புதன் 25 2016

நகையை ஆட்டையை போட்ட கூட்டுறவு வங்கி....



வெங்கடேசன் என்ற விவசாயி.. தன்னுடைய மூன்று பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து பயிர் கடன் பெற்றார்.

விவசாயம் சரியில்லாத காரணத்தால் இரண்டு ஆண்டு கழித்து தன் அடகு வைத்த நகையை திருப்பச் கூட்டுறவு வங்கிக்குச் சென்றார்.

அங்கிருந்த கூட்டுறவு வங்கியின் செயலாளர் தனசேகரன் மற்றும் வங்கி கிளார்க்குகள் “ உங்களுடைய நகையை ஏற்கனவே, நீங்கள் திருப்பி விட்டீர்களே... என்று ஒரே போடாக போட்டனர்

சற்று அதிர்ச்சி அடைந்த விவசாயி... சுதாரித்து..“ அதெப்படி அடகு ரசீதும், கடன் அட்டையும் என்னிடம் இருக்கும்போது நான் எப்படி திருப்பி இருப்பேன் என்று பதிலுக்கு  மடார் மடார் என்று   போட்டு உடைத்தார்.

அரண்டு போன கூட்டுறவு செயலளர் மற்றும் கிளார்க்குகள் தாங்கள் அரண்டு போனதை வெளியில் காட்டிக் கொள்ளாமல். ஏய்.. என்ன நாங்க யாரு தெரியுமில்ல... எங்ககிட்டேயா என்ற ரீதியாக.வெங்கடேசனை மிரட்டினார்கள்.

அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாத விவசாயி வெங்கடேசன். நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன், மேல் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று இவரும் பதிலுக்கு அவர்களை மிரட்டினார்.

வழக்கு போட்டால் வாய்தா போட்டே கொல்லும் நீதி மன்றமும், விசாரனை என்ற பெயரிலே நாளைக் கடத்தும் அதிகாரிகளும் அவர்களின் ஆட்கள்தான் என்பதை அறியாத கூட்டுறவு செயலரும் கிளார்க்குகளும். விவசாயி வெங்கடேசன் மிரட்டலுக்கு பின் வாங்கியதுபோல் ...உங்கள் நகை ஜெயராணி என்பவருக்கு மாற்றி கொடுத்துவிட்டோம். அதை திரும்ப வாங்கி உங்களிடம் கொடுக்கிறோம் என்று பக்காவா ரீல் விட்டனர்

இவர்களில் ரீலில் நம்பி காத்திருந்த விவசாயி வெங்கடேசனுக்கு அன்று மாலை ஒரு பழைய நகையை கொடுத்தனர். அதை வாங்க மறுத்து கூட்டுறவு துணை பதிவாளரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த துணைப்பதிவாளரோ.. ஏதாவது ஒரு நகையை வாங்கிச் செல்லுங்கள். பிரச்சினையை கிளப்பாதீர்கள் என்றார்.

நொந்து போன வெங்கடேசன்... அடகு வைத்த நகையை ஆட்டையை போட்ட கூட்டுறவு வங்கியின் மோசடி தொடர்பாக மாவட்ட கலெக்டர் வீர வீரராகவா ராவிடமும்  மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளரிடமும் புகார் கொடுத்து முறையிட்டார்.
.
கூட்டுறவு வங்கி ஆட்டையை போட்ட நகை கிடைக்குமா? கிடைக்காதா ?? என்ற விவரம் ஒன்றும் தெரியவில்லை..


5 கருத்துகள்:

  1. கூட்டுறவை இப்படி சீரழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் ,ஏழை என்றால் இளக்காரமா ?

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக கிடைத்தே தீரவேண்டும்... இல்லையேல் நிச்சயம் போராடுவோம் அய்யா..

    பதிலளிநீக்கு
  3. இப்படி எல்லாம் செய்பவர்கள் விஜய் மல்லையாவை மட்டும் ஒன்றும் செய்ய வக்கு இல்லையே எப்படி ?

    பதிலளிநீக்கு
  4. அடப்பாவிகளா இப்படியுமா ஆட்டைய போடுவாங்க

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...