திங்கள் 29 2016

மூடநம்பிக்கையும் தலையில் விழுந்த கொட்டும்....

“என்னடா...தலையில கைய வச்சுகிட்டு வர்ர......”

“ அது ஒன்னுமிலண்ணே.... சும்மா..ண்ணே...”

“என்னடா...சும்மா... இங்க வாடா.....கிட்டத்துல வாடா....”  ...“ டேய் என்னடா...மண்ட இப்படி புடச்சு போயிருக்கு...யாருடா கொட்டுனா...”

“ அது எங்கம்மாண்ணே...”

“என்னாது. ஒங்க அம்மாவா...?”  “ எதுக்குடா..ஒங்கம்மா..தலையில கொட்டுச்சு... சேட்ட ...பன்னுகீயா...” சொல்லுடா....

“சேட்ட..எதுவும் பன்னலண்ணே..... எங்கம்மா... பக்கத்துவீட்டு அக்காகூட புதுசா சேல கட்டிகிட்டு வெளியே போனாங்கண்ணே....நானு..“ எங்கம்மா பேறேங்கன்னு கேட்டேனண்ணே.... வுடனே எங்கம்மா கோபமா...“ வெளியே போகும்போது எங்க போறேன்னா ...கேக்குற...ன்னு... னங்குன்னு..என் தலையில கொட்டிட்டாங்கண்ணே... அதான் இப்படி வீங்கிப்போச்சு....

“ ஒங்கம்மா... இப்ப வீட்ல..இருக்காங்களா..... வெளியே போயிட்டாங்களா..“

“ வெளியே போயிட்டாங்கண்ணே...”

“ சரி, ஒங்கம்மா வந்தப்பிறவு, நா..ன் சொன்னதா நீ கேளு.... ஏம்மா... நான் எங்கே போறேன்னு கேட்டதுக்கு என் தலையில கொட்டுனியே.....பஸ்சுல போகயிலே.... டிக்கெட் கொடுக்கும் கன்ட்டக்டர்ர்ரு... எங்கம்மா போறீங்கன்னு
கேட்டு இருப்பாருலம்மா.... அவர நீ கொட்டுனீயாம்மான்னு  கேளுடா...”


“அட.கரெட்டுண்ணே......”

“இத கேட்டு பிறவு, ஒங்கம்மா..என்னா சொல்லிச்சுன்னு வந்து சொல்லுடா...” அப்புறம் பார்ப்போம். என்ன நா..ன் சொல்றது ஒனக்கு  புரியுதா...????”



5 கருத்துகள்:

  1. அதானே ,கண்டக்டர் கேட்டா மட்டும் ஒத்துக்கலாமா :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, அருமையான விழிப்புணர்வு பதிவு!
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. இப்படி கேட்டா இன்னும் ஒரு கொட்டும் கிடைக்கலாம் அல்லது அடுத்த தடவை கொட்டாமல் போகலாம்

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஒரு பதிவு.
    எனக்கு நல்ல நினைவில் உள்ளது.நான் சிறுவயதில் இந்திய வந்த போது எல்லாம் எனக்கு அறிவுறத்தபட்டது, வெளியில் செல்லும் உறவினர்களிடம் எங்கே போகிறீர்கள் என்று ஒரு போதும் கேட்காதே என்பது.
    இவ்வளவு காலங்களிலின் பின்பாவது ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
    எனது நண்பர் சொன்னார். தனது பெரும் பட்ட படிப்பு படித்த தனது
    வயது பெரிய உறவினரிடம் எங்கே போகிறீர்கள் என்று தான் கேள்வி கேட்டு நன்றாக திட்டு வாங்கி கொண்டதாக.
    இந்தியர்கள், தமிழர்கள் உலகத்திலேயே மூட நம்பிக்கைகள் ரொம்ப அதிகம் கொண்டவர்கள் என்பது மிகவும் வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...