பக்கங்கள்

Wednesday, August 17, 2016

சந்தோசத்தில்.பிறந்த.சந்தேகம்


அன்றைய வேலையில்.. மாரியம்மா...யாருடனும் பேசாமல் மூஞ்சியை இஞ்சி தின்ற குரங்கு மாதிரி வைத்துக் கொண்டு மள மள வென்று தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். சாப்பாட்டு வேளையில் கூட அவள் சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். உடன் வேலை செய்தவள்கள்  அவளின் முகத்தை பார்த்ததும்..வழக்கம் போல்.. பேசப் பயந்து போய் பேசாமல் இருந்துவிட்டனர்.

இதைக் கண்ட அவளின் தொடுப்பு கருப்பசாமி... அவளுடன் பேசுவதற்கு தனியாக கிடைக்கும் நேரத்தை எதிர்பார்த்து  காத்துக் கொண்டு இருந்தான்..ஒருவழியாக வேலை முடிந்து எல்லோரும்  வீட்டுக்கு செல்லும் நேரத்தில் கடைசியாக வந்த மாரியம்மாளிடம் பேச்சுக் கொடுத்தான்...

“என்னடீ..... வீட்டில் பிரச்சனையா...???

“அவனை முறைத்துப்பார்த்தவள்.... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஆமாம், எல்லாம் உன்னால்தான் என்றாள்....

“ என்னடீ..சொல்ற..... என்னலா...... எப்படி...டீ......???

“ஒன்னும்..தெரியாத மாதிரி நடிக்காத.....

“ அடியே... பயமா...இருக்குதுடீ... கொஞ்சம் விளக்கமா..சொல்லேன்....

“ கால நேரமெல்லாம் நீ...என்னய..நிணச்சிகிட்டு, இருந்ததால.... வந்த வினை  என்றாள்

கருப்பு சாமி..தலை குனிந்து பேசாமல் இருந்தான்...பிறகு மாரியம்மாளே நடந்த விபரத்தை சொன்னாள்...

மாரியம்மாளும் அவளின் கனவன் செல்லக்கன்னுவும். சந்தோசமாக இருந்தபோது.... மாரியம்மாளுக்கு விக்கல் எடுத்தது. வந்த விக்கல் விடாமல் வந்து கொண்டு இருந்தது.  அதைக் கண்ட செல்லக்கன்னு சந்தோசமாக அவளிடம் விக்கலைப்பற்றி பேச்சுக் கொடுத்தான்.

“ அன்பே..இப்படி விக்கல் வந்தால் என்ன செய்வே —செ. கன்னு

“ தண்ணி குடிப்பேன்”- மாரியம்மா...

“தண்ணி குடிச்சும் நிக்கலேன்னா...அவன்

“ உங்க்கிட்ட வந்து சந்தோசம் பெறுவேன்”-அவள்

“அப்படியும் நிக்கலேன்னா....

“ அப்படியும் நிக்கலேன்னா... டார்லிங் என்னஇது இந்த நேரத்தில நிணச்சுகிட்டு.. என்பேன்..என்றாள்...

“ என்னது டார்லிங்கா.... அது யாரது என்று அவன் கேட்டபோது..அய்யோ என பல்லைக் கடித்தவள் சற்றும் தாமதிக்காமல் தங்களைத்தான் டார்லிங் என்று சொன்னேன் என்று மழுப்பினாள்.

“நான்தான் உன் அருகில் உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறனே.. அப்படி இருக்கும்போது ,என்னால் உனக்கு எப்படி விக்கல் வரும்... என்றான்..

“ வந்துவிட்டதே.....

“ நிச்சயமா..என்னால் வராதே..... உண்மையைச் சொல்...அந்த  டார்லிங்க் யார்?

“சத்தியமா.... தாங்கள்தான்..

“ சத்தியம்  சக்கரைப் பொங்கல் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். சொல்..அந்த டார்லிங்க் யார்..........???

“ அய்யோ... சந்தோசமா இருந்த நேரத்தில....இப்படி சந்தேகப்படலா..மா... என்று சொல்ல....அப்போது செல்லக்கன்னுவின் தொடுப்பின் கனவன் வீட்டிற்குள் வர........


அன்றைய பொழுது முடிக்கு வர..அதிகாலை எழுந்தவுடன் மீண்டும் அந்த டார்லிங் யார் என்று அவள் கனவன் கேட்க..  ..வாய்ச் சன்டையிட்டு வேலைக்கு வந்து சேர்ந்த விபரத்தை அவளின் தொடுப்பான கருப்பூ சாமியிடம் சொல்லி முடித்தாள்.

இப்போது கருப்பூசாமி,.. என்ன சொல்வது என்று குழம்பத் தொடங்கினான.... “உன்னை நான் நிணைக்கவில்லை என்று உண்மையைச் சொன்னாலும் வம்புதான்... “நிணைத்தேன் என்றுபொய்ச்  சொன்னாலும் வம்புதான். இவளிடம் என்ன சொல்வது..இவளிடம் பெரும் சந்தோசத்தை இழக்க விறும்பாத கருப்பூ சாமி யோசிக்கத் தொடங்கினான்

.மாரியம்மாளின் கனவனின் கேள்வியான அந்த டார்லிங் யார்?? என்று.....


7 comments :

 1. யார் அந்த டாலிங்க))))

  ReplyDelete
 2. சந்தேகம் வந்திருச்சா ?இது கொலையில்தான் போய்முடியும் :)

  ReplyDelete
 3. அருமை அருமை
  தப்புத் தப்பாய்தானே யோசிக்கும்..

  ReplyDelete
 4. கதை புரியவில்லை.
  த ம 3

  ReplyDelete
 5. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete
 6. அடடா! இது சரியாக இல்லையே..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com