திங்கள் 27 2015

கதவை அடை கழிவு நீர் வராது...!!


படம்-mathimaran.wordpress.com


மதிய வேளை வெயில் மண்டையை வெளுத்து வாங்கிக் கொண்டு . இருந்தது. டீக்கடை அருகில் வந்தபோது எனக்கு தெரிந்தவர் நின்றதால் அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நகர முயன்றபோது....

அண்ணே..இங்க வாங்கண்ணே... என்றார் பக்கத்தில் ஒருவர்.. என்னவென்று தெரிந்தவரை பார்த்தேன். தெரியவில்லை என்றார் பார்வையில்

அழைத்தவரின் அருகில் சென்றேன்... அவர் அன்றைய செய்தித் தாளினை நீட்டி கதவை அடைத்தால் கழிவு நீர் வராதாம் எப்படி..இதைப்படித்துச் சொல்லுங்கள் என்றார்.

நீட்டிய செய்தித்தாளை வாங்கிய நான்... அவர் மப்பில் இருக்கிரா (போதையில்)... என்று கவனித்தேன். இல்லை என்று  தெரிந்ததும்....செய்தித்தாளை படித்தேன்.

“கதவை திற காற்று வரட்டும் ” ஒலகப் புகழ் பெற்ற நித்தியானந்தாவின் வீர முழக்கத்தைப்போல் இருந்தது. “கதவை அடை..கழிவு நீர் ” என்ற வாசகம்

விபரம் இதுதான். நகரத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சீலர்கள் தங்கள் வார்டுகளுக்கு என்னென்ன நண்மைகள் செய்தார்கள் என்று பட்டியலிட்டு ,அந்தந்த வார்டுகளில் உள்ள நிலமைகளை ஒவ்வொரு செய்தி நாளேடுகளும், “ தங்களின் பத்திரிகா தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்” அப்பகுதி மக்களின் குமுறல்களை வெளியிட்டு தங்களின் பத்தரிகையின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் இப்படியான செய்திகளை ஒரு பக்கமோ, அரைபக்கமோ வெளியிட்டு வருகின்றன.

அப்படி வந்த ஒரு நாளேட்டில் “மக்களின் வாய்ஸ்”யைப்பற்றி படித்த ஒருவர்தான். என்னை அழைத்து “கதவை அடை கழிவு நீர்” என்று சொல்லி கேட்டது.

நாளேட்டில் செய்தியாக வந்த வார்டில், தெருக்களில் கழிவு நீர் தேங்கி விடுகிறது. அதனால் வீட்டின் கதவை திறக்க முடியவில்லை.. கதவை திறந்தால் தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது..

மக்கள் சேவையில் 24 நேரமும் செலவழிப்பதால்.தேங்கிய கழிவு நீரை அப்புறப்படுத்த நேரம் கிடைக்க வில்லை மக்கள் பிரதிநிதிகளுக்கு.  அதனால் தேங்கிய கழிவு நீர் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்க்கான  ஒரு வழிதான் “கதவை அடை. கழிவு நீர்” வராது  என்பது.

அதைப்படித்த..இருவரில் ஒருவர். அதெப்படி கதவை அடைத்தால் கழிவு நீர் வீட்டிற்குள் வராமல் இருக்குமா..?என்ற வாதங்களில் முடிவு எட்டாத நிலையில்தான். எண்ணைப் கூப்பிட்டு... .

கதவை அடைத்தால் கழிவு நீர் வரதாம் எப்படி? என்று கேட்டார்.

இதை படித்த நீங்கள் சொல்லுங்கள். ரோட்டில் தேங்கியுள்ள கழிவு நீர். கதவை அடைத்தால் வீட்டிற்குள் வருமா.???? வராதா....???? 

“ கதவைத் திறந்தால் காற்று வரும்” என்று ஒலகப் புகழ் நித்தியானந்தா கண்டுபிடித்திருப்பதையும்  கவனத்தில்  கொள்க......!!!!!

14 கருத்துகள்:

  1. கண்னீர் தவிர்த்து என்று எடுத்துக் கொள்ளலாமா...? அய்யா...

    பதிலளிநீக்கு
  2. கழிவு நீரை ஒழுக விடாத கதவு எங்கே கிடைக்கும் ?விலாசம் கொடுங்க :)

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இந்தக் கொடுமை வீடு தேடி வீட்டுக்குள் வருகிறது

      நீக்கு
  4. அட! ஆமாம்! அதெப்படி வராது?! கதவை அடைச்சாலும் (அடைச்சேதான்...திரந்து வச்சுருந்தா திடுடன் புகுந்துட்டான்னா!!!) நம்ம டீவி, பேப்பர் வழியாக சாக்கடையைவிடக் கேவலமான கழிவு நீர் வீட்டுக்குள்ளே வருதே!...அதான் மேல போட்ட படமே சொல்லுதே!!! ..

    மக்கள் சேவையில் 24 நேரமும் செலவழிப்பதால்.தேங்கிய கழிவு நீரை அப்புறப்படுத்த நேரம் கிடைக்க வில்லை மக்கள் பிரதிநிதிகளுக்கு. அதனால் தேங்கிய கழிவு நீர் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்க்கான ஒரு வழிதான் “கதவை அடை. கழிவு நீர்” வராது என்பது.// சரி அப்ப எல்லாத்துக்கும் சேத்து ஒரு பூட்டு போட்டுட்டா நல்லது நடக்கும் இல்லையா நண்பரே!
    பதிவு இரு அர்த்தம் கொண்டது என்பது நாங்கள் புரிந்து கொண்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் புரிந்து கொண்டபடி இரு அர்ததங்கள் கொண்டதுதான் அய்யா...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...