திங்கள் 06 2016

மீசையா?...முக்கியம், மூக்கு தானே முக்கியம்...!!



அவரை பார்க்கும் போதெல்லாம் இவருக்கு வித்தியாசமாக தெரிந்தார் அவர். அது என்ன வித்தியாசம் என்று இவருக்கு தெரியவில்லை. ஆனால்  அவரிடம் வித்தியாசம் தெரிந்தது உண்மை. வேலைகளில் முழ்கி அலைந்து திரிந்த்தால் அந்த வித்தியாசத்தை அறிய முடியாமல் தள்ளி வைத்துவிட்டார்.

ஒருநாள், வேலைகள் எல்லாம் முடிந்து ஓய்வாக இருந்த சமயத்தில் அவரின் நிணைவு வந்தது இவர்க்கு. அப்படிநிணைவு வந்தவுடன் அந்த நிணைவை ஒதுக்கி தள்ளி விடாமல் உடனே தன் செல்போனில் அவருடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அத்தோடு அவரும் அதை மறந்துவிட்டார்.

திரும்பவும் ஒருநாள். இவர் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த வேளையில். அவர் வருவதைப் பார்த்தார்.. எதோ யோசனையில் சென்றவரை அவர் பெயர் சொல்லி அழைத்தார் இவர்.. அவர் இவரைக் கண்டதும் ஆச்சரியப்பட்டவர் போல் காட்டி, முகத்தில் புன்னகை தவழ இவரிடம் வந்து நின்றார் அவர்.

வந்தவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து..தான் கைப்பேசியில் தான் தொடர்பு கொண்டதை தெரிவித்தார் இவர். அவர் கைப்பேசியில் சார்ஜ் இல்லை என்பதை தெரிந்து. கொண்டவுடன்...அவரிடம் தெரியும் வித்தியாசத்தை பற்றிக் கேட்டார். அவரும் நான் சொல்வது இருக்கட்டும் அந்த வித்தியாசம் என்னவென்று தாங்கள் கண்டுபிடித்து சொல்ல முயலுங்கள் என்றார் அவர்.

அவரும் இவரை நன்றாகப் பார்த்துவிட்டு.. தெரியுது.. ஆனா என்னவென்று கண்டுபிடிக்க தெரியவில்லை என்றார். பிறகு சிறிது நேரங் கழித்து அவரையே சொல்லச் சொன்னார்.

அவர் இவரைப் பார்த்து சிரித்துவிட்டு சொன்னார். வேறு ஒன்றுமில்லை முன்பு தாடி மீசையுடன் பார்த்திருந்த தாங்கள். இப்போது மீசை தாடி இல்லாமல் என்னை பார்க்கிறீர்கள். அதுதான் வித்தியாசம் என்று அவர் சொல்லி முடிக்குமுன்...இவர்...அட...ஆமாப்பா...ஆமாப்பா..இப்பத்தான் நினைவுக்கு வருகிறது.என்று சொன்னார்.

தொடர்ந்து அவரே சொன்னார். இவருக்கும் அவருக்கும் தெரிந்த நண்பரின் பெயரைச் சொல்லி. தான் தாடி மீசை வைப்பதை பார்த்து ஆசைப்பட்டு எனக்கு போட்டியாக மீசை தாடி வைக்க ஆரம்பித்தார் அவர்.

அவர் கண் பட்டதால் என்னவோ அன்றைக்கு பிடித்த ஜலதோசம் மீசை தாடியை எடுத்த பிறகுதான் விட்டது. ஜலதோசத்துடன்  மூக்கில் புண் ஏற்ப்பட்டு அவதிப்பட்டதைக் கண்டு வீட்டில் உள்ளோர்கள் எல்லோரும். மீசையாக முக்கியம்..மூக்குதானே முக்கியம் என்று என்னை வசைபாட தொடங்கிவிட்டார்கள்...ஜலதோசம் தீராமல் அவதிப்பட்ட தானும் மீசையா முக்கியம் மூக்குதானே முக்கியம் என்று தாடியையும் மீசையும் எடுத்துவிட்டேன்.என்னைப் பார்த்து தாடி மீசை வைத்தவர் எனக்கு முன்பு வந்து. தாடியையும் மீசையையும் தடவி கொண்டு இருப்பது என்னை .நக்கல் செய்வது போல் இருக்கிறது என்று அவர் சொன்ன போது...

இவர் “நமக்கு மீசையா...முக்கியம்... மூக்குதான் முக்கியம் என்றபோது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை கேட்டுக் கொண்டு இருந்த சிலரில் ஒருவர்..நமக்கு மீசையா..? முக்கியம். மூக்குதானே முக்கியம் அப்பத்தானே எதிரில் ஒருஆள் பேசிக் கொண்டு இருக்கும்போது ஆள்காட்டி விரலை மூக்குக்குள் விட்டு மூக்கை  நோண்டோ நோண்டுன்னு நோண்ட முடியும் என்று சொல்ல அது கேட்டு இன்னொருவர். ஆமாம.. அந்த மூக்கீல் நிறைய மூக்கு பொடியை திணிக்க முடியும்   என்று பதிலுக்கு சொல்ல  அடுத்த ஒரு அறிவாளி, “ஆமா மூக்கு இருந்தால்தானே  இழுத்துவிட்ட புகையை மூக்குவழியாக விட முடியும்” என்று சொல்ல இவரும் அவரும்  அவர்களுடன் சேர்ந்து பலரும் சிரித்தார்கள்.


8 கருத்துகள்:

  1. இவரு யாருன்னு புரியலையே....?

    பதிலளிநீக்கு
  2. //மீசையா முக்கியம் மூக்குதானே முக்கியம்..
    அன்றைக்கு பிடித்த ஜலதோசம் மீசை தாடியை எடுத்த பிறகுதான் விட்டது. ஜலதோசத்துடன் மூக்கில் புண் ஏற்ப்பட்டு அவதிப்பட்டதைக் கண்டு வீட்டில் உள்ளோர்கள் எல்லோரும். மீசையாக முக்கியம்..மூக்குதானே முக்கியம் என்று என்னை வசைபாட தொடங்கிவிட்டார்கள்...
    //
    வலிப்போக்கரே,
    நீங்க எழுதிய மீசை இழப்பாளரின் நிலையை படித்து சிரிப்பை நிறுத்த முடியாம சிரித்து கொண்டிருக்கிறேன். தலையில் உள்ள அதே முடியை மூக்குக்கு கீழே வளரவிட்டு முறுக்கினால் அவர் ஒரு தமிழககத்தின் மாவீரனாவார்.

    பதிலளிநீக்கு
  3. பொடியை வலிய திணிப்பதும் தவறு ,புகையை வேளே விடுவதும் தவறுதானே ?இதற்கா மூக்கு ?

    பதிலளிநீக்கு
  4. மூக்குப் பொடி போடுதலும்
    புகைப்பிடித்து உள்ளிழுத்த புகையை
    மூக்கால வெளிவிடுதலும்
    உடல் நலத்தைப் பாதிக்குமே! - அதை
    அறியாமல் சிரிப்பது நலமோ?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...