பக்கங்கள்

Wednesday, July 15, 2015

மெல்லிசை மன்னர் திரு.எம்எஸ்வின் அஞ்சலிக்காக......
MS Viswanathan passes away
படம்-ஒன்இந்தியா
என்னையும் முனுமுனுக்க வைத்தவர்க்காக......
வந்த நாள் முதல் இந்த நாள் வரை  வானம் மாறவில்லை  வான் மதியும் நீரும் கடல் காற்றும்  மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)  நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்  நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்  ஜாதியும் பேதமும் கூறுவார் - அது  வேதன் விதியென்றோதுவார்  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  (வந்த நாள்)  பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)  பாயும் மீன்களில் படகினைக்கண்டான்  எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்  எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  (வந்த நாள்)  இன்பமும் காதலும் இயற்கையின் நீதி  ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி  பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  ம் ஹ்ம் ம் ஹ்ம் 

நன்றி!baskar paramasivam 

12 comments :

 1. உங்களையும் முனுமுணுக்க வைச்சிட்டாரா! இசை ஒரு கிரேட்.
  பெரியவருக்கு அஞ்சலி.

  ReplyDelete
  Replies
  1. பாடலுக்கும் எனக்கும் வெகு தூரம்..அப்படியான என்னையும் யாருக்கும் தெரியாம முனுமுணுக்க வைத்தவரல்லவா...!!!

   Delete
 2. என்னே பாடல்...! தென்றல் போல் இசை...

  ReplyDelete
  Replies
  1. தென்றல் போல இசையை அனுபவித்ததை மற்றவர்களுக்கு பகிரும் , தங்களுக்குத்தான் அதன் மகிமை தெரியும்.

   Delete
 3. வணக்கம்,
  ஆழ்ந்த இரங்கல்,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆழ்ந்த இரங்கலுக்கு நன்றி!

   Delete
 4. வலிப்போக்கரே,

  பாடல்கள் பிடிக்காதோ?

  ReplyDelete
  Replies
  1. பாடல்கள் பிடிக்கும் ராகம்போட்டு பாடத் தெரியாது. மேலும் அன்றைய நிலைமையில் பாடல் கேட்பதற்குகூட எனக்கு வழியில்லாமல் வாய்ப்பில்லாமல் இருந்தது

   Delete
 5. இசை மன்னருக்கு நல்ல புகழஞ்சலி.

  ReplyDelete
 6. அருமையான பாடல்...மதத்தில் ஏறிவிட்டான் ம்ம்ம் உண்மைதானே மக்கள் அப்படித்தானே...

  மன்னரின் இசை இசைதான்! மன்னர் மன்னர்தான் முடிசூடா மன்னர்!

  ReplyDelete
  Replies
  1. பாட தெரியாத என்னையும் சும்மவாச்சும் முனு முனுக்க வச்சுபிட்டாருங்கய்யா...அதுக்கு தான் அஞ்சலி அய்யா....

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!