செவ்வாய் 12 2016

தமிழர் என்றோர் இனமுண்டு...???..


Withdraw Jallikattu ban plea or resign: Govt tells animal board
படம்-ஒன்இந்தீயா



“என்னடா,....ஆளையே! காணோம் எங்க போயிருந்த....”

“டீவி பாத்துகிட்டு இருந்தேண்டா...” சல்லிக்கட்டுக்கு தடை விதிச்சிட்டாங்க தெரியுமா...”

“ உடனே , அலங்காநல்லூரில் வீரத்தமிழர்கள் எல்லாம் வானத்துக்கும் பூமிக்கு குதித்திருப்பாங்களே....!!டா....”

“ஆமாடா,...எல்லா செய்தி செனல்காரன்களும் அங்கதாண்டா   குவிஞ் கிடந்தாங்கே...”டா.....

“ அவிங்க பொழப்பே ...அதுதானேடா....”


என்ன இருந்தாலும் சல்லிகட்டு வீர விளையாட்டு தான்..அதுக்கு தடை விதித்தது சரியில்லடா   ”

அடப்போடா, கிறுக்கபய தமிழா..... சல்லிப்பய விளையாட்டுக்கு தடை என்றவுடன் வருத்தமாகி விட்டதோ...”

பின்னே, இல்லீயா,... சல்லிப்பய விளையாட்டுக்குத்தாண்டா, அனைத்து கட்சி காரங்களும்  ஆதரவு தெரிவிச்சது எல்லாம் கிறுக்குதனமாடா...”

“கிறுக்கு தனமில்லடா....காரியத்தனம்டா.......”

“என்னடாச் சொல்ற.........”

ஆமாடா,....... சல்லிப்பய விளையாட்டுக்கு தடை என்றவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற வீரத் தமினுக்கு குடிக்கவும் ,,, குண்டி கழுவவும் தண்ணி இல்லேண்ணா என்ன பன்னுவான்.....”


“ என்ன பன்னுவான்”......

“ ஒன்னக் கேட்டா...... என்ன பன்னுவான்னு என்னையே கே்க்குறீயா....???”

“ என்ன பன்னுவான்னு  தெரியலைடா...” நீயே சொல்லு.... என்ன பன்னுவான்....!!!

அய்ந்து மாவட்டத்துக்கு நீர் ஆதாரமாகவும், விவசாயத் தொழிலுக்கு அடிப்படையாகவும் இருப்பது எந்த அணை டா...”

பெரியாறு அணைதாண்டா...”

“ அந்தப் பெரியாறு அணை , உறுதியாக இருக்குன்னு பல வருசமா இழுத்தடித்து  ஒரு தீர்ப்ப... சொன்னாங்கே தெரியுமா....????”

“   ஓ...... தெரியும்டா.......”142 அடிவரை தண்ணீர தேக்கலாமுன்னு  போட்ட உத்தரவுப்படி ரெண்டு தடவை  தேக்கி இருக்காங்கல.....”

“ பராவாயில்லையே படித்த படிப்புக்கு  தெரிஞ்சு வச்சு இருக்கிற...அத்தோட நான் சொல்றதையும் சேத்துக்க....”அணை உடையப் உடையப் போகுதுன்னு சொன்னவிங்க வாயில மண்ணு விழ..... வேறு வழியில்   வீரத் தமிழனுக்கு ஒரு ஆப்பு வச்சுட்டாங்கடா...”

“என்ன..ஆப்புடா...”

“ பொரியாறு அணைக்கு பாதுகாப்பு வேண்டி மத்திய தொழில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசுக்கு மனு கொடுத்தா....... வெளி மாவட்டத்திலிருந்து வேலைக்கு வந்து இங்கு குந்தியிருக்கிற நீதபதிங்கஉயர் நீதிமன்றத்துக்கும் மாவட்ட நீதிமன்றத்துக்கும் பாதுகாப்பு வேண்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுவிட்டாங்கடா....” இதப்பாத்த அடவாடி காரான கேரளத்து அரசியல் கட்சிக் காரனுங்களில் ஆளுங் கட்சிக்காரன்....பெரியாறு அணைக்கு பாதுகாப்புன்னு , 142 சிற்ப்பு போலீசாருன்னு சொல்லி குமளியில புதுசா ஒரு காவல் நிலையத்த ராத்திரி 8 எட்டுமணிக்கு திற்ந்து வச்சுருக்காங்கேடா...”

“ அதுல எதுவும் உள் குத்து இருக்குமோ...?????”

“ இருக்குமாவா.... உள் குத்து தாண்டா...” தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டு போலிசால பாதுகாப்பு இல்லாதபோது    142 கேரள போலீசுகாரன்  எப்படிடா தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பா இருப்பான்...”


“ ஆமா...”

“ சல்லிப்பய விளையாட்டுக்கு தடை என்றவுடன் குதியாய் குதிக்கிற வீரத் தமிழன்களுக்கு   , குடிக்கவும்,  பேண்ட குண்டி கழுவவும் தண்ணீயும் , விவசாயத்துக்கு நீரும்  இல்லேண்ண...என்ன செய்வாங்கே.....”“

“ என்ன செய்வாங்கே..... ஒரு ரூபாய்க்கி வாங்கி 15 ரூபாய்க்கி விக்கிறாங்களே அத வாங்கி குடிபாங்கே.....”

“சரிடா.... பேண்ட குண்டி கழுவ....????ஃ”

பேழாம இருப்பாங்கே....... அப்படியே பேண்டா  இருக்கவே இருக்கு நியூஸ் பேப்பரு.... அதுல தொடச்சிகிடுவானுங்கடா.....””

“சரி.... விவசாய   வேலைக்கு....”

“.............................”

என்னடா.... பேசு.........”

“ என்னத்த சொல்ல.......”

விவசாயம்  செழித்தாண்டி.... அந்த மப்புல... சல்லிக்கட்டு விளையாட முடியும்டா...... ஆக ..சல்லிப்பய விளையாட்டுக்கு காரணமாக இருக்கிற விவசாயம் செய்யுறதுக்கு தண்ணீ வேண்டுமடி வீரத் தமிழா..... அந்தத் தண்ணீருக்கான பெரியாறு அணையில்  அதே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா அடவாடி செய்யும் கேரளத்து அரசியல்காரனை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்து  முதலில் நம் உரிமையை மீட்டெடுப்பதை விட்டுட்டு சல்லிபய விளையட்டுக்கு குதித்து ... தமிழர் என்றோர்  இனமுண்டு பெருமைபட எந்தத் தகுதியும் இல்லைடா.... 







16 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே தாங்கள் சொல்வதில் உள் கருத்து இருக்கின்றது அருமை

    பதிலளிநீக்கு
  2. அதான் ,அடுத்த வரியிலேயே கவிஞர் சொல்லிட்டாரே ,தனியே அவருக்கு குணமுண்டுன்னு:)

    பதிலளிநீக்கு
  3. அருமையானபதிவு.
    //சல்லிப்பய விளையாட்டுக்குத்தாண்டா அனைத்து கட்சி காரங்களும் ஆதரவு தெரிவிச்சது எல்லாம் கிறுக்குதனமாடா...”

    “கிறுக்கு தனமில்லடா....காரியத்தனம்டா.......”//
    முற்றிலும் உண்மை. அனைத்து கட்சிகளின் பிழைப்புவாததனம்.
    சல்லிப்பய விளையாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! நண்பரே....சல்லிப்பய விளையாட்டை நிரந்தரமாக தடை செய்யவில்லை என்றாலும் மாடுகளின் கலப்பினத்தால் அதுவே தடை ஏற்ப்படுத்திக் கொள்ளும் நண்பரே.........

      நீக்கு
  4. முதலில் நம் உரிமையை மீட்டெடுப்பதை விட்டுட்டு சல்லிபய விளையட்டுக்கு குதித்து ...ம்ம் நியாயம் தான்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல அருமையான நெற்றிப் பொட்டில் அடித்தது போல...

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வைத்து விட்டீர்கள் நண்பரே!

    நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போன்ற கேள்வி . இது ஒவ்வொரு தமிழனுக்கும் பொருந்தும். நம் இனம் அர்த்தமற்ற கொள்கைகளை கையில் பிடித்துக் கொண்டு ஆதார தேவைகளை விட்டுவிடுகிறது. எது தேவை என்பதை தமிழன் உணரட்டும். நீருக்காக கொந்தளித்து எழும் கூட்டம் விரைவில் உருவாகட்டும்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் கருத்துரை போல் எது தேவை என்பதை தமிழன் உணரட்டும். நீருக்காக கொந்தளித்து எழும் கூட்டம் விரைவில் உருவாகட்டும்.... நண்பரே

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...