பக்கங்கள்

Monday, July 06, 2015

அன்றும் இன்றும்..சாதி..

படம்-periyarpinju.comஅன்று:-

வடக்கே இருந்த ஒருவர்
தெற்கே இருந்த ஒருவர்
இந்த இருவர் இணைந்து
இடைவிடாது உழைத்தினால்
சாதி என்னும் பாறை
உடைந்து சுக்கு நூறாகியது.இன்று:-


அன்று சுக்கு நூறாக
உடைந்த துகள்கள் எல்லாம்
ஒன்றிணைந்து மீண்டும் சாதி
என்னும் பாறையை கட்டி
எழுப்புகிறது வெறி கொண்டு......

19 comments :

 1. அன்று
  உடைந்து சுக்கு நூறாகிய
  சாதி என்னும் பாறை
  இன்று
  ஒன்றிணைந்து மீண்டும்
  சாதி என்னும் பாறையாக
  தலையைக் காட்டுகிறதா?

  ReplyDelete
  Replies
  1. தலையை காட்டுவதோடு நில்லாமல் தலையையும் தனியாக வெட்டுகிறது அய்யா...

   Delete
 2. Replies
  1. நல்லவர்களுக்கு வேதனை... சாதி வெறியர்களுக்கு சாதனை...

   Delete
 3. வலிப்போக்கரே
  இது என்றும் மாறாது,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. உயிர்கள் பிறந்து வளர்ந்து சாவது போல.... சாதியும் சாதி வெறியும் ஒருநாள் சாவதும் நடக்காமலா போகும்...???

   Delete
 4. இது கான்ஸரைவிட கொடுமையான நோயக நாட்டில் பரவியுள்ளது.ஆப்பிரேஷன் செய்தோ, ரேடியேஷன் தெரபி கதிர் வீச்சு சிகிச்சை செய்தோ அகற்ற முடியாமல் உள்ளது. இதுவரை செய்துவந்த மாதிரி ஒரு ஜாதிகாரனை மட்டும் ஜாதி சொல்லி பார்ப்பான் என்று போட்டு தாக்குவதால் பயனில்லை.

  ReplyDelete
  Replies
  1. சாதிக்கு சாதி வெறிக்கு ஊற்றுகண்ணும் மூல காரணமே நாலு வர்ணத்தை கடைபிடிக்கும் பார்ப்பனீயதானே...அந்த நாலு வர்ண்த்தை தூக்கி பிடிக்கிற பார்ப்பானை அம்பலபடுத்தாமல்்்தாங்கள் சொல்கிற..ஆப்பிரேஷன் செய்தோ, ரேடியேஷன் தெரபி கதிர் வீச்சு சிகிச்சை செய்தோ அகற்ற முடியாதுங்களே..

   Delete
  2. எல்லா பழியையும் பிராமணர் மீதே போட்டுக் கொண்டிருந்தால் எப்படி? இராமதாஸ், அன்புமணி - இவர்கள் பிராமணர்களா?

   Delete
 5. Replies
  1. சாதிவெறியும் சுய நலமும் நிறைந்த பொழப்பு வாத அரசியல்தான் காரணம் அய்யா...

   Delete
 6. இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரையில் தேர்வு செய்யப் பட்ட அனைவரும் பிராமணர்கள் மட்டுமே ,வேறு சாதிக்காரன் எவனுக்கும் கிரிக்கெட்டே தெரியாதா ?ஒரு பானை சோற்றுக்கு இது ஒரு பதம்தான் :)

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் தலையில் பிறந்தவர்கள் ஆச்சே...அவர்களுக்குத்தான் எல்லாமும் ஏனென்றால் அவர்கள் பிராமணர்கள

   Delete
  2. எல்லா பழியையும் பிராமணர் மீதே போட்டுக் கொண்டிருந்தால் எப்படி? இராமதாஸ், அன்புமணி - இவர்கள் பிராமணர்களா?

   Delete
  3. சாதிக்கு மூலகாரணம் பிராமணர் அல்ல அய்ய.. பார்ப்பினீயம் என்ற சித்தாந்தம்(மதம்) அய்யா..அதைத்தான் ராமதாஸ் வகையறாக்கள் துர்க்கிக் கொண்டு வருகிறார்கள்.

   Delete
 7. வரிகள் அருமை ஆனால் வேதனை....அரசன் எவ்வழி அவ்வழி தானே மக்கள்...அதான் அவங்க எப்ப இத நிறுத்தறாங்களோ அப்போ மக்களும் திருந்துவாங்க...

  ReplyDelete
 8. அரசன் மக்களுக்காக இல்லை என்றால்..அரசனை தூக்கி எறியும் மக்கள் அதிகாரம்தான் இதற்கு தீர்வாகும். அய்யா....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com