ஞாயிறு 04 2015

ஊத்திக் கொடுத்த உத்தமி - பாடல்..


ருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்
(ஊருக்கு ஊரு சாராயம்…)
இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா
பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா
நீ வாழ வெச்ச தெய்வமுண்ணு கூவலைண்ணா கொன்னுருவா
(ஊருக்கு ஊரு சாராயம்…)
படிக்க வுடாம உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான்
மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்
(சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான்
ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்)
ஆட்டுக்குட்டி, பேன், மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத்தெருவா கடைய வெச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிகிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
இடுப்பு வேட்டியையும் உருவிக்கினு போச்சிடா
(ஊருக்கு ஊரு சாராயம்..)
தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மட்டையானா கலெக்டருக்கு சபாசுபாரெல்லாம் அ.தி.மு.க குண்டாசு
இதுக்கு ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு
(ஊருக்கு ஊரு சாராயம்..)
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆள் படைக்கு சம்பளம்
போலீசு, குவாலிசு செலவு ஐட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்தச் செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூடச் சொன்னா அவங்க பியூச்சரெல்லாம் என்னாகும்.





வினவு ஃபேஸ்புக் பக்க வீடியோ



"சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான், ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்" - மக்கள் அதிகாரம் வழங்கும் ம.க.இ.க.-வின் புதிய பாடல்





மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு
வீடியோ தயாரிப்பு : வினவு



6 கருத்துகள்:

  1. கருத்துள்ள பாடல் நண்பரே தலையெழுத்து.....

    பதிலளிநீக்கு
  2. பாட்டு அருமை நண்பா! இது மாதிரிசொரனை "யா எத்தனை பாட்டு வந்தாலும் "உத்தமி உனை போல் வருமா? னு உடன்பிறப்பு உசிற விடுவாங்க! இதுக்கு .....??

    உத்தமியால நடுரோட்டியல் குத்தாட்டம் போட்ட குடும்ப குத்துவிளக்கு! கானொலியத்தான் நானும் பதிவில போட்டேன்? ஆனா அது வரல?

    பதிலளிநீக்கு
  3. மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கருத்துள்ள பாடலை அருமையான குரல் வளத்தில் ,கேட்டு மகிழ்ந்தேன் :)

    பதிலளிநீக்கு
  5. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தப் பிரச்னையே முக்கிய பங்கு வகிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. தமிழகத்துக்கு என்று விடிவு காலமோ...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...