செவ்வாய் 29 2016

கொத்தவரங்கா ஒன்று பூசனிக்காவா ஆகியது..

.....................................



இருபத்தி யோராம் ஆண்டை
நிறைவு செய்யும் விதமாக
நடந்து வரும் என்
இடத்து வழக்கு விசயமாக
நண்பர் ஒருவர் அறிமுகப்
படுத்திய அண்ணனை பார்க்க
அவர் வீட்டுக்கு போனேன்

வெளியில் நின்ற என்னை
அண்ணனின் துணைவியார் ஒரு
மாதிரியாக பார்த்து விட்டு
விசாரித்தார் யாரு நீங்க
என்று ..மறந்து விட்ட
அவருக்கு நான் யார்
என்று நிணைவு படுத்திய
போது ஆச்சசரியமாக என்னை
பார்த்து வியப்பு அடைந்தார்.

கொத்தவரங்கா போல இருந்த
அவரா  நீங்க என்றார்.
வெளியில் நின்ற படியே
அண்ணனுக்கு குரல் கொடுத்தார்.
ஏங்க..இங்க வாங்களேன்

வந்தவர் என்னைப் பார்த்து
கேட்டாரே ஒரு கேள்வி
நான் அப்படியே அசந்து
போய்  விட்டேன.என்னடா
வாயும் வயிறுமா வந்து
நிக்கிற.....என்று  நானு
என்னத்த சொல்ல முன்
தள்ளிக் கொண்டு நின்றதை
கைகளால் மறைத்து கொள்ள
கை கட்டிக் கொண்டு
நிற்க அண்ணனுக்கும் அக்காவுக்கும்
சிரிப்பு  பொருளாக ஆனேன்.

ஒரு காலத்தில் கொத்தவரங்காவா
இருந்த நான் இன்று
 பூசனிக்காவா ஆகி  விட்டேன்..........

இந்தீய தேசீ..ய கீதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள


7 கருத்துகள்:

  1. கொத்தவரங்காயோ பூசணிக்காயோ ஆரோக்கியமா இருந்தா சரிதான் :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். இன்று பெரும்பாலானோர் வாயும் வயிறுமாகத்தான் இருக்கிறார்கள். நாளையில் இருந்து டயட்டில் இருக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். இப்படி அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு. பெண்களுக்காவது 10 மாதங்களில் முடிந்துவிடுகிறது. ஆண்களுக்கு நிரந்தர வாயும் வயிறும்.பெரும் தொந்தரவாக இருக்கிறது.
    த ம 4

    பதிலளிநீக்கு
  3. தலைப்பும் ,சொல்லிச் சென்றவிதமும்
    மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. கொத்தவரங்கா பூசனியானது நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...