வெள்ளி 16 2015

“வளரும் தொழில் அதிபர்கள்”

Sardhar Ali என்பவர் Gowri Abira மற்றும் 35 பேர் ஆகியோருடன்
ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, "டிடர்ஜென்ட்' சோப் பவுடருக்கு ஏகப்பட்ட "டிமாண்ட்' இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.
இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து அங்குள்ள பால் வியாபாரிகள் பாலை விற்பனை செய்து விடுகின்றனராம்! ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற்கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்!
பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!

இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோ ஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!

சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?

காஸ்டிக் சோடா.
தண்ணீர்.
ரீபைன்ட் ஆயில்.
உப்பு.
சர்க்கரை.
யூரியா.
இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!

அடப்பாவிங்களா? இன்னும் எதைத்தான் கலப்படம் செய்யாம பாக்கி வச்சிருக்கீங்களோ தெரியலியே!

13 கருத்துகள்:

  1. எல்லாமே மனிதன் விரைவில் சாவை நோக்கிப் போவதற்க்கே நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு அவஸ்த பட்டுகிட்டு... என்ற நல்ல உள்ளமாக இருக்கும் நண்பரே....

      நீக்கு
  2. பதில்கள்
    1. அந்தப்பாலை..அவ்வளவு லேசில் மறக்க முடியுமா...? நண்பரே...

      நீக்கு
  3. ஜி கருத்தை ஏற்கிறேன்! சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அச்சு அசலாக செயற்கை அரிசியும் வந்திடுச்சு நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனாக்காரன் கள்ளக்காப்பிக்காரன்...நாங்கதான் ஒரிஜினல் என்று பெருமை பட்டுக் கொள்வார்கள் இத்தீயாக்காரர்கள் நண்பரே...

      நீக்கு
  4. ஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...

    என்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....

    உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தா அடுத்த தொழில் அதிபர் வந்திட்டாருப்பா....... நாட்டில் தொழில் அதிபராவதுக்கு பஞ்சமே இல்லப்பா....

      நீக்கு
  5. நல்லதை கற்றுக்கொள்வதை விட நாசமாக போறதுக்கு தான நாம சீக்கிரம் முயற்சி செய்வோம் நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. அடப்பாவிங்களா....பகீர்னு இருக்குதே...உருப்படமாட்டிங்களாடே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவிங்கஉருப்படத்தானே இப்படியெல்லாம் செய்யிறானுங்க நண்பரெ...

      நீக்கு
  7. எங்கும் எதிலும் கலப்படம் சுட்டிகாட்டியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...