வெள்ளி 14 2015

மதுக் கடையை மூடச் சொன்ன மந்தி..ரி.

படம்-ta.wikipedia.org



சுதந்திர தினத்தன்று மதுக்கடையை அதாவது சாராயக் கடையை மூடச் சொல்லி உத்தரவு இட்டு இருக்கிறது புர்ச்சி நடிகையின் அரசு...  அன்றைய தினம் இதுவரை சுதந்திரமாக மதுச் சாராயம் விற்றத்தை நிணைவு கூர்ந்து  கொடிய்யேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுக்கும் விழாவும் கொண்டாடுகிறது.

இந்தக கொண்டாட்டத்தை  சகிக்காத மது குடிக்காத..அதாவது குடிமக்கள் அல்லாதவர்கள்...  குடி கெடுத்த அரசே.தமிழ் மக்களின் குடியை அழித்த்து போதும் . மதுக்கடையை மூடு என்று “மக்கள் அதிகாரம்“ அமைப்பைச் சேர்ந்தவர்களின் போராட்ட வழிமுறைகளை பின்பற்றி  குடி கெடுக்கும்,  இன்னும் கெடுத்துக கொண்டு இருக்கிற புர்ச்சி நடிகை ஆளும் அரசுக்கு எதிராக  குடி கெடுத்த அரசே , குடியை கெடுக்கும் குடி கடையை இழுத்து மூடு என்று போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பழைய பேப்பர். ஒன்றை ஏதைச்சையாக பார்த்த போது.. புர்ச்சி நடிகை ஆளும் அமைச்சரவையில் மந்தியாக இருக்கும் அமைச்சர் ஒருவரும்.. மதுக்கடையை மூடச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த அதிசியம் அதில் தெரிந்தது. விசயம் முடிந்து போனதாக இருந்தாலும்.  எனக்கு தெரிந்த அந்த அதிசியமானது என்க்கு மட்டும் தெரிந்தால்  போதும் என்று இருந்தால் அது சமூகக் குற்றமாகி விடும“ என்பதால் அந்தக் கதையை எனது பாணியில் இந்தச் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகிறது.

அதாவது வந்துங்க... மதுரையில்.. பாண்டி கோவில் என்ற கோயில் ஒன்று உண்டுங்க... அந்தச் சாமி அசைவ சாமிங்க.... அதாவது சரக்கு அடித்து கறியை திண்டு ஆட்டம் போடும் சாமிகளின் வரிசையில் முதன்மையானதுங்க... இது பக்தர்களுக்கும் பக்தர் அல்லாதவர்களுக்கும் தெரிந்த சேதி....

இந்த பாண்டிச் சாமியின் பக்தர்கள்.. தங்களின் நேரத்திக் கடனுக்கு பரிகாரமாக ஆடு. கோழிகளை பலியிடுவார்கள்., இதில் மாடு மட்டும் விதிவிலக்கு ஏனென்றால் , நாலு வர்ணத்தில் கீழே உள்ளவர்கள் அதாவது இடமில்லாத்தால் தரையில் பிறந்த வர்ணத்தாரின் பிரதான உணவாக இருப்பதால்... மாடு பலியிடப்படுவதில்லை.

இப்படி நேர்த்திக்கடனுக்காக பலியிடப்படும் ஆடு, கோழிகளை உணவாக சமைத்து உற்றார் உறவினர். நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து. நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அணைவருக்கும் . விருந்து படைப்பது தொன்று தொட்டு தொட்டு வரும் பழக்கம்.

அந்தப் பழக்க வழக்கத்தின் படி, புர்ச்சி  நடிகருக்கு பின் ஆட்சிக்கு வந்த புர்ச்சி நடிகை முறைகேடாக சேர்த்த சொத்தின் பேரில் நடந்த  சொத்து குவிப்பு வழக்கில் “நாலு மூனும்  எட்டு என்று தீர்ப்பு கூறிய அறிவாளி  கணக்கு சாமியால் புர்ச்சி நடிகை விடுதலை செய்யப்பட்டார்.

புர்ச்சி நடிகையின் அமைச்சரவையில் மந்தியாக இருந்த ஒருவர். புர்ச்சி நடிகை விடுதலை யாக வேண்டியதால். அந்த வேண்டுதலை நிறை வேற்றும் பொருட்டு  புர்ச்சி நடிகையின் பொற் பாதங்களில் விழுந்து  பதவி பெற்ற அந்த மந்திரியானவர். தன் நேர்த்திக் கடனை செலுத்தும் விருந்துக்கு  ஏற்பாடு செய்தார்.

இந்த நேர்த்திகடன் செலுத்தும் விருந்து நிகழ்ச்சியில்  புர்ச்சி நடிகையின் ஆசி பெற்ற அதிமுகவின் குடிமகன்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு....

அதாவது கறி விருந்து நிகழ்ச்சியில் வழக்கமான, புக்ழ்பெற்றதுமான. வசனங்களான... “ கறி வைக்கிறவன் ஆளைப் பார்த்து வைக்கிறான்”, “எனக்கு கொஞ்சமா..வைக்கறான்,..  “பாவிப்பயல் எனக்கு கறியே வைக்காமல் போறான்என்ற வீர வசவுகளையும் வீரத்தை நிலைநாட்டும் சண்டைகள்  முதலானவைகள் இல்லாமல் இருக்க.......அதன் அச்சரமாக..
 பாண்டிச் சாமியின் அருகில் இருக்கும் அரசு சாராய மதுக்கடையை மூட வேண்டும் என்று நேரத்திக் கடனுக்குகூட  கூலி கொடுத்து பேரு வாங்கின அந்த மந்திரி மாவட்ட ஆட்சியரை  சந்தித்து மனு கொடுத்தார்.

பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கும் மதுக்கடையை மூடச் சொல்லி   கொடுத்திருந்த பல மனுக்களை ஏறடுத்து பார்க்காத மாவட்ட ஆட்சியர். மந்தியின்  மனுவை ஏற்றுக் கொண்டு . பாண்டி கோவில் அருகிலுள்ள அரசு மதுக் சாராய கடையை மூட வேண்டும் என்று கலால் துறையின் உதவி கமிசனருக்கு வாய் மொழி உத்தர விட்டார்.

இதனால்.. சுதந்திர தினத்திற்கு அரசு சாராய மதுக் கடை விற்பனைக்கு  விடு முறை விடப்பட்டது போன்று புர்ச்சி நடிகையின் விடுதலைக்கான நேர்த்திக் கடன் செலுத்த கறி விருந்து படைக்கும் நிகழ்ச்சி அன்று மட்டும் பாண்டி கோவில் அருகிலுள்ள மதுச் சாராயக் கடை மூடப்பட்டது...

...................................

8 கருத்துகள்:

  1. அடடே நல்ல காரியம்தான் தொடர்ந்தால் நலமே........

    பதிலளிநீக்கு
  2. இப்போது நடந்து வரும் மாற்றங்களால் மதுக்கடைகள் மூடப்படும் நிலை சீக்கிரமே வரும். மதுக்கடைகளில் போராட்டப் பெயரில் ஏற்படும் கலவரங்களால் குடிமகன்களும் அங்கு அமர்ந்து குடிக்கத் தயங்குகிறார்கள். மாறுதல் வரும்.

    பதிலளிநீக்கு
  3. சுய நலத்திற்க்காக மூடச் சொன்ன மந்தி ரி என்று சொல்லலாம்:)

    பதிலளிநீக்கு
  4. நிச்சயமாக மாறுதல் வரும்...வந்துவிடும்....நம்புவோம்...வேறு என்ன சொல்ல...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...