செவ்வாய் 07 2016

அதிகாலை கனவுகள்-2



கனவில் அறிந்த நீதி. நிஜத்தில் மறந்த நீதி,

முகம் தெரிந்த ஒருவரிடம்.. முகம் தெரியாத ஒருவர் அழுது கொண்டு தன் குறையை அவரிடம் சொல்கிறார்

முகம் தெரிந்தவருக்கு பழக்கமான ஒருவரின் பெயரை குறிப்பிட்டு பழக்கத்தின் அடிப்படையில் கடன் கொடுத்தேன். கடந்த ஒரு வருடமாக வட்டி எதுவும் தரவில்லை. சரி கொடுத்த பணத்தையாவது தரச் சொல்லி கேட்டும்.  பல நாட்களாக வாய்தா சொல்லியும் பணம் தரவில்லை. சண்டையிட்டு கேட்டபோது..ஒரு பொய்யைச் சொல்லி சரியாய் போய்விட்டது,  பணம் தர முடியாது. செய்வதை செய் என்கிறார். தாங்கள்தான் எப்படியாவது அவரிடம் பேசி கொடுத்த பணத்தில் பாதியையாவது கொடுக்கச் சொல்ல வேண்டும் என்றார்.

முகம் தெரிந்தவரோ...கடன் வாங்கியவரை கூப்பிட்டுவரச் சொல்லி ஒரு ஆளை அனுப்புகிறார். அவர் வரட்டும். தாங்கள்  அடிதடியின் போது நடந்த வகையிலஉண்மை விவரத்தை சொல்லுங்கள் என்றார்.

முகம் தெரியாதவர் சிறிது நேர அமைதிக்குப்பின்.  நடப்பு விவரத்தை சொன்னார். 

கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டு போகும்போது  கடன் வாங்கியவரின் மனைவிக்கும் கடன் கொடுத்தவருக்கும் நட்பாகி அது காதலாக வளர்ந்து இருந்தது. அந்தக் காதலின் பயனாக கடன் வாங்கியவரின் மனைவிக்கும் வட்டியில்லாமல் பணம் கொடுத்துள்ளார்.

ஒருநாள் கடன் கொடுத்தவருக்கு அவரின் குடும்பத்தில்  வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது..அந்த சிக்கலை தீர்ப்பதற்க்காக கடன் வாங்கியவரிடம் சென்று தன் குடும்ப சிக்கலைச் சொல்லி தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு இருக்கிறார். கடன் வாங்கியவரோ..வாங்கிய கடன் பணத்தை திருப்பித் தராமல் நாட்களை கடத்திக் கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நெருக்கி பிடித்து  சண்டையிட்டு அடிதடியாகி பணத்தை கேட்டபோது.. கடன் வாங்கியவரின் மனைவியுடன்  கடன் கொடுத்தவர் தொடர்பு வைத்திருந்து  பலமுறை உறவு கொண்டதால் நீ கொடுத்த பணமும் வட்டியும் சரியாப் போச்சு, பணம் தரமுடியாது என்று ஒரு பானத்தை வீசினார்..

அதிர்ந்து போன கடன் கொடுத்தவர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தபடி  கடன் வாங்கியவரின் மனைவிக்கு  அவர் வாங்கிய கடன்  பணத்தை விட அதிகம் செலவழித்து உள்ளதாகவும் தெரிவித்து. அந்த பணம் கூட எனக்குத் தர வேண்டாம். இவர் வாங்கிய கடனில் பாதியாவது  நீங்கள் தரச் சொல்லுங்கள்  என்று  மேற்கண்ட முகம தெரிந்த நண்பரிடம்  மேற்கண்டவாறு அழுது முறையிட்டு கொண்டு இருந்தார்.

கடன் வாங்கியவர் வந்தவுடன் அவரிடம் நடந்த விபரத்தைக் கேட்டார்.

கடன் வாங்கியது உண்மைதான். அந்தக் கடனுக்கு வட்டி வாங்குற சாக்கில் என் பொண்டாட்டிகூட எத்தினவாட்டி படுத்திருப்பான். வேறு ஒருத்தனா இருந்தா இன்னேரம் வெட்டி கண்டதுண்டமா ஆக்கியிருப்பான்ல...எதோ ஒரே சாதிசனமா இருந்ததினாலும் உங்க்கிட்ட பழக்கமா இருக்கானே என்றுதான் விட்டு வைத்திருக்கேன்...இந்த லெட்சனத்தல தாய..ஒளி பணத்த கொடுன்னு கேட்கறான். எவ்வளவு நெஞ்சழுத்ம் இருக்கன்னு பாரேன்  என்று கடன் வாங்கியவர். வந்தவர் கோபமாக  பேசிய பொழுது.

முகம் தெரியாதவர். அவரை சத்தம் போட்டு அமைதி படுத்தினார்.

இருவரும் அவருக்கு முன் அமைதியாக இருந்தனர்..முகம் தெரிந்தவர்  செல்போனில் பேசி முடித்த்தும்.இருவரிடமும் பொதுவான் நடைமுறைகளை பேசிவிட்டு தான் சொல்படி இருவரும் நடந்தால் இரு வீட்டாருக்கும் நல்லது என்று கூறிவிட்டு பல விசயங்களை பேசி .இருவருக்கும் பொருத்தமான் ஒரு நீதியையும் தீர்ப்பையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல இருவரும் சரி...சரி...சரி என்று அவர் கூறியபடியே நடப்பதாக கூறிவிட்டுச்  நிம்மதியுடன் சென்றனர்.

முகம் தெரிந்த நபர் சொன்ன தீர்ப்பும் நீதியும் என்னவென்று  கனவில் தெரிந்து இருந்த எனக்கு.. விடிந்த பின்... முகம் தெரிந்தவரின் முகமும் அவரின் சொன்ன தீர்ப்பும் நீதியும் நினைவுக்கு வரவில்லை நானும் முயற்சித்தும்  எனக்கு தலைவலிதான் வந்த்து.

படித்துவிட்ட நண்பர்கள் அவர் என்ன தீர்ப்பு சொல்லி இருப்பார் என்று, தாங்கள் அறிந்தவற்றை தெரிந்தவற்றை சொன்னால் கனவில் கண்ட அந்த்த் தீர்ப்பு இதுதான் என என் நினைவுக்கு வருகிறதா..என்று சரி பார்த்துக்கொள்வேன்.

6 கருத்துகள்:

  1. இன்னும் கொஞ்சம் பணத்தைக் வட்டிக்கு பதிலா ,அந்தாள் பெண்டாட்டியை நிரந்தரமா வச்சுக்கோன்னு சொல்லி இருப்பாரோ :)

    பதிலளிநீக்கு
  2. வளமான கற்பனை வளம், பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. பணத்தைக் 'கொடுத்து '..என்பதை சேர்த்து வாசிக்கவும் :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல காதல் ஜோடிகள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. என்ன உறவோ, என்ன நீதியோ..
    என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...