சனி 01 2015

துக்கத்தை பகிர விடாமல் தடுத்த ஒரு நிகழ்வு...

மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்


பீத்திக் கொள்ளும் அகிம்சை
வாதி காந்தியின் வழியிலே
மது விலக்கை அமல்
படுத்த வேண்டி அகிம்சை
முறையிலேயே போராடி வந்த
காந்தியவாதி சசி பெருமாளை
கொன்றது சாராயம் விற்கும்
மக்கள் குடி கெடுக்கும்
குடி அரசு..............

குடி மக்கள் குடியை
 கெடுக்கும் குடி அரசுடமிருந்து
குடி மக்களை காக்க
போராட்டத்திலே  சசி பெருமாள்
மடிந்த வேளையிலே............

அதோ.....
காந்தியின் அரி சனங்கள்
இன்னொரு ஆதிக்கச் சாதியாய்
கருப்பு பார்ப்பனராய் பரிணமித்து
வருவோர்கள் கட்டிய தெருக்
கோயிலில் கூலிக்கும் மாரடிக்கும்
பஜனை பாடல்களை மறைந்த
சசி பெருமாள் இறந்த துக்கத்தை
குடி மக்களிடம் பகிர
விடாமல் நாலு திசைகளில்
ஒலி பெருக்கியில் இரைக்கிறார்கள்.


19 கருத்துகள்:

  1. 'குடி' மக்களுக்கு அனைத்தும் தெரியும்....!

    பதிலளிநீக்கு
  2. வேதனையான நிகழ்வு. இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி அரசு நிணைத்தால்... முதலும் கடைசியுமாக இரக்கலாம் அய்யா..

      நீக்கு
  3. குடி கெடுக்கும் குடி நமக்கு தேவை தானா?குடிமக்களே சிந்திப்பீர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி மக்களுக்கு அந்த சிந்தனை இருந்திருந்தால் இன்னேரம் குடி கெடுக்கும் குடி அரசு.. காணாமல் போயிருக்கும்

      நீக்கு
  4. இன்னும் எத்தனை இழப்போமோ,,,
    நன்றி வலிப்போக்கரே,

    பதிலளிநீக்கு
  5. என்று தணியும் இந்த கொடுமையின் மோகம்?

    வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி அரசு , குடி மக்களின் குடியை கெடுப்பதை நிறுத்தினால் இந்தக் கொடுமை தணியும் அய்யா...

      நீக்கு
  6. நமது நாடு ஒரு குடியரசுதானே! அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரை படிதான் அய்யா ..நடந்து கொண்டு இருக்கிறது .....குடியரசு.

      நீக்கு
  7. சம்பந்தப்பட்டோர் சிந்திக்க மறந்தால்
    சந்ததியே அழிந்திடத் தான்
    வழி இதுவோ!

    பதிலளிநீக்கு
  8. "குடி"யரசு நாடுன்னா இப்படித்தான் இருக்குமோ....வேதனை...

    பதிலளிநீக்கு
  9. அதான் தாங்களே சொல்லிவிட்டீர்களே.... குடி கெடுக்கும் குடியரசு நாடுன்னு...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...