திங்கள் 10 2015

சிசேரியன் பெயர் வநதக் கதை

படம்-makkalnanpan.com

 அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள  திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் அவர். அப்போது அங்கு வந்த ஒருவர்

எண்ணண்ணே.... வேலை இல்லீயாக்கும்.   அதனால்தான் இங்க உட்காந்து “சைடஅடிச்சிகிட்டு இருக்கீங்களா..? என்று கேட்டபடி வந்து அவரும் அந்த திண்டில் அமர்ந்தார்.

“என்னப்பா, எனக்கு “சைட்அடிக்கிற வயசா.....

அய்யே.... நீங்க..அந்த அர்த்த்திலே நிணச்சுகிட்டேங்களா..... இல்லேண்ணே...“சைட்ன்“னா பார்க்கிறது. நீங்க.... ரோட்டுல போறவுகள..வாரவுகள..த்தானே பாத்துகிட்டு இருக்கீக...

சரிப்பா.....சரி....  மேற்கொண்டு பேசாமல் அமைதியானார்.

வந்தவரே... பேசினார்....ஆளையே பார்க்க முடியலேண்ணே.....

இந்தா.... வந்திருக்கேன்ல.... இப்ப பாத்துக்கோ....... என்றார்

இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில்.. அவர்களுக்கு அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து யார் இறங்குகிறார்கள் என்று இருவரும் விழித்த கண்ணை மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தபோது  இருவருக்கும் தெரிந்தவரே கையில் சில பொருட்களுடன் இறங்கினார்

ஆட்டோவை அனுப்பி வைத்தபின் அவர்களை பார்த்தபோது. இரண்டாவதாக வந்தமர்ந்தவர் கேட்டார்.

என்னப்பா, குழந்தை பிறந்திருச்சா.....  என்ன குழந்தை என்று கேட்டார்.

ஆமங்க... பெண் குழந்தை பிறந்திருக்கு என்றார்.

தாயும் சேயும் நலமாக இருக்குறார்களா?? என்று அண்ணன் கேட்போது
சுருதி குறைந்து சொன்னார். பரவாயில்லணே..சிசரியேன் செய்து குழந்தை பிறந்த்தினாலே... இழுத்தார்.... அவருக்கு ஆறுதலும் தைரியமும்  சொல்லி அனுப்பி வைத்தனர்..இருவரும்

அண்ணே..சிசேரியன் என்றால் எண்ணண்ணே என்று கேட்டார்.

ஒனக்கு நிச்சயமாக தெரியாதா என்றார் அண்ணன்.

சத்தியமாக தெரியதுண்ணே....என்றார்.

அதாவது இயற்கையான வழியில் மூலம் குழந்தை வெளியே வர முடியாதபோது , சில சமயங்களில் அவ்வாறு வருவது நல்லதல்ல என்று தோன்றும்போது தாய் சேய் இருவர் உயிரையும் காப்பதற்க்காக ,வயிறு. கருப்பை ஆகிய இரண்டையும் நடுவில் கிழித்து குழந்தையை எடுக்கும் ஒரு சாஸ்திர சிகிச்சையைத்தான் சிசேரியன் என்று சொல்லப்படுகிறது. சீசர் என்ற புகழ் பெற்ற அரசர் ஒருவர் இவ்வாறு பிறந்ததாக கூறப்படுவதால் சிசேரியன் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறார்கள்.என்றார்.

அண்ணே.... சொன்னா..கோபிக்க..மாட்டிங்கள்ல... என்றார் பீடிகையுடன்.

சொன்னாத்தானே..... கோபிப்பேனா... கோபிக்க மாட்டேனா என்பது தெரியும்  மொதல்ல சொல்லு என்றார் அண்ணன்.

அவரும் சிரித்துக்கொண்டே சொன்னார்.....55வயதாகியும் கல்யாணமே ஆகாத ஒங்களுக்கு... இதெல்லாம் எப்படிண்ணே தெரியும்......

.ஒனக்கு தெரியாத...ஒன்ன மாதிரி நானும்  ஒருத்தருகிட்ட கேட்டதுதான் தம்பி.. சொன்னவரு காமராசர் பல்கலைகழத்தில பிஎச்டி படிச்சவரு தம்பி  என்று சொல்லியபடி எழுந்து  தன்னுடைய பின்பகுதியை தட்டிவிடடபடி தன் வீட்டை நோக்கி நடந்தார்.


22 கருத்துகள்:

  1. நல்ல வேளை,சிசேரியனில் பொறந்த எனக்கு தெரியாதா என்று கேட்காமல் போனாரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிசேரியனில் பிறந்திருந்தா....கண்டிப்பா..சொல்லியிருப்பாரு... அவருக்கு தெரிஞ்சாதானே....

      நீக்கு
  2. சொன்னாத்தானே..... கோபிப்பேனா... கோபிக்க மாட்டேனா என்பது தெரியும் - அருமை

    பதிலளிநீக்கு
  3. பெயர் காரணம் அறியத் தந்தமைக்கு
    நன்றி தோழரே!
    கத்தியோடு ரத்தத்தோடு நடைபெறும் யுத்தம்! = சிசேரியன்
    த ம 2
    நட்புடன்,
    புதுவைவேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தியோடு ரத்தத்தோடு நடைபெறும் யுத்தம்--இந்த யத்தம் எல்லாவற்றிலும் நடந்து கொண்டு இருக்கிறது நண்பரே....

      நீக்கு
  4. பேச்சுப் போக்கில் விஷயங்களை சொல்லிச் செல்வது நல்ல உத்தி.

    பதிலளிநீக்கு
  5. இயற்கையை மீறுவது தற்சமயம் அதிகமாகி விட்டது ஜி...

    பதிலளிநீக்கு
  6. சீசரியன் பற்றி நான் அறிவேன். இருந்தாலும் புகைப்படத்துடனும், நகைச்சுவை உணர்வுடனும் உள்ள உங்கள் பதிவு அதை அனைவரும் புரிந்துகொள்ள வைத்துள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சில மருத்துவர்கள் பொறுமையின்றி அவசரப்பட்டு செய்து விடுவதும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணத்திற்க்காவும் இப்படி செய்கிறார்கள் அய்யா....

      நீக்கு
  8. வணக்கம் வலிப்போக்கரே,
    கேள்வி கேட்டது நீங்க தானே,
    அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கண்டுபிடிப்பு தவறு நண்பரே.... இன்னும் சற்று முயன்று பாருங்கள். ஏதாவது தடயம் கிடைக்கும்....

      நீக்கு
  9. அறிந்த கதைதான்...நீங்கள் சொன்ன விதம் நன்றாக உள்ளது. இதனை "சி" செக்ஷன் என்றும் சொல்லுவதுண்டு...

    பதிலளிநீக்கு
  10. அட சிசேரியன் என்பது ஒரு அரசனா ?,,தெரியாத விடயம் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீசர் ..என்ற அரசன் பெயரைத்தான் சிசேரியன் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் நண்பரே.....

      நீக்கு
  11. கடைசி பஞ்ச் ஸூப்பர் நண்பரே..

    பதிலளிநீக்கு
  12. அய்யா செனனை பித்தன் அய்யா அவர்களுக்கு..தங்கள் கருத்துரையை தவறுதலாக நீக்கிவிடப்படடுவிட்டது மன்னிக்வும்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...