செவ்வாய் 15 2015

நாட்டுக்காக பிள்ளைகளை பணயக்கைதியாக கொடுத்த திப்புவும் -தன் சுயநலத்துக்காக நாட்டை கூறு போடும் இன்றைய சாதி,மத வெறியர்களும்.

படம்-

வினவு



சில வருடங்களுக்கு முன் அரசு தொல்லைக் காட்சியில் “மாவீரர் திப்பு சுல்தான்” என்ற தொடர் ஒளிபரப்பின் போது இது ஒரு கற்பனை கதை என்று டைட்டில் காட்டப்பட்டது.

இப்படியாக .உண்மை தேச பக்தர்களின் வரலாற்றை இருட்டிப்பு செய்தவர்கள் ஏகாதிபத்திய கொடுங்கோண்மையை விட மிகக் கொடுங்கோலர்களாக
இருந்தவர்கள் சங்க பரிவாரங்கள்...

இன்று அந்த சங்க பரிவாரங்கள்  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து குத்தாட்டம் போடுகின்றன..தொலைக்காட்சிகளில் காட்டப்படும்கட்டுக்கதைகளும் புராண மாய்மலங்களையும் மாபெரும் வரலாற்று  வீரகாவியம் என்று பெயர் சூட்டப்படுகின்றன.

குரங்கிலிருந்து மனிதனாக மாறியபின்  17.18, 19 நூற்றாண்டுகளில்  பத்துமாதம்    கருவிலிருந்து வெளியே வந்த மனிதனுக்கு இருந்த அறிவை விட 20,21ம் நூற்றாண்டு மனிதனுக்கு அறிவும் ஆற்றலும் அதிகமுண்டுஇ..

அந்த அறிவையும், ஆற்றலையும்... குரங்கின் நிலைக்கு இழுத்துச் செல்கின்றன் சங்பரிவாரங்கள்.... அவற்றில் ஒன்றுதான். ஒரு நடிகனை தேச பக்தன் என்று விளித்துரைத்து... ஒரு உண்மையான தேச பக்தன் வேடத்தில் நடிக்கக்கூடாது... நடிக்கமாட்டார். விளிம்புவது..

இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?.. என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர்.திப்பு.  தென்னந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு மிகப் பெரும் உந்து சக்தியாக திகழ்ந்தவர் திப்பு.

ஆங்கிலேயனின் காலை நாக்கி சொகுசாக வாழ்ந்து கொண்டு இருந்த இந்து  பேஜ்வா மன்னர்கள்  நிலங்களை பறித்தெடுத்து நிலமற்ற விவசாயிகளுக்கும்
தலித்துக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தவர் திப்பு

இந்த மண்ணில் முதன் முதலாக  சுதந்திரம்,சமத்துவம் , சகோதரத்துவம் என்ற சொற்களை உதிர்க்கத் செய்தவர்.திப்பு..

 மேலும் படிக்க..-திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.



திப்புவை அவமதிக்கும் துரோகச் செயல்கள்.

11 கருத்துகள்:

  1. வெள்ளைகாரனுக்கும் திப்புவுக்கும் என்ன வேறுபாடு ?
    சில நூற்றாண்டுகள் தான் வேறுபாடு
    .
    திப்பு இந்தியாவை ஆள உரிமை உண்டு என்றால் வெள்ளைகாரனுக்கும் உண்டு .
    .
    திப்புவின் பார்வையில் வெள்ளைக்காரன் எதிரி
    .
    பூர்வீக இந்தியர்களின் பார்வையில் இரண்டு பேருமே எதிரிகள்

    பதிலளிநீக்கு
  2. இதற்கு பிறகும் ரஜினி திப்புவாய் நடித்தால் ,உண்மையில் அவர் வீரமான ஆள்தான் !

    பதிலளிநீக்கு
  3. காணொலிளி முழுவதும் கேட்டேன் நண்பரே அருமை...

    பதிலளிநீக்கு
  4. பாடல் அருமையாக உள்ளது...ஏம்பா இப்படி எல்லாத்துலயும் அரசியலையும் மதத்தையும் நுழைத்தால் எந்தத் துறைதான் உருப்படும்.....

    பதிலளிநீக்கு
  5. அரசியல்தான் முதன்மை நண்பரே..... மதத்தை தனிநபர் சார்ந்ததாக இருக்கவேண்டும்..ஆனால் நிலைமை ..இப்படி அப்படி இல்லை..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...