வியாழன் 05 2015

என் தந்தையின் விடுதலையோடு..எங்கள் போராட்டம் தொடரும்...




Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 5 பேர்ஆகியோருடன்
என்  தந்தையின் விடுதலையோடு....... 
டாஸ்மாக் நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம்தொடரும்!

– புரட்சிகர பாடகரின் மகன் வழக்குரைஞர் சாருவாகன்!
மக்களின் குடியை கெடுத்து, மக்களை சிந்திக்க விடாமல் செய்த டாஸ்மாக்கை மூடு என்று கூறியதற்காக, அரசுக்கு எதிராக சதி செய்ததாகவும், இரண்டு பிரிவினரிடையே கலவரம் தூண்டியதகாவும் சொல்கிறார்கள். யார் அந்த இரண்டு பிரிவினர்? குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்களா…?
எதிர்த்து பேசினால் சிறை, துப்பாக்கி சூடு என்று இந்த அரசு பயத்தையும், பீதியையும் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்குகிறது.
இவர்களின் பார்வையில் போராடாமல் இருப்பதுதான் அறப்போராட்டம். சாதாரணமாக நீதிமன்றத்தில் கருப்புத்துணி கட்டி நின்றாலே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுகிறார்கள்.
எழுத்தாளர்கள் கல்புர்கி போன்றோர் கொலை செய்யப்படுகின்றனர். நாடே பாசிச சூழ்நிலையில் இருக்கிறது. கருத்துரிமை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் இந்த பாசிச அரசால் என் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்...
- சாருவாகன், வழக்குரைஞர்
( புரட்சிகர மக்கள் பாடகர் தோழர் கோவனின் மகன்)

********
“டாஸ்மாக் நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!
சிறை கம்பிகளால் எங்கள் இசையை ஒடுக்கி விட முடியாது. 
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக எப்போதும் ஓங்கி ஒலிக்கும் எங்கள் புரட்சிகர பறை!”

- என்கின்றனர் ம.க.இ.க வும், மக்கள் அதிகாரமும். மேற்கண்ட வீடியோவில்்
(நக்கீரன் வீடியோவிலிருந்து...)

12 கருத்துகள்:

  1. நல்ல தீர்வு விரைவில் வரும் !

    பதிலளிநீக்கு
  2. டாஸ்மாக் நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம்தொடரும்//

    குடிக்கும் குடிமகன்கள் மொத்தமாக இறந்தால்தான் இது சாத்தியப்படும் போல இருக்கிறது நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. இவருக்கு ஏதாவது நடந்தால் அதற்க்கு அரசை விட இந்த நன்றி கெட்ட மக்களே காரணம் நண்பரே,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான் நண்பரே

      நீக்கு
  4. தேர்தல் தற்காலிக தீர்வை கட்டாயம் தரும். அதை நிரந்தரமாக்குவது மக்கள் கையில்தான் உள்ளது.
    செய்வீர்களா..! நீங்கள் செய்வீர்களா..!!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தலில் டாஸ்மாக்கை மூடுவோம் என்ற வாக்குறுதியை நிறை வேற்றினால்..தாங்கள் சொன்ன தற்காலிக தீர்வு ஏற்படும் நண்பரே... ஆனால் சாராயம் விற்ற பணத்தில் ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்து மீண்டும் சாராயமே ஆட்சி வந்துவிட்டால்.....??????

      நீக்கு
  5. வலிக்கிறது நண்பரே.....
    பதிவென்னும் மருந்தினில் குறைகிறது கொஞ்சம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு வழியில்லை.. சிகிச்சை பெறுவது வரை வலியை அனுபவித்துதான் ஆக வேண்டும் நண்பரே.....

      நீக்கு
  6. அரசும், மக்களும் ஒத்துழைத்தால் எல்லாமே நல்லதாய் முடியும்....மக்களும் விழிப்புணர்வு பெற்றார்கல் என்றால் விடியல் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .மக்கள் விழிப்புணர்வு பெறக்கூடாது என்பதுதானே சாரயம் விற்பதின் நோக்கமே...நண்பரே

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...