வெள்ளி 06 2015

மதுவிலக்கு போராளி மாரிமுத்து-












Prpc Milton Jimraj 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் — Jim Raj Miltonமற்றும் 4 பேர் பேர்களுடன்

மதுவிலக்கு போராளி மாரிமுத்து-

147, 148, 448, 427, 323, 324, 353, 506/2... இந்திய தண்டனைச் சட்டத்தின் இத்தனை பிரிவுகளின் கீழ் ஒரு பள்ளி மாணவரைக் கைதுசெய்து, 38 நாட்கள் சிறையில் வைத்திருந்து அடி, உதை கொடுமைகளுக்கு ஆளாக்கியிருக்கிறது தமிழ்நாடு காவல் துறை!

ஜாமீனில் வெளிவந்த மாரிமுத்துவை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை பள்ளி நிர்வாகம். அதற்கு அவர்கள் சொன்ன ஒற்றைக் காரணம்... 'மாரிமுத்து மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்பதுதான்.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மதுவிலக்குக்கு எதிராகப் போராடியபோது, தன்னார்வத்தோடு அதில் தன்னை இணைத்துக்கொண்டார் மாரிமுத்து. ஏன் அந்தப் போராட்டத்தில் மாரிமுத்து கலந்துகொண்டார், அதன் பிறகான விளைவுகள் என்னென்ன... மாரிமுத்து வார்த்தைகளிலேயே கேட்போம்..!
''என்கூடப் படிக்கிற பசங்க சிலரோட அப்பாக்கள் குடிக்கு அடிமையானவங்க. அவங்களால என் நண்பர்கள் படுறபாடு கொஞ்சநஞ்சம் இல்லை. இதனால ஒருசில பசங்க போதைக்கு அடிமையாகிட்டாங்க. 'எல்லாத்துக்கும் காரணம் டாஸ்மாக் கடைகள்தானே’னு எனக்குக் கோபமா வரும். அன்னைக்கு (ஆகஸ்ட் - 3) கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு எதிரா போராடுறாங்கனு தெரிஞ்சதும் நானும் கலந்துக்கிட்டேன். அந்தக் கூட்டத்துலயே நான் ஒருத்தன்தான் பள்ளி மாணவன். போராட்டம் தொடங்கின கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருந்த டாஸ்மாக் கடையை மூடப் போனோம். சிலர் கடையை நொறுக்குற அளவுக்கு ஆவேசமா கிட்டாங்க. இதனால கோபமான போலீஸ் அதிகாரிகள் லத்தியால அடிக்க ஆரம்பிச் சுட்டாங்க. என்கூடப் போராடின ஆசாத் அண்ணனுக்கு மண்டை உடைஞ்சு, ரத்தம் வர ஆரம்பிச்சிருச்சு. தடுக்கப்போன என்னையும் சட்டையைப் பிடிச்சு இழுத்து கடுமையா அடிச்சாங்க. ஆனாலும் விடாம, 'டாஸ்மாக்கை மூடு. போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’னு கோஷம் போட்டோம். 'அம்மா ஆட்சியில கடையை மூடுனு சொல்ற அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்துருச்சா?’னு கேட்டு திரும்பவும் இரும்பு பைப்பால அடிச்சாங்க. போராடிட்டு இருந்த மாணவிகள் மேல புல்டோசரைவிட்டு ஏத்தப்போனாங்க. அப்புறம் ஒருவழியா எங்களை சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.
நாங்க 13 பேர். அங்க வர்ற போற போலீஸ்காரங்க எல்லாரும் எங்களை அடிச்சாங்க. அதுவும் ரௌடிகளை அடிக்கிற மாதிரி கையில கிடைச்சதை எல்லாம் எடுத்து அடிச்சாங்க. அங்கே இருந்து ஐ.சி.எஃப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கேயும் அடி. வலி தாங்காம நான் மயங்கிட்டேன். 'ஏழு வருஷம் உங்களால வெளியே வர முடியாது. ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்ட தம்பி’னு அக்கறையா பேசுற மாதிரி மிரட்டினாங்க. யாரையும் பாத்ரூம்கூட போகவிடலை. 'வலி தாங்க முடியல. காதுல அடிச்சதுல வாந்தி வருது. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போங்க’னு சாரதி அண்ணன் சொன்னார். போலீஸ்காரங்க கண்டுக்கலை. அப்புறம் சைதாப்பேட்டை கோர்ட்ல ஆஜர்படுத்தி, புழல் சிறையில அடைச்சாங்க!''
''அங்கே என்ன நடந்தது?''
''எங்களை புழல் சிறைக்குள்ள கூட்டிட்டுப் போனப்ப அதிகாலை 3 மணி. சிறைவாசல்ல நிக்கும்போது ஏதோ முதலை வாய்க்குள்ள போற மாதிரியே இருந்துச்சு. அங்க இருந்த ஜெயிலர், 'ஏன்டா... டாஸ்மாக் கடையை உடைக்கிற அளவுக்குத் தைரியம் வந்துருச்சா? கழட்டுங்கடா சட்டையை’னு மிரட்டினார். 'சார்... மதுக்கடையை மூடணும்கிற கோரிக்கைக்காகத்தான் உள்ளே வந்திருக்கோம். நாங்க கிரிமினல் கைதிகளா, சட்டையை ஏன் கழட்டணும்?’னு நான் கேட்டேன். எதுவும் சொல்லாம உள்ளே அனுப்பிட்டாங்க.
மறுநாள் சில சிறை அதிகாரிகள் நாங்க இருந்த அறைக்குள்ள வந்தாங்க. 'எவன்டா 'சட்டையைக் கழட்ட மாட்டேன்’னு சொன்னது, என்ன மரியாதை வேணும்டா உங்களுக்கு?’னு சொல்லி, ஃபைபர் லத்தியால அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க; பூட்ஸ் காலால உதைச்சாங்க. என்னால வலி தாங்க முடியல. அடிபட்டவங்களுக்குச் சிகிச்சையும் கொடுக்கலை. அப்புறம் மனநல ஆலோசகர் ஒருத்தர் வந்தார். 'இங்க பயன்படுத்துறது எல்லாம் ஃபைபர் லத்திதான். அதுல அடி வாங்கினா, 40 வயசுக்குப் பிறகு நரம்பு வளைஞ்சு செத்துப்போயிடுவீங்க. டவர்ல இருக்கிற இருட்டு ரூமுக்குள்ள கூட்டிட்டுப்போய் அடிச்சே கொன்னுடுவாங்க’னு பயமுறுத்தினார். இப்படி உடல்ரீதியாவும் மனரீதியாவும் சித்ரவதை பண்ணிட்டே இருந்தாங்க. அப்புறம் எங்க வக்கீல்கள் முயற்சியால ஜாமீன்ல வெளியே வந்தோம். அதுக்குள்ள ஆயுசுக்குமான சித்ரவதைகளை அனுபவிச்சுட்டோம்!''
''ஜெயில்ல இருந்து வந்ததும் சக மாணவர்கள் எப்படிப் பார்த்தாங்க?''
''எங்க பசங்க, அதைச் சின்ன விழாவா கொண்டாடிட்டாங்க; 'வெல்கம் மாரி’னு கேக் ஊட்டினாங்க; 'ஜெயில்ல வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட் கொடுத்தாங்களா?’னு கேட்டு கேலி பண்ணாங்க. ஒரு நல்ல விஷயத்துக்காக ஜெயிலுக்குப் போனவன்னு என்னை மரியாதையாத்தான் நடத்தினாங்க. அன்னைக்கு ஸ்கூல்ல காலாண்டுத் தேர்வு நடந்துச்சு. உடனே போய் தேர்வு எழுதினேன். தேர்வு முடிஞ்சதும் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, 'உன் மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. இனி ஸ்கூலுக்கு வராதே’னு சொல்லிட்டாங்க. நான் 10-ம் வகுப்புல 409 மார்க் எடுத்தேன். நல்லா படிப்பேன்னு ஆசிரியர்களுக்குத் தெரியும். ஆனாலும், உள்ளே விடலை.
கூட இருந்த ஆசிரியர் ஒருத்தர், 'எல்லா அரசு தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு கூட்டம் நடந்துச்சு. 'உங்க ஸ்கூல்ல இருந்து இனி யாராவது மதுவிலக்குப் போராட்டத்துல கலந்துகிட்டா நீங்க ஹெச்.எம்-மா இருக்க முடியாது’னு கல்வி அதிகாரிகள் மிரட்டியிருக்காங்க’னு சொன்னார். போலீஸ்காரங்க ஸ்கூலுக்கே வந்து, 'மாரிமுத்துவைச் சேர்க்காதீங்க’னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அப்படி நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? 'மதுக்கடையால எங்களைப் போன்ற மாணவர்களும் சீரழியுறாங்க. அந்தக் கடைகளை மூடுங்க’னு சொல்றது தப்பா? நல்லது, கெட்டது தெரிஞ்சுக்கத்தானே படிக்கிறோம். அப்புறம் தப்புக்கு எதிரா போராடினா தப்பா?''
''உன் அப்பா, அம்மா என்ன சொன்னாங்க?''
''அப்பா சீதாராமன், கூலி வேலைக்குப் போறார். அம்மா சல்சா, சித்தாள். வீட்டு வாடகை கொடுக்க முடியலை. இப்ப சத்திரத்துல தங்கியிருக்கோம். நான் போராடுனதை அவங்க தப்பா எடுத்துக்கலை. என்ன... எங்க அம்மா, அப்பாகூட என்னை இதுவரை அடிச்சது இல்லை. போலீஸ்கிட்ட வாங்கினதுதான் முதல் அடி!''
மீண்டும் பள்ளிக்குச் செல்கிறார் மாரிமுத்து!
''கைது செய்யப்பட்ட மாணவர்கள், 'எங்களை சிறைக்குள்ளும் தாக்கினார்கள்’ என்கிறார்களே?'' என புழல் சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனிடம் கேட்டேன். ''மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் அனைத்தும் வெளியில் நடந்தவை. நாங்கள் யாரும் அவர்களை அடிக்கவில்லை. அடிபட்டு வந்தவர்களுக்கு நாங்கள் சிகிச்சை மட்டுமே அளித்தோம். சக கைதிகளைப் பற்றி அவர்கள்தான் தவறாகப் பேசினார்கள். அதனால் கைதிகளே கோபப்பட்டார்கள்.
''21 வயது நிரம்பாத மாரிமுத்துவை எப்படி பொது கைதிகளுக்கான சிறையில் அடைக்கலாம்?''
''நான் உடனே விசாரிக்கிறேன். மாஜிஸ்ட்ரேட் அனுப்பும் குறிப்புகளை வைத்துத்தான் கைதிகளை உள்ளே அனுப்புகிறோம். மற்றபடி அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை'' என்றார்.
'மாரிமுத்துவை ஏன் பள்ளியில் இருந்து விலக்கினீர்கள்?’ என்ற கேள்விக்கு மதுரவாயல் அரசுப் பள்ளி தரப்பில் யாரும் பதில் அளிக்க முன்வரவில்லை. மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் பழனிச்சாமியிடம் பேசினேன்.
''நீங்கள் விசாரிப்பதுபோல அதிகாரிகள் தரப்பில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு எந்த நெருக்குதலும் கொடுக்கப்படவில்லை. அந்த மாணவரின் பெற்றோர் கடிதம் கொடுத்தால் போதும். மீண்டும் பள்ளியில் சேர்ந்துவிடலாம். இதைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை' என்றார்.
மறுநாளே பள்ளிக்குச் சென்ற கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியரிடம் பேசி மாரிமுத்துவை பள்ளிக்குள் அனுமதித்தனர். இப்போது மாணவர் மாரிமுத்து பள்ளிக்குச் செல்கிறார்!
ஆ.விஜயானந்த்
நன்றி: ஆனந்த விகடன் - 14 Oct, 2015


உங்கள் பார்வைக்கு..

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஏட்டிலும் எழுத்திலும் சொல்ல முடியாத அநியாயம் நடக்குது நண்பரே.....

      நீக்கு
  2. மாரிமுத்துவின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒவ்வொருத்தரும் இருந்தா...... சாராய சம்ராஜ்ஜியம் மடிந்து போவது திண்ணம் நண்பரே....

      நீக்கு
  3. மனதார சொல்கிறேன் தோழரே நல்ல சாவு வராது........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செத்த பிறகு நல்ல சாவு..கெட்ட சாவு... எதுவும் இல்லை நண்பரே......

      நீக்கு
  4. சமூக நிலையை நோக்கும்போது வேதனையே மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
  5. இந்த இழவுக்குத்தான் நான் ஆப்பிரிக்க ஆஸ்திரேலியாவுல பிறந்து தொலைச்சிருக்கனும்!

    இதுவா சமூகம் த்தூ தூ ,..
    அடப்போங்கடா?

    பதிலளிநீக்கு
  6. வலிகள் நிறைந்த வாழ்கையில் நிச்சயம் ஒரு நாள் விடியல் பிறக்கும்... மாரியின் போராட்ட குணம் இதை மாற்றும்...

    பதிலளிநீக்கு
  7. அதென்ன அந்தக் கடைசி படம்...ரொம்ப நல்லாருக்கு...வாழ்க தமிழகம்...!! ஹும்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...