திங்கள் 26 2015

தோழர் ஜூலியஸ் ஃபூசிக் ஓர் அதிசியக் கலைஞன்..மாவீரன்..

படம்-  ஜூலியஸ் ஃபூசிக்



ஜூலியஸ் ஃபூசிக் செக்கோாஸ்லாவாகியா நாடு உலக பாட்டாளி வர்க்கத்துக்கு ஈந்த ஒப்பற்ற மாவீரன்

இரண்டாம் உலகப்போரில் செக் நாடு இட்லரின் கோரப்பிடியில் சிக்கித் திணறியபோது, அப்பாசிச இருள் கிழிக்க ஆவேசத்தோடு எழுந்த கம்யூனிசப் போராளி..

இளம் வயதிலேயே கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டு மாணவர் அமைப்புகளை கட்டவதிலும் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் ஈடுபட்ட அவர், “ த்வோர்பா“ ( படைப்பு) என்ற இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராகத் தொடங்கி “ரூத் பிராவோ” என்ற கம்யூனிஸ்டு கட்சி அரசியல் ஏட்டின் ஆசிரியராக உயர்ந்தார். தனது வர்க்கக் கனல் மூட்டும் எழுத்துக்களால பாசிச எதிர்ப்புப் போராட்டத் தீயை பற்றிப் படரச் செய்தார்.

1938-ல் நாஜி அடக்குமுறை கோரத்தாண்டவமாடிய போது கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டன.. ஃபூசிக்கும் மற்ற தோழர்களும் தலை மறைவாக இயங்கி. தடை செய்யப்பட்ட பத்திரிகைகளை இரகசியமாக  வெளியிட்டு தொடர்ந்து புரட்சி பணியாற்றினர்.

ஐரோப்பிய கண்டத்தில் அன்று பெரும்பாலான எழுத்தாளர்களும், அறிவுத் துறையினரும் பாசிச அடக்கு முறைக்கு அஞ்சி அதனுடன் சமரசமாகிவிட்ட நிலையில், பாசித்துக்கு எதிராக உறுதியாக நின்று மக்களைத் திரட்டி போராடினார்.

உண்மையான மனிதனுக்கு எடுத்துக்காட்டாக,உண்மையான கம்யூனிஸ்டுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த  தோழர் .பூசிக் ஒர் அதிசியக் கலைஞன், மாவீரன்.

1942--ல் .ஃபூசிக் பாசிச இட்லரின் “கெஸ்டபோ” எனப்படும் இரகசியக் கொலைப்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டடியில் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். எஃகுறுதிமிக்க அம்மாவீரனிடமிருந்து எந்த இரகசியத்தையும் பெற முடியாததால், அப்பாசிசக் கோழைகள் 1943 செப்டம்பரில் . தோழர் ஃபூசிக்கை தூக்கிலிட்டு கொன்றனர்.

சித்திரவதை முகாமில் இருந்த போது அவர் எழுதி, இரகசியமாக அனுப்பிய குறிப்புகள் தான் பிற்காலத்தில் ”தூக்கு மேடைக் குறிப்புகள்” என்ற நுலாக வெளிவந்து  உலகப் பெற்று விளங்குகிறது.

உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் நாட்டுப் பற்றும் ஜனநாயகப்பற்றும் கொண்டோர்க்கும் அந்நூல் புரட்சிகர உணர்வூட்டும் வீர காவியமாக இன்றும் திகழ்கிறது.




9 கருத்துகள்:

  1. அறியாத தகவல்கள் நண்பரே ,!!ஆனால் இன்றைய கம்னியூசத்தின் நிலைமை?????

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிமுகம் ,இதுவரை கேள்வி படாத பெயர் !

    பதிலளிநீக்கு
  3. பதிவில் பல விடயங்கள் அறிந்தேன்

    பதிலளிநீக்கு
  4. நல்லதோர் தகவல் அளித்தீர்கள் நன்றி......

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...