வியாழன் 04 2016

பல நாள் பஜனையில் ஒரு நாள் பஜனை ...!!!

..

ஜனநாயகம் வழிந்து ஓடும்
தமிழக சட்ட மன்றத்தில்
பல நாள் பஜனையில்
ஒரு நாள் பஜனையின்
போது எதிர் வரிசையில்
அமர்ந்து இருந்த 89
உறுப்புகளை வயற் காட்டு
பொம்மைகள் என்றது எதிர்
வரிசைக்கு எதிரே அமர்ந்து
இருந்த உறுப்புகளில் ஒன்று

இது கேட்டு அந்த
89 உறுப்பகளும் சேர்ந்து
எதிர்த்து குரல் கொடுத்தது

பொம்மைகள் குரல் கொடுத்ததை
கண்டு அதிசியத்த சபை
முதல்வர் உடனே எழுந்து
அது ஒன்றும்அன்லி
பார்லிமெண்டவார்த்தை அல்ல
அதனால் சபை குறிப்பில்
இருந்து நீக்க வேண்டிய
அவசியம் இல்லை என்று
தன் மேதமையை காட்டினார்

அடுத்து எதிர் உறுப்பு
தலைவர் ஜனநாயக சபை
தலைவரிடம் மன்று ஆடி
போர் ஆடி பெற்ற
உரிமையின் படி எதிர்க்கு
எதிரே அமர்ந்து இருக்கும்
131 உறுப்புகளும் கொத்த
அடிமைகள். சோற்றால் அடித்த
பிண்டங்கள் எனறு பேசிய
போது அந்த அவையின்
சபை தலைவர். சபை
நாளை தொடரும் இன்று
ஒத்தி வைக்கப் படுகிறது
என்று விட்டு சென்றார்.

பஜனை சபைக்கு உறுப்புகளை
அனுப்பி வைத்த 5.79கோடி
வாங்கு வங்கிகள். புட்பால்
விளையாட தெரியாமல் திரும்பத்
திரும்ப சேம் சைடு
அடித்துக் கொண்டு இருக்கிறது.




4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...