வெள்ளி 28 2015

டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய போராளிகளுக்கு கவிஞன் ஷெல்லி போற்றிப் பாடிய ஒரு கவிதை,

படம்--மதுவுக்கு எதிராகப் போராடி சிறை சென்ற மாணவ போராளிகள்.

அதிமுக அரசின் காட்டாட்சிக்கு எதிராக ,டாஸ்மாக்கை ஒழிக்க ஓரணியில் திரண்டு போராடி சிறை சென்ற போராளிகளுக்கும்  முழு மதுவிலக்கை அமுல்படுத்தும் வரை டாஸ்மாக எதிர்ப்பு போராட்டத்தை தொடரும் போராளிகளுக்கும்


துயில் களைந்தெழும் சிங்கம் போல
வெல்லப்பட முடியா ஆற்றலுடன்
எழுக! வெகுண்டெழுக!!
உறங்குகையில் படிந்த பனித் துகளை
புழுதி மண்ணில் உதறி எறிவது போல்
எறிக உமதடிமைத் தளைகளை!
நீங்களோ  பலர்,
அவர்களோ, சிலர், மிகச்சிலர்.

(பெர்சி ஷெல்லி என்ற கவிஞன் 1819- ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர் கொண்ட மான்செஸ்டர் தொழிலாளர்களைப் போற்றிப் பாடிய கவிதை.)


madurai tasmac blokade (2)
படம்-வினவு..– மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை





குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடு..என்று போராடும் மக்களை குதறும் ஜெயா போலீசு


நன்றி !! வினவு

10 கருத்துகள்:

  1. நண்பரே இப்படி டாஸ்மாக்கு எதிர்க்கும் மக்கள், மாணவர்களிடம் எமது கேள்வி ஒன்றே...

    இன்னும் 10 மாதத்தில் தேர்தல் வரும் அப்பொழுது அமைதியாக காட்டலாமே எதிர்ப்பை அப்பொழுது மறந்து விடுவார்கள் இதுதான் தமிழ் நாட்டின் சாபக்கேடு
    கொம்பை விட்டு வாலைப்பிடித்த கதை போல...

    பதிலளிநீக்கு
  2. தேர்தல் வரை என்ன ...முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் தொடரும் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. நண்பா புரியாமல் கோட்கிறேன் மது கடைகளை ஆரம்பித்த போது எதிர்ப்பை காட்டுனார்களா?? வீட்டுக்கொரு மாண வர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் அவரரவர் தந்தை உறவு நட்பு என்று தடுத்தாலே போதும் அல்லவா மது தானாக ஒழிந்து விடாதா!!!
    நன்றி
    அன்புடன் கருர்பூபகீதன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றும் டாஸ் மாக்கை மூடச்சொல்லி மனு கொடுத்தும் மதுவிலக்கை அழுல் படுத்தக்கோரியும் மன்னியிட்டபோதும் கண்டு கொள்ளாவில்லையே .அய்யா..

      நீக்கு
  4. வணக்கம் வலிப்போக்கரே,
    கவிதை நல்லா இருக்கு, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!...திருமதி .மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களே!!!

      நீக்கு
  5. வீரம் செறிந்த மாமணிகளுக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  6. மாணவர்கள் செய்வது தவறுஅல்ல ஆனால் இப்படித் தொடர்ந்து போராடுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குமே...நமது அரசியல் அப்படித்தானே இருக்கின்றது...

    கவிதை நல்லாருக்கு நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி மக்களின் எதிர் காலத்தை பாழாக்கி விட்டதோடு மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழாக்கி இருக்கிறதே!. இந்த ஆளும் குடி கெடுத்த அரசு....

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...