பக்கங்கள்

Saturday, December 24, 2016

திருத்தவே முடியாத மூடர்கள்....இன்று விவசாயிகள்
தினம் என்றார்கள்
அவர்கள்...........

விவசாயிகளா..யார்
அவர்கள் என்றார்கள்
இவர்கள்..............

விவசாயிகள் இந்த
நாட்டுக்கே சோறு
போட்டவர்கள என்றார்கள்
அவர்கள்...........................

எங்களுக்கு விவசாயியும்
தெரியாது சோறும்
தெரியாது எங்களுக்கு
தெரிந்தது எல்லாம்
பாட்டில் சாராயம்
ஒரு பிரியாணி
பொட்டலம் கொடுக்கும்
அந்த அம்மாவத்தான்
தெரியும் என்றார்கள்
அவர்கள்...................

அது உங்களை
பெற்ற அம்மா
இல்லை அவள்
உங்களை கெடுக்கும்
சதிகாரி என்றார்கள்
அவர்கள்...................

வாயை மூடு
பாட்டில் சாராயமும்
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கைச்
செலவுக்கு இரு
நூறு ரூபாய்
கொடுக்கும் தெய்வத்தை
பழிக்காதே என்றார்கள்
இவர்கள்....................

பெறாத பிள்ளைகளான
உங்களுக்கு சாராயத்தை
ஊத்தி கொடுத்த
புன்னியவதி  செத்து
விட்டார் என்பது
தெரியுமா? என்றார்கள்
அவர்கள்....................

அந்த அம்மா
செத்து போனால்
என்ன எங்களுக்கு
இன்னொரு சின்னம்மா
வந்து விட்டார்கள்
என்றார்கள் திருத்தவே
முடியாத மூடர்களான
இவர்கள்....................4 comments :

  1. அந்த அம்மாவுக்காக பெறாத பிள்ளைகள் அடிக்கும் அட்டகாசம் முட்டாள் தனத்தின் உச்சம்.

    ReplyDelete
  2. திருந்துவது சிரமம் தான்...

    ReplyDelete
  3. நிரந்தர கூன் பாண்டியன்களோ இவர்கள் :)

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!