சனி 27 2016

புர்ஹான் வானி ஏன் தீவிரவாதியானார்...???


புர்ஹான் வானி

புர்ஹான் வானி தனது 16-ஆவது வயதில் ஏன் தீவிரவாதியானார்? புர்ஹானின் வயதையொத்த காஷ்மீரத்து இளைஞர்கள் புர்ஹானை ஏன் ஆராதிக்கிறார்கள்? குண்டடிபட்டுச் செத்துப்போவோம் அல்லது கண்களை இழந்து வாழ்நாள் முழுக்க குருடனாய்த் திரிவோம் அல்லது தனிக் கொட்டடிச் சிறையில் அடைக்கப்படுவோம் எனத் தெரிந்திருந்தும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், கையில் கற்களோடு தெருவில் இறங்கி இராணுவத்தோடு ஏன் மோதத் துணிகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான காரணங்களை காஷ்மீரில் இந்திய அரசுதான் ஒவ்வொரு  நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதனை பாகிஸ்தானில் தேடி பயனில்லை.
காஷ்மீரில் 1989-ல் வெடித்த ஆயுதப்போராட்டம் அடுத்த பத்தாண்டுகளில் ஒடுக்கப்பட்ட பிறகு, அங்கே அமைதி திரும்பி விட்டதாகவும், காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அவர்களது எடுபிடிகளும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். 2002, 2008 சட்டமன்றத் தேர்தல்கள் இந்த அமைதிக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டன. ஆனால், இந்த அமைதி காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வை எந்தவிதத்திலும் மழுங்கடித்துவிடவில்லை என்பதை 2008-லும், 2010-லும் நடந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எடுத்துக் காட்டின.
2008-இல் அம்மாநிலத்தை ஆண்டுவந்த காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு, அந்த ஆண்டு வரவிருந்த தேர்தலில் ஜம்மு பகுதி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது.


இந்தத் தடையைஎதிர்த்து”ஜம்மு-காஷ்மீர் பகுதியை, ஆசாத் காஷ்மீரோடு இணைக்கும் சாலைகளைத் திறந்துவிட வேண்டும்; அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” ஆகிய மூன்றுஅரசியல் கோரிக்கைகளை முன்வைத்து காஷ்மீர்பள்ளத்தாக்குமக்கள்நடத்தியபோராட்டத்தை ஒடுக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர்.இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து காஷ்மீர் முசுலீம்கள் போராடியதையடுத்து, காங்கிரசு கூட்டணி அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக ஊதிப் பெருக்கிய ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கும்பல், காஷ்மீர் தலைநகர் சிறீநகரை இந்தியாவோடு இணைக்கும் ஜம்மு-சிறீநகர் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் மீது சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை ஏவிவிட்டது.

2010-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து வந்த டுஃபாயில் மட்டூ என்ற சிறுவன் அரசுப் படையினரால் அநியாயமாக, தெருநாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 120 பேர் கொல்லப்பட்டதோடு, அப்போரட்டத்தில் கலந்துகொண்டு, அரசுப் படைகளின் மீது கல்லெறிந்த ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்களும், 18 வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் ஒருமுறை போலீசு நிலையத்தின் வாசலை மிதித்துவிட்டாலே, அதோடு வாழ்க்கையே முடிந்துவிடும். குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள், போலீசார் கூப்பிடும்போதெல்லாம், அது இரவோ, பகலோ மறுக்காமல் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். போலீசு நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடக்கும் அவமதிப்புகளை, அடி உதை உள்ளிட்ட சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
காஷ்மீரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நிலைமை, காஷ்மீரிகளுக்கு இரண்டு வாய்ப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. ஒன்று, அவர்கள் போலீசின்-இராணுவத்தின் ஆள்காட்டிகளாக மாற வேண்டும் அல்லது தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்குத் தனது அண்ணனைப் பறிகொடுத்த, அரசுப் படைகளின் சித்திரவதைகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளான புர்ஹான் வானி பின்னதைத் தேர்ந்தெடுத்தார். போராளிஅமைப்புகளிலிருந்துவிலகி, போலீசிடம் சரணடைந்தாலும், அவ்வாறுசரணடையும்இளைஞர்கள்அமைதியாக வாழ்வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்பதற்கு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குரு ஓர்எடுத்துக்காட்டு.

ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதியான புர்ஹான் வானி, தான் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது இயக்கம் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காது. யாத்திரை செல்வது அவர்களின் உரிமை, தங்களது மதக் கடமையை நிறைவேற்றுவதை நாங்கள் மட்டுமல்ல, எதுவும் தடுக்காது” என குறிப்பிட்டுள்ளார். அதே அறிக்கையில், “காஷ்மீர் பண்டிட்டுகள், தமது சொந்த ஊருக்குத் திரும்புவதோடு, காஷ்மீர் முசுலீம்களுக்கு அருகிலேயே பழையபடி வசிக்கலாம்; அதற்கு மாறாக, இசுரேலில் யூதர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்பு ஏற்படுத்தும் முயற்சியை எதிர்க்கவே செய்வோம்” என்று எச்சரித்திருக்கிறார்.

இந்த இளைஞனை நாட்டிற்கு எதிரான ஒரு பெருந்தீமை போலச் சித்தரித்துக் கொன்று போட்டுவிட்டது, மோடி அரசு. அதனைக் கண்டித்தும், தங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடத் துணிந்த காஷ்மீர் மக்களின் மீது கொடிய “பெல்லட்” தாக்குதலை நடத்தி, கிட்டதட்ட 50 பேரைச் சாகடித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண் பார்வையைப் பறித்துக் குருடாக்கி, ஆயிரக்கணக்கானோரைக் கொடுங்காயப்படுத்தி, இந்து தேசிய அரசு பயங்கரவாதம் தனது இரத்தப் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது


puthiya-jananayagam-august-2016-back



நன்றி! வினவு..

1 கருத்து:

  1. பெல்லட் குண்டு பயங்கரத்துக்கு எதிர்ப்பு வலுத்து உள்ளதால் ,இப்போது மிளகாய் பொடி குண்டுகளை பயன்படுத்த துவங்கி இருக்கிறதாம் ராணுவம் !

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...