பக்கங்கள்

Sunday, July 24, 2016

“கபாலி” தலித் படமில்லடா விளக்கெண்ண......“அண்ணே! என்னண்ணே...கூப்பிட்டிங்களாமே...?

“நேத்து எங்கடா...போனே.....?

“காபலி படம் பார்க்க போனேண்ணே...

“அதான் நேத்து ஒன்னக் காணோமா...?

“ஆமாண்ணே......

“சரி. படம் எப்படி...?

“ எனக்கு சூப்பர்ண்ணே”..!!”

“அது எப்படிடா”...“சூப்பர்”....

“மனிதக் கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தப்படத்துல  தலித் தலிவரா நடிக்கிருக்காருண்ணே..”!!!

“அப்போ..சாதிவெறியர்கள் ஆண்டைகளை எதிர்த்து வசனம் பேசி இருக்கனுமே....

ஆமண்ணே...“நாங்க படித்து முன்னுக்கு வர்ரது ஒங்களுக்கு பிடிக்கலையாடா? நாங்க நல்ல ட்ரெஸ் அணிந்து ஒங்க முன்னாடி போறது.ஒங்க கண்களுக்கு உறுத்துதாடா..?? ஒங்களுக்கு பிடிக்கலைன்னாலும் உறுத்தினாலும் நாங்க அப்படித்தாண்டா செய்வோம்னுவசனம் பேசி இருக்காருண்ணே.....இது தலித் படமிண்ணே.....

“ஆண்டைகளை எதிர்த்து சண்டை போடுறாராடா..?

ஆமாண்ணே.., ஒரு தாதாவை எதிர்த்து சண்டை போடுவாருண்ணே..”...

“நீ....சொல்வதைப் பார்த்தா.... ஒரு தாதாவை எதிர்த்து, “கபாலிஎன்ற தாதா சண்டை போட்டு வெல்வாருஅப்படித்தானே......!!!

ஆ......ஆ...ஆமாண்ணே......

போடா...வௌக்ண்ண....அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த ஒரு தாதா, அடக்கியும் ஒடுக்கியும் வருகிற இன்னொரு தாதாவை எதிர்த்து சண்டையிடுகிற படத்தைப்போயி தலித் படமுன்னு சொல்லிக்கிட்டு, அதோடு சூப்பர்ஸ்டார் என்ற நடிகன் கபாலி என்ற தலித் கேரக்டரில் நடித்து இருக்கிறார்னு பீத்திக்கிட்டு..............

பா. ரஞ்சித் என்ற தலித் இயக்கிய படமின்ணே......!!

“ஒரு தலித் இயக்கினா.... அது தலித் படமில்லடா......காபலின்னு பேரு வச்சதுனால... சூப்பர் ஸ்டாரு தலித்தா நடிச்சிருன்னு  ரெம்பத்தான் பீத்தாதிங்கடா..விளக்கெண்ணைகளா......

படத்தோட கதை அப்படித்தாண்ணே......

என்னடா கதை.... அம்பேத்கரை தெரியுமா...? உனக்கு.....

“அவர , எப்படிண்ணே தெரியாமல் இருக்கும்

“அந்த அம்பேத்கரின் வாழ்க்கை கதையை படமாக்கிய படத்தில் அம்பேத்காரக நடித்தவர் யாருன்னு தெரியுமாடா....???

“ அவரு மம்முட்டிண்ணே..”..

“அவரும் சூப்பர் ஸ்டாரு தெரியுமில்ல...

“ஆமண்ணே...

அம்பேத்காராக நடிக்க பலபேரு மறுத்துவிட்ட போதிலும். அந்த சூப்பர் ஸ்டார் மம்முட்டி.தன்னுடைய இமேசை விட்டொழித்து அம்பேதக்கராக நடித்தவருடா..... அவரு தலித் தலைவராக நடித்தவரா...இல்ல  “கபாலி“ என்ற தாதாவேடத்தில்  நடித்தவரா....  இதில யாருடா..தலித் தலைவராக நடித்தவரு.... சொல்லுடா வெண்ணெ..

“ மம்முட்டி தாண்ணே..

 “ஆக.மொதல்ல இத புரிஞ்சுகோடா, .காபலி-ன்னு பேரு வைத்ததினால் அது தலித் படமில்லடா.. வெண்ணே.. ஒரு தலித் இயக்கியதால் அந்தப்படம் ஒரு தலித் படமும் இல்லடா .விளக்கெண்ண........


7 comments :

 1. வெளக்கெண்ணைகளுககு புரிந்தால் சரிதான் நண்பரே

  ReplyDelete
 2. எது எப்படியோ அவர்களுக்கு வசூல் ஆகிவிட்டது. பா. ரஞ்சித் தலித் என்று இதுவரை தெரியாது.

  ReplyDelete
 3. இப்படிப் பட்ட வெண்ணைகள்இருப்பதால் தான் , அவர் கோடிகளில் குளித்துக் கொண்டிருக்கிறார் :)

  ReplyDelete
 4. Kabali is a fantastic movie. It's not a Dalit movie. It's a movie about all oppressed and suppressed people. Watch more

  ReplyDelete
 5. அருமையான பதிவு. திட்டமிட்டு தலித் படம் என்று பரப்புகிறார்கள் படத்தை இன்னும் சில நாட்கள் ஓட வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக.

  ReplyDelete
 6. தமிழ் பேபிக்களுக்கு புரியும்படி அருமையாக சொன்னீர்கள்.

  ReplyDelete
 7. இவ்ளோ விஷயமா இந்தப் படத்துல...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com