வியாழன் 17 2016

கணனிக்கள்ளன்...!!!!


கணனிக் கள்ளன் ஹம்சா பென்டலாஜ்.

படமும் தகவலும்-Tharmalingam Kalaiyarasan

படத்தில் நடுவில் உள்ளவரின்  பெயர் ஹம்சா பென்டலாஜ். வங்கிகளை "கொள்ளையடித்து" ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த நவீன ராபின் ஹூட். அல்ஜீரியாவை சேர்ந்த 27 வயது கணிப்பொறி வல்லுநர். 217 வங்கிகளின் கணணிகளை ஹேக் செய்து 4000 மில்லியன் டாலர்களை திரட்டினார். அனைத்தையும் ஆப்பிரிக்க, பாலஸ்தீன தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்து விட்டார். SpyEye என்ற வைரஸ் அனுப்பி அமெரிக்க வங்கிகளின் கணணிகளை ஹேக் செய்துள்ளார்.



தாய்லாந்தில் கைது செய்யப் பட்ட நேரம் எடுத்த வீடியோ:













, மரண பயம் இல்லாத சிரிப்பு...







10 கருத்துகள்:

  1. இவன் செய்த வேலையை ஒருபுறம் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை நண்பரே அவனது சிரிப்பு எதையும் வெல்லும்

    பதிலளிநீக்கு
  2. அவன் சிரிப்பு
    அவன் செய்ததை ஞாயம் என்பதைக் காட்டுகிறது
    இதைப் போல் யாரேனும் சுவிஸ் பாங்கில் உள்ள
    நம்மவர்களின் பணத்தைக் ஹேக் செய்து கொணர்ந்தால்
    எவ்வளவு சிறப்பாய் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. # ஹம்சா பென்டலாஜ்.#செய்த அம்சமான காரியத்துக்கு போலீஸ் ஃபெண்டை கழட்டியிருக்குமே:)

    பதிலளிநீக்கு
  4. உதவவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.... அறிவையும் அறிவியலையும் பயன்படுத்தி செயல்படுத்தி.... இரண்டையும் செய்து காட்டியாயிற்று என்ற மகிழ்ச்சி! அசாத்திய துணிச்சல் வேண்டும்.... பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. இவன் செய்தது திருட்டா....
    இவனுக்கு என் பாராட்டுக்கள்....
    பயமறியா சிரிப்பு
    எதையும் வெல்லும் ...

    பதிலளிநீக்கு
  6. இவர் செய்தது சட்டப்படிக் குற்றம் என்றாலும் நல்ல செயல் கணக்கில் கொள்ளலாம்...ஆனால் நம்மூரில் அரசியல்வாதிகள், பெரிய வியாபார முதலைகள் பகல் கொள்ளை மக்களிடமே அடித்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் போது..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...