ஞாயிறு 30 2015

“பட்டினி நாற்பதுகள்”..என்றால் என்னவென்று தெரியுமா???

படம்-
1830-ஜூலையில் பாரீஸ் நகரம் தெருப் போராட்டங்களாலும், சாலைத் தடையரண்களாலும் வெடித்து கிளர்ந்தது. 1831-ஆம் ஆண்டு, லியோன் நகரைச் சேர்ந்த பட்டு நெசவுத் தொழிலாளர்கள். தங்களைக் கசக்கி பிழியும் வியர்வைக் கூடங்களில்   இருந்து வெளியேறி ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர். அப்பொழுது அவர்கள்.

“எங்களாட்சி வருகையில்
உங்கள் கொடுங்கோலாட்சி விழும்,
அப்பொழுது, பழைய உலகின் பிணத்துக்கு
பாடைத் துணியை நாங்கள்  நெய்வோம்!
கலகம் குமுறுவதைக் கேளுங்கள்!!
-எனப்பாடிச் சென்றார்கள்.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் எண்ணற்ற“ உணவுக் கலகங்கள்நடந்தன. அதனால் அந்தப் பத்தாண்டுகளை “ பட்டினி நாற்பதுகள்! என்று அழைக்கத் தொடங்கினர்.

22 கருத்துகள்:

  1. மாலை வணக்கம் நண்பரே!! பட்டினி 40அருமை!! தெரிந்துகொண்டேன் நன்றி

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    1830-ஜூலையில் பாரீஸ் நகரத்தில் நடந்த தெருப் போராட்டத்தையும் - பத்தாண்டுகளுக்குப் பின்னர் எண்ணற்ற“ உணவுக் கலகங்கள்” நடந்தன என்பதையும் “ பட்டினி நாற்பதுகள்! ” என்றால் என்னவென்று தெரிந்துகொண்டோம்.

    நன்றி.
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. லியோன் நகரைச் சேர்ந்த பட்டு நெசவுத் தொழிலாளர்கள்... உணவுக்காக பத்தாண்டுகளாக கலகங்கள் நடத்தினார்கள். அய்யா... அந்த உணவு கலகத போராட்டத்தைத்தான் பத்தாண்டு நாற்பதுகள் என்று அழைக்கிறார்கள். அய்யா..

      நீக்கு
  4. பட்டினி 40 பற்றி தற்போதுதான் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வியர்வைக் கூடங்களில் எங்கள் முன்னோர்... (!)

    பதிலளிநீக்கு
  6. இது பொருளாதார வரலாற்றில் இடம் பெறும் ஒன்று..இங்கு இப்போது பாருங்கள் சகோ...பட்டினி 2 கோடி என்று சொல்லலாமோ!!! அரசு கிடங்குகளில் தானியம் 40 ஆயிரம் டன் வீணாகியுள்ளது. மழை வேறு பெய்யாததால் வறட்சி...

    ஒன்று இப்படி வீணாகிப் போவது...
    இரண்டு பணக்காரர்கள் ஃபேஷன் சாப்பிடுவது என்று தட்டில் உணவை சரிவர உண்ணாமல் எலி குதறுவது போல் வீணாக்குவது
    மூன்றாவது கல்யாணங்களில் உணவு வீணாக்கப்படுவது...இவை எல்லாம் ரத்தக் கண்ணீர் வர வைக்கும்...பட்டினி 2 கோடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டினி 2 கோடி இருந்தும் பட்டினி கலகம் பண்ணவில்லையே.....???

      நீக்கு
  7. இதுவரை இன்னா நாற்பது தான், நான் கேள்வி பட்டிருந்தேன் :)

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் வலிப்போக்கரே,
    தெரியாத தகவல் தெரிந்துக்கொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பட்டினி நாற்பதுகள் பற்றித் தெரிந்து கொண்டேன்!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...