ஞாயிறு 21 2016

காதல்...போயின்...........


படம்-kungumamthozhi.wordpress.com

தனக்கு ஏற்ப்பட்ட துயரத்தையும் துக்கத்தையும் தாங்கிக் கொள்ள அவளால் இயவில்லை... அழுதழுது முகமே விகாரமாகிவிட்டது..

உயிருக்கு உயிராக தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன்...எந்தவித எதிர்ப்பு இன்றி தன்னை கரம் பிடித்தவன். அந்தக் காதலுக்கு பரிசாக ஒரு குழந்தையை பெற்றெடுக்க  வைத்தவன்..அள்ள அள்ள குறையாத சந்தோசத்தை கொடுத்தவன்

ஒரு நாள் திடீரென்று தன்னை விட்டு பிரிந்து போன துயரத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் அனலில் பட்ட புழுவாக துடித்தாள் புனிதா

காதலித்து கரம் பிடித்த இருவரும் வெவ் வேறு சாதியாக இருந்தாலும்.இரு சாதிகளும் மேல்நிலைசாதிஎன்ற அந்தஸ்தினால் அவர்கள் இருவரின் காதலுக்கும் திருமணத்திற்கும் சாதிவெறியர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் போனது. இதனால் சாதிய காப்பாளர்களிடமிருந்தும் இரு வீட்டாரின் பெற்றோர்களிடமிருந்தும் எந்தவித பிரச்சினை இன்றி வாழ்க்கை சந்தோசமாக போய்க் கொண்டு இருந்த நேரத்தில்  தான்..

இயற்கையின் தடையால்  புனிதாவின் காதல் கணவன் திடீரென்று அவளைவிட்டு பிரிந்தது.. புனிதாவின் அனைத்து சந்தோசத்தையும் பலிகடாவாக்கியது.

துக்கம் விசாரிக்க வந்தவரெல்லாம்..“அய்யோ..அய்யோ...பார் கண் பட்டதோ” என்று பரிதவித்து பாவப்பட்டுச் சென்றனர்.

புனிதாவால் அழாமல் இருக்க முடியவில்லை... வந்த அழுகையை அடக்கவும் முடியவில்லை... அழுது அழுது அவளின் காதல் கணவன் வர்ணித்த முகமே பாழாகிவிட்டது.

இன்று மூன்றாவது நாளோடு புனிதாவின் காதல் கணவன் இறந்த சடங்குகள் முடிந்துவிட்டது. உறவுக்காரர்கள் நண்பர்கள் எல்லாம் சொல்லாமல் விடை பெற்றுச் சென்று விட்டனர்

புனிதாவின் காதல்கணவனின் வீட்டாரும் துக்கததை ஒதுக்கி வைத்து அவரவர் பணிகளை செய்யத் துவங்கினர்.

மூன்று நாட்களாக பல்லில் பச்சை தண்ணிகூட படாமல் அழுது கொண்டிருந்த புனிதா..ஒரு முடிவுக்கு வந்தவளாக ..தன் பாலகனை தேடினாள்.. அவனோ வீட்டு வாசலிலே....தாயில்லாமல் பிறந்த கலர் கோழிக் குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டாள்.

அவன் சந்தோசத்தை கண்டு அழுதவள்.... வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டவள்...பாலகனை வாரியணைத்து வீட்டீற்குள் தூக்கிக் கொண்டு சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

“நீயின்றி நானில்லை,  நானின்றி நீயில்லை” என்றவனே.... இப்போது எங்களை  தனிமரமாய் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்டா...நீ எங்கு சென்றாலும் உன்னைப் பிரிந்து இருக்க மாட்டோம்..என்றவள் தன் மகனை அனுப்பிவிட்டு தானும் மகன் கைப்பிடித்து காதல் கணவனுடன் போய் சேர்ந்தாள்....






7 கருத்துகள்:

  1. நல்ல உணர்ச்சி பூர்வமான பதிவு ஐயா.மனம் நெகிழ்ந்து போனது ஐயா.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வேதனையான விடயம் நண்பரே உண்மைச் சம்பவமா ?

    பதிலளிநீக்கு
  3. முட்டாள்தனமான முடிவு !இவர்கள் காதலுக்கு குழந்தை பலிகடாவா ?

    பதிலளிநீக்கு
  4. நண்பரே.. இது எதிர்மறைச் சிந்தனை. போராட்டமே வாழ்க்கை. எதிர் நீச்சல் போட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஏன் இந்த முடிவு? முட்டாள்தனமான முடிவு. காதல் கணவன் இறந்தால் மனைவிக்கும் இறப்புதான் தீர்வா? அதுவும் குழந்தையுடன்? குழந்தை என்ன தவறு செய்தது? இது நல்ல முடிவல்ல. காதல் கணவனின் நினைவில் அவனது ஆசைகளை, இலட்சியங்களை நிறைவேற்றலாமே. அதில் கணவனைக் காணலாமே மனைவி. இது உணர்ச்சியின் மேலோட்டத்தின் முடிவு. என்னவோ மனது இதனை ஏற்க மறுக்கின்றது.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...