புதன் 08 2016

வாதத்தில் வென்ற வக்கீல்



அதிகாலை கனவுகள 2 வை படித்த என் நண்பர் ஒருவர் வக்கீல்கள் மத்தியில் பெருமையாக உலாவி வருகின்ற  “வாதத்தில் வெற்றி கண்ட வக்கீல்லைப்பற்றி..ஒரு கதையைப் பற்றிச் சொன்னார்.

தன் மனைவியானவர் அடுத்த ஒருவருடன் உறவு கொணடு இருந்ததை பார்த்த கனவன்.. உறவில் இருந்தவன் தப்பி ஓடிவிட. அகப்பட்ட தன் மனைவியை கோபத்தில் கண்ட துண்ட வெட்டி படுகொலை செய்துவிட்டான் அந்தக் கனவன்.

தன் மனைவியை கொலை செய்தவனுக்கு  தூக்கு தன்டனை விதித்தது நீதிமன்றம். . அந்தக் கொலைகாரனோ தனக்கு சார்பாக வாதாடிய வக்கீடம் என்னய்யா..இப்படி எனக்கு தூக்கு தண்டனை  என்று கேட்டபோது. அந்தக் கொலைகாரனிடம். வக்கீல் சொன்னாராம் கவலைப்படாதே எப்படியும் உனக்கு விடுதலை வாங்கித் தருவேன் என்று.

மனைவியைக் கொன்ற கொலைகாரனை தூக்கில் போடும் நாள் வந்தது. அப்போது கொலைகாரனின் வக்கீல் அவனிடம் நான் சொல்வது மாதிரி சொல் என்றாராம். கொலைகாரனும்  சரி என்று தலையாட்டினான்.

தூக்கு போடுவதற்கு  முதல் நாள் நீதிபதி. அந்தக் கொலைகாரனிடம் உன்னுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்டாராம். அப்போது அந்தக் கொலைகாரன் வக்கீல் சொல்லிக் கொடுத்ததை சொன்னபோது.. நீதிபதி கோபம் கொண்டு அவனை இன்றைக்கே தூக்கில் போட உத்தரவிட்டபோது.

கொலைகாரனின் வக்கீல் தன் வாதத்தை சொன்னாராம். அய்யா.இவன் இப்படிச் சொன்னதற்கே   கோபப்படுகிற நீங்கள்.. அடுத்தவருடன் தன் மனைவி சேர்ந்திருப்பதை பார்த்த இவனுக்கு வந்த கோபத்தில்தான் கொலை செய்துவிட்டான் என்றார். வக்கீலின் வாதத்தை ஏற்ற நீதிபதி மனைவியை கொலை செய்த  அந்தக் கனவனை விடுதலை செய்ய உத்தரவிட்டாராம்..

இந்தக்கதை.. ஒவ்வொரு.நீதிமன்ற வளாகத்திலும் வக்கீல்கள் மத்தியில் வக்கீலின் வாத திறமைக்கு சான்றாக உலாவுவதாக சொன்னார். இருப்பினும் அதிகாலை கனவுகள்2ல் பற்றி அவர் சொன்ன தீர்ப்பு சரியில்லை..


நண்பர் சொன்ன கதை இது நிஜமோ..பொய்யோ எப்படி இருந்தாலும்.. புராண இதிகாச கதைகள் மாதிரி ஒவ்வொரு துறையிலும் இது போன்றதங்கள் துறை சார்ந்த பெருமையை பீத்திக்கிற கதைகள் தொன்று தொட்டு உலாவிக் கொண்டுதான் இருக்கிறது..


5 கருத்துகள்:

  1. வக்கீல் என்ன சொன்னார் என்பதை சொல்லி இருக்கலாம் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அதெல்லாம் தப்பு ,நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே :)

    பதிலளிநீக்கு
  3. //அடுத்தவருடன் தன் மனைவி சேர்ந்திருப்பதை பார்த்த இவனுக்கு வந்த கோபத்தில்தான் கொலை செய்துவிட்டான் என்றார். வக்கீலின் வாதத்தை ஏற்ற நீதிபதி மனைவியை கொலை செய்த அந்தக் கனவனை விடுதலை செய்ய உத்தரவிட்டாராம்..//
    தன் மனைவி வேறு ஒருவனை விரும்பினால் கொலையும் செய்யலாம் என்பதை ஏற்று கொள்வதாக காட்டும் நீதிபதி பாத்திரங்களை உருவாக்கும் அயோக்கியர்கள், மற்றும் குமாரசாமி கணக்கு அயோக்கியர்கள், பீத்திக்கொள்பவர்கள் நாட்டின் சாபகேடு.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...