பக்கங்கள்

Sunday, August 28, 2016

செய்த சத்தியத்தை மறுத்த சத்திய சீலர்கள்.....“ஈழத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்; ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை எந்த அளவிற்கு நீதியானதோ, நியாயமானதோ, அது போலத்தான், “காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்; இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனக் கோருவதிலும் அரசியல் நியாயம் உள்ளது. 1947- இல் ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டபோது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒத்துக்கொண்டதோடு, அதனை ஐ.நா.மன்றத்திலும் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்தது இந்திய அரசு. காஷ்மீர் பள்ளத்தாக்கு முசுலீம்கள் இந்திய அரசிடம் புதிதாக எதையும் கோரவில்லை. “நீங்களே ஒப்புக்கொண்டபடி பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்” என்ற வரலாற்று நியாயத்தைத்தான் கோருகிறார்கள்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வாஜ்பாயி ஆட்சியின் போதும், அதன் பிறகு வந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போதும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள், குழுக்கள் குறித்துப் பிரமாதமாகப் பேசப்பட்டாலும், அவைகளில் ஒன்றுகூட காஷ்மீர் மக்களின் மையமான அரசியல் கோரிக்கையான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேச மறுத்தன. குறைந்தபட்சம், காஷ்மீர் மக்களுக்கு அரசுப் படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதைக்கூட உத்தரவாதம் செய்ய மறுத்தன. குறிப்பாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது அமைக்கப்பட்ட, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா மோகன், முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைய ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகியோரைக் கொண்ட மூவர் குழு, காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என ஒப்புக்குச் சப்பாணியான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை அளித்தது. அதனை வெளியிடக்கூட காங்கிரசு அரசுமறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்யும்காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குப் பதிலாக, சிறிய இரக இரும்புக் குண்டுகள் அல்லது ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவதையே பெரிய சலுகையைப் போல அறிவித்தது. இந்த துப்பாக்கியால் ஒருமுறை சுடும்பொழுது ஐநூறுக்கும் குறையாத குண்டுகள் மழை போல ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதால், அவர்களின் தலை தொடங்கி பாதம் முடிய உடம்பின் எந்தப் பகுதியும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, சல்லடைக் கண் போலாகிவிடும். நிரந்தர ஊனமாக்கி நடைபிணமாக்கி விடும். உலகிலேயே இந்தக் கேடுகெட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி வரும் நாடுகள் இரண்டுதான். ஒன்று யுத இனவெறி கொண்ட இசுரேல், மற்றொன்று பார்ப்பன தேசிய வெறி கொண்ட இந்தியா.
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவது இருக்கட்டும்; அம்மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காகித அளவில் நீடிப்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.
காங்கிரசு அப்பிரிவைக் கொல்லைப்புற வழியில் நீர்த்துப் போகச் செய்தது என்றால், இந்து மதவெறிக்கும்பலோ அப்பிரிவை அடியோடு நீக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறது

காஷ்மீர் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்
தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதைச் சட்டவிரோதமாகத் தடை செய்த மாநில அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சிறீநகரில் பத்திரிகையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
நன்றி! வினவு

2 comments :

 1. ஆனானப் பட்ட அமெரிக்க இராணுவமே ,வியட்நாமில் இருந்து பின் வாங்கியது என்று சரித்திரம் சொல்வதை இவர்கள் உணர்வார்களா ?

  ReplyDelete
 2. வணக்கம் பகவான்ஜீ.
  //ஆனானப் பட்ட அமெரிக்க இராணுவமே வியட்நாமில் இருந்து பின் வாங்கியது என்று சரித்திரம் சொல்வதை இவர்கள் உணர்வார்களா ?//
  ஆனானப் பட்ட அமெரிக்க இராணுவத்தையே கையாண்ட வியட்நாம், தமது பாதுகாப்பு செலவினங்களுக்காக அரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை இந்தியாவிடம் இருந்து தான் பெற்று கொண்டுள்ளது என்பது தான் தற்போதைய யதார்த்த நிலைமை பகவான்ஜீ அவர்களே.
  http://www.bbc.com/tamil/global/2016/09/160903_veitnam_india_modi

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com