ஞாயிறு 18 2016

கடவுளின் கடவுளையே கொதிக்க வைத்த .....நான் மணி யார்.????

பல குறிப்புகளுடன்
தமிழர்களை  கீழ்த்தரமாக
தமிழ் இனத்தையே
சாடி இருக்கிறான்
ஒரு பொறுக்கி
ஒரு அயோக்கியன்
என்று எழுதியிருக்கிறார்
 பதிவர் பசி பரமசிவம்

கடவுளின் கடவுளான
பசி பரமசிவத்தை
பதிவிட  வைத்த
நான் மணி
என்பவர் யார்
தமிழர்க்கும் அவருக்கும்
எத்தனை நூற்று
ஆண்டு பகை...
என்று தெரியவில்லை.


தமிழர்கள் நாட்டு
சன நாயகத்தில்
நாம் எல்லோரும்
மன்னர் என்று
தென்னாட்டு காந்தி
சொன்னது போல

கல் தோன்றா
மண் தோன்றா
காலத்தே  முன்
தோன்றிய மூத்த
குடியான தமிழ்
குடியில் பிறந்த
மூத்த குடி
மக்களின் அந்த
நல்லவர்களின் நல்லவர்கள்
தமிழனை பற்றிய
அவதூறு பதிவுக்கு
மறுப்பு பதிவு
போட துப்பு
இல்லையோ... அல்லது
இயல  வில்லையோ...???
என்பதும் தெரியவில்லை....


கடவுளின் கடவுளையே!
தமிழ்மணத்தில் புகார்
கொடுக்க வைத்து
நடவடிக்கை இல்லை
என்று பசி
பரமசிவத்தை கொதிக்க
வைத்த நான்
 மணி என்பவர்
யாருப்பா..யாரு...???
நான் மணியே
நீ யாருன்னு
வந்து சொல்லுப்பா...

4 கருத்துகள்:

  1. நண்பரே,

    நான் உங்களைத் திட்ட வரவில்லை. இப்போதும் நல்ல நண்பராகத்தான் நினைக்கிறேன்.

    என் பதிவின் நோக்கத்தைப் புறக்கணித்து, மறுப்பெழுதத் துப்பில்லைய்யா, இயலவில்லையா என்று கேட்கிறீர்கள்.

    அவ்வாறே வைத்துக்கொள்ளுங்கள்.

    என் பெயரைப் ‘பசி ராமசாமி’ என்று மறைமுகமாகச் சுட்டத் தேவையில்லை; நேரடியாகப் ‘பசி’பரமசிவம் என்றே குறிப்பிடுங்கள். விரும்பினால் தலைப்பைத் திருத்தலாம்.

    தமிழ் இனம் இழிவுபடுத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தில்[நான் மணி ஒரு கன்னடர் என்னும் நம்பிக்கையில்] மட்டுமே எழுதப்பட்டது என் பதிவு என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வேறு எந்தவொரு சார்பும் குழுத் தொடர்புகளும் எனக்கு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.

    நீங்களும் தமிழின உணர்வு மிக்கவர் என்பதை உங்களின் பழைய பதிவுகளின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். அத்தகைய நீங்களே என்னை எள்ளி நகையாடியிருப்பது எனக்கு வருத்தம்தான்.

    உங்களுக்கும் ‘நான் மணி’க்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிகிறது.

    சாதிக்க இயலாதபோது புலம்புவது என் இயல்புதான்.

    உங்களின் இந்தப் பதிவின் மூலம், உங்களைப் போலவே ‘நான் மணி’யும் ஒரு தமிழரே என்பதை என்னால் உணர முடிகிறது.

    ஆக, முனைப்புடன் செயல்படும் தமிழர்களை[இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது] எதிர்த்து நான் செயல்படுவதா? அது தேவையா? தனித்து இயங்கும் என்னால் சாதிக்க இயலுமா?

    நிச்சயம் இல்லை.

    புலம்புவதைப் பழக்கமாகக் கொண்ட நான், இனியும் தமிழ் தமிழன் என்று புலம்புவதை நிறுத்திக்கொள்கிறேன். தமிழ்மணத்திற்கு வைத்த கோரிக்கை ஏற்கப்படும் என்பதிலும் 100% எனக்கு நம்பிக்கை இல்லை. பயனற்றுப் போகவிருக்கும் இப்பதிவை என்ன செய்வது என்பது குறித்தும் யோசிக்கிறேன்.

    இந்தப் பதிவின் மூலம், எதைச் சாதிக்க நினைத்தீர்களோ அதைச் சாதித்துவிட்டதாக நினைத்து மகிழுங்கள்.

    நன்றி...நன்றி வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர்க்கு வணக்கம்...

      நான் தங்களை நையாண்டி செய்வதற்க்காக அந்தப் பதிவை எழுதவில்லை.புலம்பல் என்பதற்கு பதிலாக “கொதிக்க” என்று எழுதி இருக்க வேண்டும்.. திருத்தி விட்டேன்.
      தங்களைத் தெரிந்தளவுக்கு அந்த நான் மணியை எனக்கு உண்மையாகத் தெரியாது.. தங்கள் பதிவைப் படித்த பின்னரே... அந்த மணியின் பதிவைப் படித்து தெரிந்து கொண்டேன. பசி பரமசிவம் என்பதற்கு ராமசாமி என்று பெயரிட்டதுக்கு மன்னிக்க...

      நான் மணியின் பதிவுக்கு மறுப்புரை எழுத..துப்பில்லையா...இயலவில்லையா..என்று தங்களைக் கேட்வில்லை... கல்லு மன்னு தோன்றா தொன்றிய மூத்த குடி என்று பீத்தி திரிபவர்களைத்தான் சாடி உள்ளேன்.

      நான் தங்களை எள்ளி நகையாடவில்லை.. அனைவருக்கும் எழுத்துரிமை. கருத்துரிமை, எனஇருப்பதை பற்றித்தான்.. குறிப்பிட்டுள்ளேன். விளக்கமாக எழுததால் வந்த விளைவு என்று எண்ணுகிறென்

      வேறு எந்தவித உள் நோக்கமும் எனக்கு கிடையாது.. நானும் ஒரு காலத்தில் புலம்பியவன்தான். அதை எனது அரம்பகால பதிவில் தெரிந்து கொள்ளலாம், தற்போது புலம்புவதால் ஒரு பயனும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.

      வழக்கம்போல தங்கள் பதிவைப் படித்துவிட்டு கடந்து போகத்தான் நிணைத்தேன்.

      தங்களைப் போன்று நான் மணியின் அணைத்து பதிவையும் படிக்கவில்லை.. தாங்கள் குறிப்பிட்ட பதிவை மட்டுமே படித்துள்ளேன்.. தாங்கள்தான் அந்த நான் மணியை தமிழ் மணத்திற்கும் மற்ற பதிவர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி தெரியப்படுத்தி உள்ளீர்கள்.. அதற்க்காக உங்களுக்கும் நான் மணிக்கும் ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக கூற மாட்டேன்
      நன்றி! நண்பர் பசி பரமசிவம்..........

      நீக்கு
  2. யாரோ மணி ஆட்டியதை ,கேட்டும் கேட்காமல் போவதை விட்டு விட்டு நீங்கள் இருவரும் ஏன் மோதிக் கொள்கிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
  3. நான் மணி ஒரு தமிழ் நன்கு தெரிந்த கன்னடிகாவாக இருக்கலாம். கன்னடிகாகளுக்கு வக்காலத்து வாங்கும் எண்ணத்தில் வில்லவன் பதிவுக்கு எதிர்வினை கொடுத்து இருக்கலாம். இருக்கிறார். ஒரு கன்னடிகா இப்பிரச்சினையை எப்படி பார்ப்பார் என்பதை அவர் பதிவின் மூலம் அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு இது. அவர் கருத்தை நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அவர் இங்கே கருத்தே சொல்லக்கூடாது ( அவர் எழுதுவது தமிழில்) என்பதெல்லாம் ஜனநாயகத்துக்குப் புறம்பானதுனு தோனுது..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...