சனி 01 2016

சண்டாளி என்ன நேரத்தில் வந்தாளோ..........

அவள் வீட்டுக்
கோழி என்
வீட்டை கிளரி
நாசப் படுத்தும்

அவள் செல்ல
நாய் என்
வீட்டு வாசலை
மறித்து என்னை
பய முறுத்தும்

அவள் வீட்டுப
பூனை அவள்
முன் குறுக்கே
போனால் பச்சை
பச்சையான  வசவு
எனக்கு கிடைக்கும்


அவள் கழுவி
விடும் கழிவு
நீர் என்வீட்டு
வாசலில் தேங்கும்

சொல்லிப் பார்த்தாயிற்று
சண்டையும் போட்டாயிற்று
அடங்கவில்லை அசரவில்லை
எமகாத சிறுக்கியவள்..

என் கனவர்
எதிர்த்து கேட்டபோது
அவள் குளிப்பதை
பார்ப்பதாக பொய்
புகார் கொடுத்தாள்

போலீசும் அவளுக்கு
பலலிளித்து என்னவரை
அடித்து உதைத்து
வழக்கு போட்டு
சிறையில் தள்ளியது

சன்டாளி என்ன
நேரத்தில் வந்தாளோ
நீதி நியாயம்
நேர்மை எல்லாம்
இல்லாம நாசமா
போச்சு சதிகாரி
ஆசு பத்திரியில்
சீரியசா கிடக்காளாம்
இவ செத்தா
தான் எனக்கு
நிம்மதி போல......






3 கருத்துகள்:

  1. "சன்டாளி என்ன நேரத்தில் வந்தாளோ
    நீதி நியாயம் நேர்மை எல்லாம்
    இல்லாம நாசமா போச்சு
    சதிகாரி ஆசு பத்திரியில்
    சீரியசா கிடக்காளாம்
    இவ செத்தா தான்
    எனக்கு நிம்மதி போல..." என
    சொன்னாலும் கூட
    சன்டாளியின் சாவு
    சித்திரபுத்திரனாரின் கணக்குப் பொத்தகத்திலே!

    பதிலளிநீக்கு
  2. சண்டாளி போனால் இன்னொரு சண்டாளன் வருவான் ,பிரச்சினைத் தீருமா :)

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...