ஞாயிறு 19 2015

ஒரு ஞான சூன்யத்தின் கேள்விக்கு என்ன பதில்????


படம்-tamilsnow.com

அறிவார்ந்த பெரிய்ய்ய யோர்களோ!

அஞ்சு வருடத்திற்கு ஒரு முறை ஒட்டு போடுவதையே மகத்தான ஜனநாயகம் என்று பீத்தீக் கொள்ளும் வெறும் பீத்தர்களே  !!!

இந்த ஞான சூன்யத்தின்  கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன???

*  தெருவுக்கு தெரு சாராயக்கடையை திறந்து வைத்து   குடியை கெடுத்துக் கொண்டு இருப்பதையும், அந்தக் குடியால் ஏற்படும் விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளையும் கண் கூடாக தெரிந்திருந்தும்.. “உயிரைக் காக்க ஹெல்மெட் அணியுங்கள்” என்று அறிவார்ந்த ஞானபிரகாசங்கள் சொல்வதற்கு  அருகதை உண்டா???

* குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடாமல், குடிததுவிட்டு வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்றாலும் சாலை விபத்துகளை, உயிர்பலிகளை தடுக்க முடியுமா?? ?


*  குண்டும் குழியுமான சாலையை  செப்பனிடாமல், ஹெல்மெட் அணிந்து கொண்டால் விபத்துகளை குறைக்க முடியுமா..???


*  கட்டாய ஹெல்மெட் என்பது உயிரை காக்க என்ற பெயரில் போலீஸ கல்லாவை நிரப்பவா???


*குடி கெடுக்கும்  டாஸ்மாக்கை மூடுவதற்கு வக்கில்லாத போது.,ஹெல்மெட்  எப்படி உயிர் கவசமாகும்..????




18 கருத்துகள்:

  1. தலைக்கு ஹெல்மெட் அவசியம் என்றாலும்,
    வாய்க்கு ஹெல்மெட் அதைவிட அவசியம் அல்லவா?
    வாயின் வழியே செல்லும் மதுவுக்கு ஹெல்மெட் முதலில் அவசியம்! தோழரே!
    நல்ல சவுக்கடி பதிவு!
    த ம 2

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாயக்கு ஹெல்மெட் போட்டுவிட்டால் தலைக்குஹெல்மெட் தேவையே இருக்காது நண்பரே...

      நீக்கு
  2. வணக்கம் வலிப்போக்கரே,
    ஆம் உண்மைதான் டாஸ்மார்க் இருக்கும் போது, இது என்ன பெரிசா காக்க போகுது,,,,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தோழரே...

    கேள்விகளிலேயே பதிலையும் கொடுத்துவிட்டீரே...

    டாஸ்மார்க் கல்லா கமிஷன் போதாமல் போனதால்தானே ஹெல்மெட்டும் காசு கரக்க தானே !

    மதுவில் தொடங்கி சாலைவிதிகள்வரை அனைத்தும் சீர்கெட்ட தேசத்தில்... ஹெல்மெட்...

    " ஒய்யார கொண்டையில் தாழம்பூவாம்... உள்ளே இருப்பது ஈரும் பேனாம் !!! "

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " ஒய்யார கொண்டையில் தாழம்பூவாம்... உள்ளே இருப்பது ஈரும் பேனாம் !!! ---அந்த கூத்துதான் நடந்து கொண்டு இருக்கிறது நண்பரே.... வருகைக்கு நன்றி!!

      நீக்கு
  4. கேள்விகள் நன்று! கேட்பவர் அன்று!

    பதிலளிநீக்கு
  5. கஜானா நிரம்பினால் பரவாயில்லை ,பலரது பைகள் அல்லவே இதனால் நிர ம்புகின்றன :)

    பதிலளிநீக்கு
  6. அதானே! சூப்பர் கேள்விகள்...எங்கள் பதிவிலும் இதைத்தான் கேட்டோம்....ம்ம் என்ன ஒரே குடி பதிவா இருக்கு ஹஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடே குடிகார நாடாக இருக்கும்போது பதிவும் குடி பதிவா இருக்குதுங்கய்யா.....

      நீக்கு
  7. ஞானிகள்தான் பதில் சொல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானிகள் மௌன விரதம் முடியவில்லை என்றார்கள் அய்யா....

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...