பக்கங்கள்

Wednesday, July 01, 2015

அம்மான்னு அழைக்காத ஓர் உயிரினம்.....

படம்- நக்கீரன்சக்சஸ் ......சக்சஸ் .. சக்சஸ்
வெற்றி..வெற்றி..வெற்றி
மகத்தான வெற்றி  வெற்றி
.................
டம்....டம்....டமார்...
அதிர்வேட்டு முழங்கியது
நின்றவன் போனவன்
திரும்பி வந்தவன்
அனைவருக்கும் லட்டு
கொடுத்து ஆட்டம்
பாட்டத்துடன் தங்கள்
மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்கள்..
அம்மாவென்று அழைத்த
உயிரினங்கள்................

வெடித்த வேட்டு
சத்தத்தில் ஒர்
உயிரினம் மட்டும்
உதிர்ந்து கிடந்த
லட்டுகளை முகர்வதை
நிறுத்தி விட்டு
அம்மா என்று
அழைக்காமல் ..லொள்
லொள் என்று அழைத்தது..
...........

10 comments :

 1. வணக்கம் வலிப்போக்கரே,
  அதன் மொழியில் வாழ்த்துப்போல,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் இருக்கலாம்....!!!!!

   Delete
 2. ஆள் இல்லா கடையில் டீ ஆத்தினது ,நாய்க்கும் தெரிந்து இருக்குமோ :)

  ReplyDelete
  Replies
  1. தெரிந்துதானே குலைக்கிறது

   Delete
 3. இனி அவைகளுக்கும் பயிற்சி கொடுக்கப்படுமோ...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்க்கலாம்.....

   Delete
 4. அதுவும் ஒரு வாழ்த்தே என வைத்துக்கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் வைத்துக் கொள்ளலாம்..

   Delete
 5. இது வஞ்ச புகழ்ச்சியா..??!!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது..

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com