வியாழன் 19 2016

புகை போக்கியான வாயும் கறை படிந்த கையும்...

சலசலவென்று பேசிக்
கொண்டு இருக்கும்
அவர்கள் அருகில்
சென்றால் குப்பென்று
சாராய வாடை
வீசும் இத்துடன்
பாக்கு வெற்றிலையால்
காவி ஏறிய
பறகளுடன் வாயின்
இரு ஓரங்கள்
வெந்து  போயிருக்கும்
அதனுடன் பிரியாணி
பருக்கை ஒட்டிக்
கொணடு இருக்கும்
அந்த வாயில் 
இருந்து  புகை 
போக்கியில் புகைபோல
புகை வந்து
கொண்டு இருக்கும்
அந்த கூட்டத்தில்
இருக்கும் ஆண்களுடன் 
பெண்களின் கைகளையும்
பார்த்தால் ஓட்டுக்கு
இருநூறு ரூபாய்
வாங்கியதற்கு அடையாளமாக
விரல் நுனியில்
தேர்தல் மையின்
கறை இருக்கும்.
     

8 கருத்துகள்:

  1. இவர்கள்தான், மக்கள் தீர்ப்பு சொல்லும் மகேசன்கள் :)

    பதிலளிநீக்கு
  2. இனி எதிர்காலமே குடிப்பதும், அம்மாவை விழுந்து வணங்குவதுமாக போகபோகிறது.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் வேறு மாதிரி
    சொல்லி இருக்கலாமோ
    காலம் போல ஓட்டின் மதிப்பும்
    கோடீஸ்வரனுக்கும்
    பிச்சைக்காரனுக்கும் ஒன்றுதான்
    அவர்களது கருத்தும் மதிக்கத் தக்கதே

    பதிலளிநீக்கு
  4. கறைகள் படிந்த கைகள்தான் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. இனியும் இது தொடரும் நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. தேர்தல் மையின் கறை தெரிந்துவிட்டதே! மாற்றம் மாற்றம் வேண்டும் என்று சொன்னது இதுதானோ.?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அருமையான தகவல்
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...