புதன் 22 2015

மருமகனுக்கு ஊத்திக்கொடுத்த தாய்மாமனுக்கு இபிகோ 307


படம்-வினவு


“கலசப்பாக்கம் அருகே 4 வயது சிறுவனுக்கு மது கொடுத்த தாய்மாமன் பிடிபட்டவுடன் . தாய்மாமன் மீது இபிகோ 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு.” – இது  நாளிதழ் செய்தி.
மக்களின் நண்பர்கள் உடனே  சிந்தித்து. சின்னப் பையனுக்கு சரக்கு கொடுத்தால் அதற்கு இன்ன செக்சன் என்று,  உடனே அறிவித்துவிட்டார்கள் 

இந்தியன் பீனல் கோடைத் தயார் செய்த வெள்ளைக்காரன் எழுத மறந்தவிட்டாலும் அவர்கள் வழி ஆளும்.  அரசியல் சட்ட பிதாமகர்களின் தொலைநோக்குப் பார்வையில்  பட்டுவிட்டது 
பால்மணம் மாறாச் சிறுவனுக்கு சரக்கு ஊற்றிக் கொடுப்பது, அவனைக் கொலை செய்யும் முயற்சிதான் என்று கண்டுபிடித்து ,  வழக்கும் பதிவு செய்த போலீசு.
மருமகனுக்கு ஊத்திக்கொடுத்த தாய்மாமனுக்கு 307  போட்டு சிறையில் அடைத்தது., சட்டம் அனைவருக்கும் சமம் மூச்சுக்கு முன்னூறு தடவை ஓதும் வல்லுனர்கள்.
மக்களுக்கெல்லாம் மது ஊத்திக் கொடுக்கும் மம்மி மீது என்ன செக்சன் போடுவார்கள்? என்ன தண்டனை விதித்து தீர்ப்பெழுதுவார்கள்?....அந்த வழக்கை எத்தனை ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பார்கள்.????.

தெரிஞ்சவுங்க சொன்னா...வருகிற தேர்தல்ல  ஓட்டு கேட்பவர்களுக்கும் அறிக்கை விடுபவர்களுக்கும்   பரப்புரை செய்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.. எதோ உங்கலால முடிந்த உதவியாக இருக்கட்டுமே.....!!!!!

8 கருத்துகள்:

  1. எந்த சட்டத்தில வழக்கு போட்டாலும் 20% கம்மி தான்னு கொமாரசாமி சொல்லுவாரே பரவயில்லையா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா..கொமாராசாமியை மறந்துட்டனே...அவுரு நாலு மூனு ஏழு க்கு பதிலாக.. எட்டுன்னு சொல்லி அகில உலகமாச்செ......

      நீக்கு
  2. பதவியிலிருந்து தூக்கி விட வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறதோ பல பதவி.... அதுல ஒன்னு போனா.... ..போகட்டும்.....!!!

      நீக்கு
  3. நல்ல வேளை முறை பொண்ணு தப்பிச்சது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பிச்சு இருக்காது.... வேற வழியில கமுக்கமா... அமிக்கி இருப்பாங்க......

      நீக்கு
  4. மக்களுக்கெல்லாம் மது ஊத்திக் கொடுக்கும் மம்மி மீது என்ன செக்சன் போடுவார்கள்? என்ன தண்டனை விதித்து தீர்ப்பெழுதுவார்கள்?....அந்த வழக்கை எத்தனை ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பார்கள்.????./ ரொம்பவே சரியா சொல்லிட்டீங்கப்பா...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...