில் உள்ளது சீனி இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனியை வெள்ளையாக ஆக்கு வதற்க்காக கெமிக்கல் கலக்கப்படகிறதாம்...திரு. வேகநரி அவர்களே!!

      நீக்கு
  3. நூலைப் போல சேலை...

    எல்லாவற்றிலும் நம்மை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது 100% சரி...

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள ஆலோசனை! கேட்க வேண்டுமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.அய்யா.....காது உள்ளவர்களை செவிடர்களாக ஆக்கிவிட்டார்கள்.

      நீக்கு
  5. வணக்கம் வலிப்போக்கரே,
    தாங்கள் சொன்னது போல் இனி கடலைமிட்டாய், எள் மிட்டாய் தான்,
    தாங்கள் இவைகளுக்கு ஏதும் விளம்பரதாரர் இல்லையே,
    சும்மா,
    நாம் நல்லதை சொன்னால் அடுத்த பதில் இது தானே,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பதாராக இருப்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது. அப்படியான தகுதிகள் எம்மிடம் எதுவுமில்லை... என்பதே உண்மை...

      நீக்கு
  6. பாரம்பரியத்திற்கொரு பயணம்.. அதுவே நல்லதென்று..!!

    அருமையான தகவல்கள் வலிப்போக்கரே!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...