சனி 30 2016

சும்மா..இருந்திங்கன்னா...வீட்டுப்பக்கம் வந்துட்டு போங்க.....


கிர்..கிர்........கிர்.......

டேய் ...யாருன்னு பேசுரா.......

“அலோ.................

“அலோ.......வ்.......என்ன செய்யீறிங்க.......

“உங்களுக்கு பதில் சொல்லிகிட்டு இருக்கேன்..

“அது தெரியுது.. பதில் சொல்றதுக்கு முன்னாடி என்ன செய்துகிட்டு இருந்தீக...

“ஓ....அதுக்கு முன்னாடியா.... செல் போன்ல சார்ச் ஏறுதான்னு பாத்துகிட்டு இருந்தேன்... ஆமா..நீங்க  யாரு...?

“ ...நா..ன் சொல்வத கவனமாக கேளுங்க..., சும்மா இருந்திங்கன்னா.. செத்த.....வீட்டுப் பக்கம் வந்துட்டு..போங்க...அது ஊறுக்கு போயிறுச்சு. வர்ர ரெண்டு நாளாகும்..... வர மறந்திடாதிங்க.........

“அலோ...நீங்க.......யா.....?

“கிர்ர்ர்.......லொடக்

“அண்ணே... நீங்க விவரமான ஆளுதாண்ணே...

'என்னடா சொல்ற...

“பெருச்சாளி வீட்ட கெடுக்குமாம். .ஊம ஊரக் கெடுக்கும்ன்னு சும்மா சொல்லி வச்சாங்கே.....

“ஏய்....என்னடா சொல்ர...சும்மா..காசுக்கு சொன்னாங்கேன்னு..“

“  அது ஊறுக்கு போயிருக்கு வர்ர ரெண்டு நாளாகும்மா ,“நீங்க சும்மா இருந்தீங்கன்னா.... செத்த வீட்டுப் பக்கம் வந்துட்டு போவிங்களாம்அப்படின்னு ஒரு அன்னக்கிளி பேசுச்சுண்ணே...

“அது எப்படிடா..அன்னக்கிளி..செல்போன்ல பேசும்...??

“ செத்த முன்னாடி..பேசுச்சுச்ல...அண்ணே...! கில்லாடிண்ணே நீங்க....,

“ஏய்.....போனக்குடுடா.......இந்த நம்பர்தாணேடா....

“ ஆமா..ண்ணே.....

“ஸ்பீக்கர் சவுண்டு வச்சுருக்கேன்..நல்லாக் கேளு.... பேசுறத.., ஏம்பா அன்னக்கிளி... எத்தனை தடவம்மா ஒனக்கு நா... சொல்லுறது.. ஒரு தடவைக்கு இரு தடவை நல்லா பார்த்து போன் நம்பரை அடின்னு..தப்பித்தவறி எப்பவாச்சும் என் பொண்டாட்டி நீ பேசுறத  கேட்கப் போறா....உன்ன..உண்டு இல்லன்னு ஆக்கிப்புடுவா.... பாத்துக்கா... அந்தக் கடைசி நம்பர பாத்து அடிம்மா..... நீ பேசுற காயின்ஸ் கடைக்காரர்கிட்ட நம்பர கொடுத்து அடிக்கச் சொல்லுமா..... உன்கிட்ட என் தம்பி பேசியிருக்கான்மா...என்னப் பத்தி என்ன நிணப்பான...... ம்ம..ம்...
 “
 சார்...தெரியாம மாறி வந்திருச்சு சார். மன்னிருச்சுருங்க சார்...


“ இதையே எத்தனவாட்டி சொல்வேம்மா....இதுதான் கடைசி தடவ... இனிமே நம்பர பாக்கம அடிச்சே.....ஆமா... எந்த ஊரும்மா....நீய்யி....... (லொடக்)”.


“அண்ணே..சாரிண்ணே......

“போடா...வெண்ணே.... செத்த நேரத்துல...... ஆளையே  கவுத்திட்டியேடா.....



5 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...