புதன் 18 2015

தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த பாசமிகு அண்ணன்கள்..

1
படம்-வினவு
பாச மலர் படத்தில்..அண்ணன் தங்கையின் கணவனிடம் என் கண்களையே உன்னிடம் ஒபபடைக்கிறேன் என்று  கூறுவார்.அதே போல காதலுக்கு மரியாதை என்ற படத்திலும் தங்கையின் அண்ணன்கள் முதலில் தங்கையின்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின் தங்கையின் காதலை ஏற்று  காதலுக்கு மரியாதை செய்வார்கள்..இதுகள் தமிழ்ச சினிமாக்களில் மட்டுமே சுபம் பெறும்.. ஆனால் நிஜத்தில்........ வேறு மாதிரியாக நடக்கிறது.. நடந்து கொண்டு இருக்கிறது. 
அதில் ஒன்று தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த அண்ணன் மார்களின்.. உண்மைககதை.
உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் அண்ணன்கள்..அவர்கள் யாரும்  வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தும இளைஞர்கள்தான் அவர்கள்.தமிழ் சினிமாவில் காட்டப்படும் காதல் படங்களை ரசித்தவர்கள்தான்..ஆனால் நிஜமோ  வேறு மாதிரியாகத்தான் நடந்து இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். 
இச்சூழ்நிலையில் இக்காதலர்கள்  சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்தார்கள
.காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.
இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.
லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.
தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் காதலித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும்.
நன்றி!

22 கருத்துகள்:

  1. நண்பரே நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்மவர்கள் இப்படித்தான் என்பது தெரிந்ததே 1000 பெரியார் மீண்டும் வந்தாலும் மாறமாட்டார்கள்
    ஆகவே காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் முதலில் இந்த ஜாதி-மத விசயங்களை மனதில் வைத்துக்கொண்டு காதலித்தால் எல்லோருக்கும் நல்லதே,,,,, ஏனெனில் பிறவி ஒருமுறையே....

    பதிலளிநீக்கு
  2. காதல் கண்ணீரைத் தருமென்றார்கள்
    காதல் செந்நீரையும் தருமென்கிறார்கள்
    காதற் பரிசேது?

    பதிலளிநீக்கு
  3. ஜாதி வெறியர்கள் கம்பி எண்ணினால் திருந்துவார்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கம்பியு்ம் சாதிவெறியாகத்தான் இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  4. கொடுமை.
    நமது தாத்தாக்கள் காலத்தில் பெயருக்குப் பின்னே ஜாதியின் பெயர் இருந்தது. பெரியார் போன்றவர்களின் வரவால் அந்த ஜாதி பெயர்கள் கேவலமாக பார்க்கப்பட்டன. நமது காலத்தில் ஜாதியை கூட மறந்துவிட்டோம். ஆனால், இப்போது மீண்டும் ஜாதி தலை தூக்குகிறது. 24, 25 வயதில் இருக்கும் இளைஞர்கள் எல்லாம் தங்களின் பெயருக்குப்பின் ஜாதிப் பெயரை சமீபத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கு பொய் முடியுமோ!
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. நாடகத்தில். காவியத்தில் காதலென்றால் களித்திடுவார்..
    தன் வீட்டில்...
    தகிக்கின்றார்...

    பதிலளிநீக்கு
  6. வரைமுறைகள் அறியாமல் வருவதே காதல்கிறாங்க! ஆனால் காலம் காலமாக இந்த மூடர்கள் திருந்துவது எப்போது? எமனிடம்கூட தனியாக சாதி கேட்பார்கள்! அட போங்கய்யா!

    பதிலளிநீக்கு
  7. காதலித்துப் பார் சாதி ஒழியும் என்றானே,,,,,
    ம்ம் மனம் கனக்கும் பதிவு தான் நண்பரே,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதி மறுப்பு திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் நண்பரே...

      நீக்கு
  8. காதல் இனிக்கும் என்றார்கள்! காதலுக்கு இருதயம் அம்புக்குறி என்று அடையாளமும் உண்டு அது இதுதான் போலும்..

    பதிலளிநீக்கு
  9. இதுபோன்ற ஒரு நிகழ்வின் நேரடி அனுபவம் எனக்கிருக்கிறது வலிப்போக்கரே!

    சாதி உயிரினைவிடப் பெரிதென்று திரியும் பகுத்தறிவுக் கூட்டம்!!!!!!

    தலைப்பில்,
    “தங்கைக்கு அவளது கனவனது பொணத்தை பரிசாக கொடுத்த பாசமிகு அண்ணன்கள்..““““

    என்பதில் கனவனது என்பது “கணவனது“ என்பதுதானே?

    அல்லது வேறேதேனும் குறிப்பிருக்கிறதா?

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவனது என்பது “கணவனது“ தவறை சரி செய்து விட்டேன் நண்பரே....

      நீக்கு
  10. ஜாதி வெறி கொடூரத்தை உண்மை சம்பவம் மூலம் தெரியபடுத்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...