வியாழன் 23 2016

வாக்குரிமையால் என்ன பயன்..?


அந்தக் கருத்தரங்க கூட்டம் முடிந்ததும். அவருடைய சிந்தனையில் இவைதான் நிகழந்தது.

என்ன பயன்? அவற்றால் என்ன பயன்? என்றுதான் அவர் மனது அசை போட்டது. வீட்டிற்கு சென்றவுடன் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக வாயினால் சொல்லி பார்த்துக் கொண்டார். மேலும் மறக்காமல் இருப்பதற்க்காக பேப்பரில் எழுதியும் பார்த்துக் கொண்டார்.

அவர் எழுதிய பேப்பரில்  எழுதி .இருந்தது.

1.. மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு எழுத்தறிவே இல்லாத போது எழுத்துரிமையால் என்ன பயன்?

2. கல்வி அறிவு  இருந்தும்  லட்சகணக்கில் பணமின்றி பத்திரிகை நடத்த முடியாதபோது கருத்துரிமையால் என்ன பயன்??

3. வேலை வாய்ப்பே இல்லாத போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன்???

4. இருக்கும் தொழிலே நசிந்து கொண்டு இருக்கும் பொழுது எங்கு வேண்டுமானலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன்????

5. பட்டினியால் சுருண்டு கிடப்பவர்க்கு வாழ்வுரிமையால் என்ன பயன்?????

6. உணவு. தண்ணீர், மின்சாரம், சாலை, கல்வி, மருத்துவம், வேலை போன்றவற்றில் எதுவுமே வழங்க முடியாத போது வாக்குரிமையால் என்ன பயன்??????..

நானும் படித்தபோது எனக்கும் அதேதான் எனது மனதிலும் தோன்றியது.


7 கருத்துகள்:

  1. இதுக்குத்தான் படிக்காத பாமரன் ,வாக்கை விற்று காசாக்கி கொள்கிறான் :)

    பதிலளிநீக்கு
  2. ஏற்றுக்கொள்ளக்கூடிய அற்புதமான உண்மை நண்பரே.....

    பதிலளிநீக்கு
  3. மக்களில் பாதிப்பேருக்கு எழுத்தறிவு இருக்கிறது. அந்த பாதிப்பேரில் கொஞ்சம்பேர் நினைத்தாலே மீதிப்பேர்களில் படித்தவர்களை முடியும்.

    பத்திரிகை நடத்திதான் கருத்துத் தெரிவிக்க வேண்டிய நிலை இன்றில்லை. பத்திரிகைகளும் பணம் சம்பாதிக்கத்தானே தவிர, நடுநிலையோடு இன்று பத்திரிகை ஏதுமில்லை. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

    எங்கு சென்றும் பிழைத்துக் கொள்ளலாம். நேற்று செய்தித் தாளில் ஒரு செய்தி படித்தேன். ஹரியானாவிலிருந்து சில சர்தர்ஜிகள் ராமாநாதபுரம் வறண்ட பூமியில் நிலம் வாங்கி சொட்டு நீர்ப்பாசனம் போல செய்து ஒரு அழகிய பழத் தோட்டத்தையே உருவாக்கி இலாபம் பார்க்கிறார்கள். இதே அளவு நிலம் அவர்கள் ஊரில் வாங்க இங்கு அவர்கள் செலவு செய்தது போல 10 மடங்கு செலவு செய்திருக்க வேண்டுமாம்.

    பட்டினியால் வாடுபவர்க்கும் வாழ உரிமை உண்டு. வல்லான் வகுத்ததே விதி என்று செல்வந்தர்கள் அவர்களை இல்லாமல் செய்துவிடக் கூடாதே...

    நம் கடமையைச் செய்யாமலிருக்க மற்றவர்கள் மீது குறை சொல்லக்கூடாது.

    "நாடென்ன செய்தது நமக்கு
    என்று கேள்விகள் கேட்பது எதற்கு?
    நீ என்ன செய்தாய் அதற்கு?
    என்று நினைத்தால் நன்மை உனக்கு.."

    என்று கவிஞர் பாடி இருக்கிறாரே...

    பதிலளிநீக்கு
  4. இவ்வாறான சிந்தனைகள் எழுந்ததே பயன்கள் எனக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் அதேதான் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  6. என்னாச்சு நான் போட்ட கருத்து :)

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...