பக்கங்கள்

Wednesday, July 08, 2015

நாங்க யாரு தெரியுமா...???

 


அரசு போக்குவரத்து பஸ் ஒன்று வளைவாக உள்ள ரோட்டின் திருப்பத்தில் சென்று திரும்பியது. பஸ் மெதுவாக சென்றதை பயன்படுத்தி மூன்று பேர்கள் ஓடும் பேருந்தில் ஏறினார்கள்.ஒருவன் சற்று தடித்தவன். அடுத்தவன் ரெண்டு கெட்டனாக இருந்தான். இன்னொருவன் ஒல்லியனாக இருந்தான்.

காலியாக இருந்த இருக்கையில் அம்ந்த சிறிய இடைவெளிக்குப்பின் பஸ்ஸின் பயணசீட்டு கொடுப்பவர். அவர்கள் அருகில் சென்று பயணசீட்டு எடுக்க பணம் கேட்டார்.

அதில் ஒருவன் கவனிக்காமல் இருப்பது போல் நடித்தான். கண்ட்க்டர் திரும்பவும் வலியுறுதிக் கேட்டார்... கோபம் கொண்ட அவர்கள்..
ஏய்....? என்னா??  எங்ககிட்டயா..டிக்கெட் கேக்குற..... நாங்க யாரு தெரியுமா...? பெரிய ரவுடிக.....??? போ....போ.... என்று சவுண்டு விட்டனர்.
பஸ்ஸில் கூட்டமும் குறைவாக இருந்த்து.

அவர்கள் எச்சரிக்கையை கேட்ட சில வினாடிகளில் கண்ட்க்டரும்...“ ஏய்..... என்னா.....? நான் யாரு தெரியுமா...? டிக்கெட் எடுக்கலைன்னா.....உங்களை பஸ்ஸ விட்டு , இறக்கி விட்டுறுவேன்... தெரியும்ல.....என்றார்.

டேய், இவன் நமக்கு போட்டியா.... வர்ரான்டா? என்று கோபமடைந்த  மூவரும். தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயதமான கத்தியை எடுத்து கண்ட்டகடரை குத்தினர்.


பதிலுக்கு சவுண்டு விட்ட கண்ட்க்டர் கவனமாக இல்லாமல் இருந்த்தால்.அவ்ர்களின் கத்தி குத்தால் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்க... நாங்க பெரிய ரவுடிங்க என்று நிருபித்த அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு..ஓய்வு எடுத்து வருகின்றனர்.

14 comments :

 1. வணக்கம்,
  இது நல்லா இருக்கே,

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்கே என்று சொன்னதற்கு நன்றி!

   Delete
 2. இது போன்ற நிகழ்வுகள் நடைமுறையாகி விட்டன

  ReplyDelete
  Replies
  1. இவைகள் நடைமுறையாகி விட்டன என்று தெரிவித்தற்கு நன்றி!!

   Delete
 3. Replies
  1. அடப்பாவிகளா!! என்று யாரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக சொன்னதற்கு நன்றி!!!

   Delete
 4. ஏதும் எனக்குப் புரியவில்லை !

  ReplyDelete
  Replies
  1. ஏதும் புரியவில்லை என்று உண்மையை சொன்னதற்கும் நன்றி!!!

   Delete
 5. இதெல்லாம் இங்கு சகஜமப்பா..கதை என்று நீங்கள் லேபல் கொடுத்திருந்தாலும் ...உண்மையாவும் நடக்குதே இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. உண்மையைத்தான் கதை வடிவில் சொல்கிறேன்..நம்நாடு கதை கேட்பதில் மு்ன்னணியில் இருப்பதால்

   Delete
 6. வருங்கால அரசியல் வாதிகள் அய்யா, அரசியல் வாதிகள்
  நாமெல்லாம் குளிர்ந்த நீரில் குளிக்கு முன்பு குளிரை குறைத்துக்கொள்ள, கை காலை கழுவுவது இல்லையா?. இவுங்க அடுத்த கட்ட டிரைனிங் போயிருக்கிறார்கள் !!!!!!!!!!

  ReplyDelete
 7. நன்றாக சொன்னீர்கள் அய்யா..இன்றைய ரவுடிகள்... நாளைய அரசியல் வாதிகள்... எண்மைதான் அய்யா....

  ReplyDelete
 8. ஜெயிலுக்கும் போய் ,நாங்க ரௌடிங்க 'என்று சொன்னதாக கேள்விபட்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. ஜெயிலில் ,இந்த ரௌடிங்களுக்கு தனி மரியாதை... அந்த மரியாததை வெளியலும் எதிர்பார்க்கிறார்கள்.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com