திங்கள் 03 2015

இன்னொரு ஆப்கனிஸ்தானாக மாறப்போகும் தமிழகம்...

தமிழ்நாடு வரைபடம் http://tnmaps.tn.nic.in/tamil/
படம்-https://ta.wikipedia.org/s/jo


சார்க் நாடுகள் நாமறிந்த கூட்டமைப்புதான் இந்த எட்டு நாடுகளுக்குள்ளாக BBIN என்ற மற்றொறு கூட்டமைப்பை ஏற்ப்படுத்தி வருகிறது இந்தீயா. பங்களாதேஷ்,பூட்டான்,இந்தியா, நோபளம் என்ற இந்த மண்டலத்திற்குள் வணிகமென்பது மற்ற நாடுகளைவிட அதிகம், இந்த நாடுகளுககுள், மின்சார கூட்டமைப்பு இணைப்பு, நீர்நதி போன்றவைகளும் பேசப்பட்டு வருகின்றன.ஏற்கனவே இரண்டு  பேச்சு வார்த்தைகள் முடிவுற்று உள்ளன.

சமீபத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பாகிஸ்தான் சென்ற போதும் இதனைப்பற்றியே பேசி இருக்கக்கூடும். “சார்க்” கூட்டமைப்பு வெற்றிகரமாக அமையாவிட்டால் இது போன்ற மண்டல கூட்டமைப்பை அமைத்துக் கொள்வதும் ,பாகிஸ்தான் உள்ளடக்கிய நாடுகள் பறறி பின்னர் கவனிததுக் கொள்ளலாமென இந்தீயா கருதுவதாக கூறியிருக்ககூடும். இது பாகிஸ்தானை தன்வழிக்கு கொண்டுவர இந்தியாவின் “கை முறுக்கும்” வழியாக இருக்கும்.

அமெரிக்காவை இதுவரை நம்பிருந்த பாகிஸ்தான் இன்று அதன் ஆதரவை தொடர முடியாத நிலையே உள்ளது. அமெரிக்காவிற்கு, பாகிஸ்தானை வைத்து இந்தீயாவிற்கு தலைவலி கொடுத்து வந்ததைவிட, தற்போதுதான் தலைவலியை தீர்த்துக் கொள்ள இந்தீயா அவசியம். அதற்க்காக பாகிஸ்தானை தற்போது கைவிட்டுவிடும், இனி இந்தீயா, பாகிஸ்தான் என்ற  சமக்கோட்பாடு..

 நின்று கொள்ளும் அமெரிக்காவின் தலைவலியென்ன? சீனா தான். வளர்ந்து வரும் சீன பொருளாதாரமு்ம் அதன் அன்னிய செலவணிக் கையிருப்பும், அமெரிக்காவை அச்சுறுத்துகிறது. அத்துடன் உலகின் முக்கிய கடல் பகுதியான இந்துமாக்கடலில், சீனா, ரஷ்யா, (அமெரிக்கா) தளங்கள் அமைத்துள்ளன.  இது பலவழிகளில் அமெரிக்காவின் பேரரசு கனவுக்கு இடையூராகும்.இந்தப் பகுதியில் ஜப்பான், ஆஸ்திரேலியாவைத் தவிர இந்தீயா மிகவும் தேவைப்படுகிறது. அமெரிக்காவிற்கு எல்லைப் பகுதி குறித்து சீனாவுடன் நீண்டகாலமாக இருந்துவரும். தகராறு, இந்தீயாவை அமெரிக்காவை நோக்கித்தள்ளும் சீனா உருவாக்கியுள்ள AIIB (Asian Infrtastructural Investment Bank)-ல் இன்று ஜெர்மன்,இங்கிலாந்து உள்பட  ஐரேப்பிய நாடுகள் இணைந்துள்ளன.ஆக அமெரிக்கா, பாகிஸ்தானை குறித்து பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளாது. இந்தீய  நடுவன அரசின் “ இஸ்லாமிய எதிர்ப்பு”அறிந்ததுதான். ஆக நடுவன அரசு பாகிஸ்தானுக்கு நெருக்கடியைத்தரும்.ஆனால் இதில் பெரிய ஒட்டை தமிழகத்திற்கு எதிரானது.

இந்துமாக் கடல் குறித்த நிலைப்பாட்டில். இந்தீயா, அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்வதால், இக்கடல் பகதியில் உள்ள இலங்கைமாலே தீவுகளையும் ஒதுக்கி விடுகிறது. இந்தியாவை எதிர்பார்த்தே, தமிழின விரோத நடவடிக்கைகளைச் செய்து வந்த இலங்கையை.  பற்றி  இனி இந்தீயா கவலைகொள்ளாதது மட்டுமல்ல அமெரிக்கா  தமிழின பகை வெளிப்படையானது. .அமெரிக்காவின் ஆணைக்கு அடி பணிந்து விடும். இனப் படுகொலையை அமெரிக்கா முழமையாக ஆதரித்தது.. ஆனால் தன் சொல்படி கேட்க வேண்டும் என்பதற்க்காத்தான் ஐ.நா தீர்மானங்களை கொண்டு வந்தது.. இன்று சீனா ஆதரவுடைய இலங்கை தலைமையை இந்தீய ஆதரவுடன், தூக்கி எறிந்துவிட்டு. ஒட்டு போட்டு தைத்த கோட்டு போல, பல எதிரணிகளை கொண்ட அரசை உருவாக்கி விட்டது..இது ஆப்கான்,ஈராக் போல பலவீனமான அரசு, எப்போது வேண்டுமனாலும் மாற்றிக் கொள்ள முடியும்.

சீனாவுடனான இந்தீயாவின் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு என்பதைவிட, சீனாவின் எல்லைப் பிரச்சனையே இனி விஸ்வரூபமெடுக்கலாம். தீபெத்-சீனாவின் நீண்டகாலப் போராட்டத்தில் இனி அமெரிக்கா முழமையாக தலையிடும். இந்துமாக் கடலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தவே இன்று ஈரானுடான ஒப்பந்தத்திற்கு இறங்கி வந்துள்ளது அமெரிக்கா.

செங்கடல் பகுதி போன்ற வளைகுடா ஈரானின் கையில் இருக்கிறது. உலகின் நான்காவது எண்ணெய் வளம் கொண்ட, இரண்டாவது எரிக் காற்று வளமம் கொணட ஈரான் உறவு எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு தேவை. எனவே ஷியாவை வகுப்பைச் சேர்ந்த ஈரான்,சன்னி வகுப்க்பைச் சேர்ந்த சவுதி அரோபியா. இஸ்லத்திற்கு எதிரான இஸ்ரேல் என கலப்பினங்களையும் அமெரிக்கா தனது கைக்குள் வைத்திருக்க  வேண்டும்.  .ஈரான் எண்ணெய் ஏற்றுமதியில் முதலில் இருப்பது சீனாதான்.

ஆனால், முழமையாக இந்துமாக்கடல் கடடுப்பாட்டை அமெரிக்காவிடம் இந்தீயா அடகு வைக்குமானால், எதிர் காலத்தில் தமிழகம் இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாறிப்போகும். மன்னார் வளைகுடா எண்ணெய் வளம் சவுதி அரோபியாவைவிடப் பெரியது. இதன் காரணமாகவே போராட்டஇனம் கொண்ட ஈழத்தமிழினம் கொன்றொழிக்கப்பட்டது. சிங்களமட்டுமல்ல, நடுவன அரசாகவுள்ள, ஆர்.எஸ்.எஸ்-ம் தமிழினத்திற்கு எதிரானதுதான்.  3500 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் ஆரியத் தழிழ் ஒரு புதிய பரிமாணததை எட்டும். இன்று தமிழகம் இந்தீயாவில் தனிமைப்படுத்தப்படும் மாநிலமாக, ஒரு தீவாக மாற்றப்பட்டு வருகிறது.கேரளம், கர்நாடகம், ஆந்திரம், இலங்கையென சுற்றுப் பகையை உண்டாக்கிவிட்டது. ஆனால் தமிழகத்தின் வளத்தில் கை வைக்க மட்டும் அது எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. மீத்தேன், அணுஉலை, நியூட்ரினோ, கடல்வளம், என பட்டியல் நீள்கிறது...

நன்றி! சா. காந்தி.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு.-ன் நியூஸ் லெட்டர் இதழிலிருந்து

18 கருத்துகள்:

  1. Ethu - Ethir- kalathil 'nattakka' vaippu ulluthu'

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் நடக்ககூடுமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்காமல் இருக்காது...அதுஎப்போது என்றுதான் சொல்லமுடியாது.

      நீக்கு
  3. இதற்குள் விழித்துக் கொள்வது அவசியம்...

    தகவலுக்கு நன்றி ஜி..

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நாசமாக போவதற்குத்தான் இம்புட்டு வேலையையும் நடத்திகிட்டு இருககாங்கே....

      நீக்கு
  5. அமெரிக்கா/சீனா/இந்தியா
    உலக அரசியல் பதிவு

    பதிலளிநீக்கு
  6. சுயநலம் தனிமனிதனில் தொடங்கி ஒவ்வொரு எல்லைகளாய் விரிவடைகிறது.

    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. என்ன நடக்குமோ!!? காலம் தான் பதில் சொல்லும்

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல் நண்பரே! இதில் சொல்லப்பட்டவை அனைத்தும் சரிதான்...ஆனால் அதற்குள் விழிப்புணர்வு வந்தால் நல்லது...இல்லையேல்....அதான் நீங்களே தலைப்பு சொல்லிட்டீங்களே...ஆனால்...போகும் போக்கைப் பார்த்தால் அதுதானோ...

    பதிலளிநீக்கு
  9. உமது கருத்துக்குள் மிகச்செரியானவை... திருகோணமலையை அமெரிக்காவிற்கு தாரைவார்க்க உடன்பட்டிருந்தால் இன்று ஈழ நிலைமை வேறு...

    இக்கருத்துக்களை மக்களிடையே கொண்டுசென்று மிச்சம் இருக்கும் தமிழ் இனத்தையாவது தமது அடையாளத்தை இழக்காமல் காப்பாற்றுங்கள்... நன்றி

    பதிலளிநீக்கு
  10. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!! பல

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...