செவ்வாய் 25 2015

ஆசான்களாகவும் தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இருவர்...

படம்-வினவு--

மாபெரும் ஆசான்களான கார்ரல் மார்க்சும். எங்கெல்சும்  அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரகளாக இல்லை.

1818-ஆம் ஆண்டு பிறந்தவரான காரல் மார்க்ஸ், தனது காலத்தைச் சேர்ந்த பல்வேறு விதமான த்த்துவங்களை அனு அனுவாக, நுணுக்கமாக, விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்தார். “ ரெய்ன்ஷ் செய்டுங்  என்ற முற்போக்கு நாளேட்டின் ஆசிரியர் என்ற முறையில், காரல்மார்க்ஸ். தமது காலத்திய அரசியலையும்,வர்க்க மோதலையும்- குறிப்பாக குறிப்பாக ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையை- விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

 இளைஞரான காரல் மாக்ஸ் “ ஆளுமைமிக்கவராக, விரைந்து பணியாற்றுபவராக ,உணர்வு கொந்தளிப்புமிக்கவராக. எல்லையற்றத் தன்னமபிக்கைமிக்கவராக விளங்கிய அதே வேளையில், ஆழ்ந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், மேதமைமிக்கவராகவும், ஓய்வு ஒழிச்சலற்ற இயங்கியலாளாராகவும் விளங்கினார்.

எங்கெல்ஸ். ஜெர்மனியின் செல்வமிக்க முதலாளித்துவக் குடும்பத்தில் 1820-ஆம் ஆண்டு   பிறந்தார். அவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட போதிலும், சுயமாகவே கல்வி கற்றுக் கொண்டார். தமது குடும்பத்தின் நூற்பு ஆலையை  நிர்வகிப்பதற்க்காக 1842-ஆம் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மாநகர்க்கு அனுப்ப்பட்டபோதும். அவரது மனதில் பிரெஞ்சுப் புரட்சியின் பாடல்கள் நிறைந்திருந்த்தாகவும், பாரிசின் புகழ்மிக்க சிவப்பு பயங்கரத்தின் அடையாளமான “கில்லட்டின்மீண்டும் தோன்றாதா என்று தன் மனம் எங்கியதாகவும் பிற்காலத்தில் அவர் நிணைவு கூர்ந்தார்.

எங்கெல்ஸ் இங்கிலாந்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் அதி உன்ன முன்னேறிய நிலையை நேருக்கு நேராகக் கண்டார். வல்லமைமிக்க பிரம்மாண்டமான தொழில் உற்பத்தி சாதனங்கள், புதிய ஆலை நகரங்களின் துன்பங்கள் நிறைந்த தொழிலாளர் சேரிகள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றை கண்கூடாகப் பார்த்தார்.

இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் முதல் மக்கள் திரள் இயக்கமான சாசனவாதிகளைப் ( சார்ட்டிஸ்டுகள்) பற்றி அவர் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். எங்கெல்ஸ், முதலாளித்துவத்தை உளமார வெறுத்த அதேபொழுதில், முதலாளித்துவம் பழைய உலகை விரைவாக மாற்றியமைப்பதையும் தெளிவாக்க் கண்டார்.

அரசியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் த்த்துவத்தை ஆழமாகக் கற்று ஆய்ந்த்தன் அடிப்படையில், ஒரு புதிய, நறுக்கான, முற்றொருமை கோட்பாடுகளை உருவாக்க மார்க்சும், எங்கெல்சும் இணைந்து செயல்பட்டனர். அவர்களுடைய அறிவியல்பூர்வ அணுகுமுறை கம்யூனிசத்தைக் கற்பனாவாதப் பகற்கனவுகளில் இருந்து மீட்டு, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட நடைமுறை அரசியல் உலகுக்குத் தகவுடையதாக மாற்றியது.

அந்த நாட்களில் மார்க்சையும் எங்கெல்சையும் நன்கு அறிந்த தோழர் பின்வருமாறு விவரித்தார். 

மார்க்ஸ் அப்போது 28 வயதேயான இளைஞர்: அவர் எங்களை மிகவும் ஈர்ப்பவராக இருந்தார்.. அவர் நடுத்தர உயரம், அகன்ற தோள்கள், நல்ல உடற்கட்டு, வேலைகளில் சுறுசுறுப்பு,..... அவருடைய பேச்சு நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாக இருந்தது. அவருடைய தர்க்கம் அனைவரும் ஏற்கும் விதமாகவும், மறுக்கவியலாத்தன்மையோடும் இருந்தது. மார்க்ஸ் தம்மைப் பற்றி கனவு காண்பவராக இல்லாமல் எதார்த்தமானவராக இருந்தார்.

மார்க்சின் உயிருக்குயிரான சகோதர்ர் பிரடெரிக் எங்கெல்ஸ்- மெலிந்தவராக, கம்பீரமானவராக,அழகான தலைமுடி- மீசையுடன் காணப்பட்டார். ஒரு அறிவாளிக்குரிய தோற்றத்தோடு அல்லாமல் மிடுக்கான இளம் படைத் தளபதியைப் போல் இருந்தார்.


நன்றி!!----கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை.. யிலிருந்து.......


,

13 கருத்துகள்:

  1. பயனுள்ள, அறிந்துகொள்ளவேண்டிய பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வரலாற்றையெல்லாம் கதைகளாக படிக்கிறேம்!! பயனுள்ளது அறிந்து கொண்டேன் நன்றி

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஐயா!! தாங்கள் என் தளத்திற்கு வந்தமைக்கும் கருத்து அளித்தமைக்கும் நன்றிகள் பல!!

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துரைக்கும் நன்றிக்கும்..நன்றிகள் !!!

    பதிலளிநீக்கு
  5. அறியாத தகவலுக்கு நன்றி நண்பா...

    பதிலளிநீக்கு
  6. பொருளாதாரம் படித்ததால் இவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும்...மீண்டும் நினைவுகளை மீட்டதற்கு மிக்க நன்றி நண்பரே!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த மேதைகள் !

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...