செவ்வாய் 05 2016

மீண்டும பணிரெண்டாக இருக்கிறேன் .........


Image result for மர்மக்காய்ச்சல்
படம்-


முடிந்தது  என்று நிணைத்தேன்
முடியவில்லை இன்னும் பாக்கி
இருக்கிறது என்று இயற்கை
விட்டு வைத்து இருக்கிறது.

இருப்பதற்குள் பாக்கியை அடைக்க
முடியாது என்று தெரிந்து இருந்தும்
எதோ ஒரு காரணத்திற்காக..என்
வாழ்நாள் நீட்டிக்கப் பட்டு இருக்கிறது
அந்தக் காரணம் எதுவென்று தெரியவில்லை
பத்தோடு பதினொன்றாக இல்லாமல்
பணிரெண்டாக இருக்கிறேன் என்று
மீண்டும்  அனைவருக்கும் தெரியப் படுத்திக்
கொண்டு தொடருகிறேன். நன்றி!

19 கருத்துகள்:

  1. தோழர் நலம்தானே ?...

    சாமானியன்.

    பதிலளிநீக்கு
  2. பத்தோடு பதினொன்றாகாக இல்லாது 12ஆக,இயற்கை இன்னும் விட்டு வைத்திருக்கிறது???
    "பதிவுலகின் பத்திரமாற்று தங்கத்தை" என்று
    எண்ணிக் கொள்ளட்டுமா தோழரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரமாற்றுத் தங்கமும் ஒரு நாள் காணமல் போகும் நண்பரே.....

      நீக்கு
  3. நண்பரே நலம்தானே ஏனிந்த நினைவுகள் நடப்பது நன்மைக்கே.... தொடருங்கள் மீண்டும் எழுச்சியுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்தவைகளை நிணைத்து பார்த்தால் தானே அடுத்து கவனமுடன் இருக்க முடியும்ஜீ அதற்க்காகத்தான்ஜீ

      நீக்கு
  4. கடந்த வாரம் ஒருநாள் கைபேசி வழியாக ,தங்களின் உடல் நலம் குறித்து விசாரித்தேன் !நன்றாக உறக்கத்தில் இருப்பதாக சொன்னார்கள் !
    நலமாகி தொடர்வதற்கு மிக்க மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்ஜீ தாங்கள் விசாரித்ததால் நிரந்தர உறக்கத்திலிருந்து விழித்து நலமாகி தொடர வந்தேன் ஜீ....

      நீக்கு
  5. நண்பரே, என்ன நடந்தது? நானும் தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் வலைப்பக்கம் அதிகம் வரவில்லை.
    தற்போது நலம்தானே!

    பதிலளிநீக்கு
  6. நலம் பெற்றது மகிழ்ச்சி.
    ஆரோக்கியம் கொண்டவர்களுக்கு எப்போதாவது நோய் வந்தால் அதை ரொம்ப சீரியஸா அவர்கள் எடுத்து கொள்வார்கள் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரியாஸா எடுத்துக் கொள்ளவில்லை..சீரியஸா ஆக்கிவிட்டது நண்பரே.......

      நீக்கு
  7. நலம்தானே நண்பரே..? சீக்கிரம் நலமடையப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. என்னாச்சு? ஏன் இம்மாதிரி பதிவு? எதுவாயிருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என எதிர்கொள்ளுங்கள் ஐயா? என்னப்போல்? ஹாஹா?

    பதிலளிநீக்கு
  9. எப்போதும் நம்மை நாமே பத்தில் ஒன்றென சொல்ல கூடாது. பத்தில் முத்து நாம் தான் என எண்ணிக்கொண்டால் உடல் உள பலவீனங்கள் நம்மை விட்டு அகன்றோடும்.

    பதிலளிநீக்கு
  10. நலம் தானே வலிப்போக்கரே,

    உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விசாரிப்பினால் நலமடைந்தேன் நண்பரே...உடல்நலனை கவனமாக பார்த்துக் கொள்கிறேன். நன்றி! நண்பரே.......

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...