செவ்வாய் 10 2015

இப்படிக்கு அனைத்து பறவைகள் கூட்டமைப்பு


படம்-uyiri.wordpress.com



அடப்......பாவிகளா....!!!!

பகுத்தறிவு  அற்ற
உங்களின்  ஒரு
நாள் கூத்துக்காக
பாடிப் பறந்த
எங்களை  எல்லாம்
தெருவ விட்டு
நகரத்த விட்டு
ஊரை  விட்டே
விரட்டி  அடிக்கிறேங்களடா..
நீங்கள்  எல்லாம்
மனிதப் பிறவிகளடா....???


                     இப்படிக்கு
வெடிச் சத்தத்தை எதிர்க்கும்
அனைத்து பறவைகள் கூட்டமைப்பு...

18 கருத்துகள்:

  1. இந்த ஒரு நாள் கூத்துக்கு ஐயாயிரம் கோடிக்கு மேல் செலவும் செய்கிறார்கள் ,வளர்ந்து வரும் நாட்டுக்கு இது தேவையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ச்சி....வளர்ச்சின்னு ஒரு ஆளு நாடு நாடாக தட்டேந்தி போரது... ஒங்களுக்கு தெரியாது போலிருக்கு.....

      நீக்கு
  2. உண்மை நண்பரே... இன்றைய நாள் என் வாழ்வின் மோசமான நாள்...சென்னையில் தீபாவளி...அடைமழை...மாலையில் தொடங்கிய வெடிகளின் ஓசை இன்னும் செவிகளில்...நம் காதுகளுக்கே இப்படி யெனில்...பாவம் அந்த பறவைகளுக்கு...ஆதியில்.வெடிக்கச்சொன்னவன் கிடைத்தால் ...ஆயிரம் நம்மாழ்வார்களும்..வள்ளலார்களும் வந்தாலும் முடியாது போல்தான் இருக்கிறது...மக்கள் மிகவும் மதிப்பவர்கள் இதைப்பற்றி பேசவேண்டும்....நல்லவேளை. என் பிள்ளைகள் புரிந்து கொண்டார்கள்...நாங்கள் தொலைகாட்சி பெட்டியை தூக்கிப்போட்டு பதினைந்து வருடங்களும்.பட்டாசுகள் மறந்து அதற்கு மேலும் ஆகிவிட்டது....
    நல்ல தூண்டலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் பிிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்!! நண்பரே....நல்ல பண்புகளை தொடர்ந்து கடைபிடிப்போம்..

      நீக்கு
  3. "வெடி சத்தத்தை வேடிக்கை பார்க்க வந்த பறவைகள் கூட்டம் இது"
    மேடையில் யாரோ கூப்பாடு போடுவது கேட்கிறதா தோழரே!

    உண்மையை உணர செய்தமைக்கு நன்றி!

    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூப்பாடு போடுவதைக் கேட்டுத்தான்..நண்பரே.... இந்தப் பதிவு...

      நீக்கு
  4. கூட்டமைப்பின் கவிதை அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வருசத்தில் ஒரு நாள் தானென்று நேற்று வெடிவிட்டு ஒரே புகைமண்டலமாக்கிட்டாங்கையா..

    பதிலளிநீக்கு
  6. நண்பரே! அருமை அருமை. நாங்களும் இவைகளுக்கு எல்லாம் எதிரியான பட்டாசுகளைச் சின்ன வயதிலே வெடிப்பதில்லை..

    நல்ல கருத்தை முதன்மையாக வைத்து இங்கு சொல்லியதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .... நல்ல பழக்கம்...தங்களின் பாராட்டுக்கு நன்றி! நண்பரே....

      நீக்கு
  7. உணமைதான். எங்கள் தெருவில் காலையும் மாலையும் ஓயாமல் பறவைகள் சத்தம் கேட்கும். இன்று காலை கேக்கவேயில்லை. எங்கு போயின என்று தெரியவில்லை. சிந்திக்க வைத்த பதிவு.
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. அருமையான உண்மை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயம்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...