பக்கங்கள்

Wednesday, January 04, 2017

நண்பருக்கு சொன்ன சொந்த விவரக்கதை.

என்ன கணேஷ் நீயும்..சிங்க முத்துவும்... நெடுநேரமா பேசிக்கிட்டு இருந்தீங்களே...அப்படி என்ன அவ்வள நேரம் பேசிக்கிட்டு இருந்திங்க....

 எங்க வீட்டுக்கு கழிப்பறை கட்ட முற்ப்பட்டபோது.. என்அப்பனோட பிறந்தவனின் பொண்டாட்டி வழக்கு நடக்கிற இடத்துல  நீ எப்படி கழிப்பறை கட்டலாம் கட்டக்கூடாதுன்னு தடுத்தா... என் அப்பனோட பிறந்த இன்னொருத்தனுடன் சேர்ந்து என்ன அடித்துவிட்டனர். என்னை அடித்துவிட்டதோடு..விடாமல்... என் அப்பனோட பிறந்தவனின் பொண்டாட்டிய நான் மானபங்க படுத்தியதாக சட்டையை கிழித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனில் பொய்ப்புகார் கொடுத்திட்டா... போலீஸ்காரங்கே வந்து என்ன இழுத்துட்டு போயி ரெண்டு நாளா போலீஸ் ஸ்டேசன்ல வச்சு விசாரிச்சாங்க.... அதப் பத்தி விசாரிச்சாரு... அதத்தான் அவருகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.. அப்பத்தான் நீங்க பாத்திருங்கிங்க.......

ஓ.... அதுவா..... ஆமா...நானும்.... கேள்விப்பட்டேன்..... என்ன விபரம்..... நீ குடியிருக்கிற வீடும் அதைச் சேர்ந்த ஆறு சென்ட் இடமும் அய்யணன அம்பலத்துக்கு சொந்தமுன்னு  வழக்கு போட்டது தெரியும்.. பிறகு என்னாச்சு கணேஷ்....


இப்ப நா..குடியிருக்கிற வீடு அந்த ஆளுக்கு சொந்தமுன்னும் என் தாய் தந்தையர் வாடகைக்கு குடியிருந்து வந்ததாகவும்.கடந்த மூன்று வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் . நான் குடியிருக்கும் வீடு ஓலை குடிசை என்பதால் பழுதாகி விட்டதென்றும் அந்த வீட்டை இடித்து விட்டு சென்ட்ரிங் வீடு கட்ட இருப்பதால் மேற்படி வீட்டில் குடிருக்கும் எங்களை காலி செய்து சொத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டி விளிம்புகை பரிகாரம் வேண்டி 1989 யே வழக்கு போட்டாருங்க.... அந்த வழக்கு போடுவதற்கு முன்னமே் எனக்கு யாருன்னு தெரியாது தாத்தான்னு சொன்னாங்க..பன்டாரம் என்பவருகிட்ட இருந்து செல்லம்மா என்வரு கிரையம் வாங்கியதாக ஒரு பத்திரமும்,  இந்த செல்லம்மா என்பவரிடமிருந்து அய்யணன் அம்பலம் கிரையம் வாங்கியதாக ஒரு பத்திரத்த அடிப்படையா வச்சு வழக்கு போட்டு இருக்காருங்க... இந்த வழக்கு போடுவதற்கு ஒன்னு ரெண்டு வருசத்துக்கு முன்பு..என் அப்பா பெயிரில் இருந்த வீட்டுவரியை முறைகேடா. அய்யணன் அம்பலம் பெருக்கு மாத்திப்புட்டுத்தான் வழக்கு போடுறாருங்க.....


அதெப்படி... உன் அப்பன் பெயரில் உள்ள வீட்டு வரிய அந்தாளுக்கு பெயருக்கு மாற்றினாங்கே....

அந்த ஆளு..நம்ம ஏரியா..மாநகராட்சியாக ஆவதற்கு முன்பு பஞ்சாயத்தா இருந்த போது  அந்தாளு.. பஞ்சாயத்து தலைவரா இருந்தவருயில்லையா..அந்தப் பவரு வச்சு  ரெண்டு பத்திரத்தக் காட்டி அவரு பெயருக்கு மாத்திட்டாரு...அதும்போல..எங்கம்மாவக்கு ஒன்னும் தெரியாது. எனக்கும் அதைப் பத்தின விபரமும் தெரியாது...இப்ப இருக்கிற மாதிரிதானே அப்பவும் காசுக்காக எதை வேனும்முன்னாலும் செஞ்சுருக்காங்கே.ல......


அப்படி..மாத்திட்டாங்கேளா.....!!!!


பத்து வருசம் கழிச்சு விசாரனை நடந்துச்சு..அதுக்கு இடையிலே... உங்களுக்குத்தான் தெரியுமே... கோயில் பூசாரியான குருசாமி..பாதையில்லாம விலை போகாத இடத்த குறைந்த விலைக்கு வாங்கி. நான் குடியிருந்து வருவதும் அய்யணன் அம்பலம் என் தாயார்மீது வழக்கு போட்ட   இடத்தின் ஒரு பகுதியை பாதையாக பயன் படுத்தி வந்தததும்...எதிர்த்து கேட்டதுக்காக குருசாமியின் வப்பாட்டியான பெத்தம்மாள் மூலமாக என் வீட்டீல் தீவைத்ததும் அதற்கு ஈடாக..குறைந்த வியைில் வாங்கிய அந்த இடத்தின் பாதியை அவள் பெருக்கும் எழுதிக் கொடுத்தானே.. என் வீட்டில் தீ வைத்த அந்த சம்பவத்தில் போது    ”அழகிரி மீதான் கொலை வழக்கை விசாரிச்ச முருகேசன் என்ற போலீஸ் ஆய்வாளர்”..நம்ம பகுதி போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்தபோது  குருசாமிகிட்டேயும் பெத்தம்மாள் புருசன்  வடிவேலுகிட்டேயும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு. .. காலையிலிருந்து இரவு வரை ஸ்டேசனிலே இருந்த என்னையும் என் அம்மாவையும் பெத்தம்மாள்வீட்டுக்கு தீவைத்தாக பொய் வழக்கு போட்டு ஜெயில்ல தள்ளியதோடு... எதிர்த்து கேட்ட.. மானபங்கம் செஞ்சுட்டேன்னு பொய்ப்புகார் கொடுத்தவளின் புருசன்காரனையும் அடிச்சு எங்களோடு ஜெயில்ல தள்ளினதுதான் தெரியுமே..இந்த குருசாமி  மின்சார வாரியத்திலும் பெத்தம்மாளின் புருசன் பிஆர்சியிலும் வேலை  பார்த்ததால் பெத்தம்மாள் ஆடிய ஆட்டம்தான் உங்களுக்கு தெரியுமே.....

குருசாமியும். பெத்தம்மாள் புருசன் வடிவேலும் இணை பிரியா நண்பர்களாச்சே கணேஷ்.....

அந்த குருசாமியின் தூண்டிய தூன்டலில் பெத்தாம்மாள் என்ன ஆட்டம் ஆடினா......

...அந்த ஆட்டத்துக்குத்தான்... அனுஅனுவாக சித்ரவதைப்பட்டு நாத்தமெடுத்து செத்தாளே....!!!

சரி..அந்தக் கத... அப்படி கெடக்கட்டும்... பத்து வருடம  கழிச்சு விசாரிச்சு கோர்ட்டுல தீர்ப்பு வந்துச்சு.... வழக்கிடை சொத்தானது. பிரதிவாதியின் கணவர் கட்டியதால்தான் அவர் பெயரில் வீட்டுவரி உள்ளது...வாதி வாங்கியதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து சொத்து அவருக்கு பாத்தியமானதுக்கான எந்த ஆதாரமும் இல்லை... பிரதி வாதிகளிடம் வாடகை வாங்கியதாக காட்டப்படும் பாக்கெட் நோட்டின் மெய்யத்தன்மையை பிரதிவாதி நிருபிக்க வில்லை..பிரதிவாதியின் கணவர் வாதியிடம் பன்னையாளாக வேலை செய்திருக்கிறார் என்று நிருபனமாகிறது..ஆகையால்..இந்த வழக்கில் வாதிக்கு எந்தவித பரிகாரமும் கிடைப்பதற்க்கில்லை என்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.. சொத்து யாருக்கு உரிமை என்பதை உரிமையில் கோர்ட்டில் தீர்த்துக் கொள்ளச் சொல்லி... அந்தாளு போட்ட வழக்கு தள்ளுபடியாகிவிட்டது..
உடனே அந்த ஆளு அடுத்த கோர்டில் அப்பீல் செய்கிறார்.


அவன் என்ன அன்றாட காய்ச்சியா விட்டுட்டு போக......

கேளுங்க..சொல்றேன்..... அப்பீல் கோர்ட்ல ரெண்டு வருசம் கழிச்சு விசாரிச்சாங்க... அதுல  கூடுதலா.என்ன சொன்னாங்கன்னா... என் அப்பா பெயரிலிருந்த வீட்டுவரி எப்படி அய்யணன் அம்பலம் பெயருக்க மாறுச்சுன்னு ஒரு இக்கு வச்சு.. அங்கேயும் இந்தாளு போட்ட வழக்கு தள்ளுபடி ஆச்சு... 
இந்த தீர்ப்பு முடிந்த கையோடு... வெளி வேலைக்கு போயிகிட்டு இருந்த நானும் சொந்தமாக பைண்டிங்-பிரிண்டிங்் தொழில வீட்டிலேயே தொடங்கிட்டேன்..

இது தெரிஞ்சும் அந்தாளு..படையோட வந்தாப்ல...வந்தப் படையிலே..எனக்கு தெரிஞ்ச முகங்களும் இருந்ததால்.. விபரத்தை சொல்லி பேசினேன். வந்தவர்களின் பேச்சைக் கேட்டகாமல் உரிமையில் கோர்ட்டில் 1996ல் என் மீதும் என் அம்மா மீதும் வழக்கு தொடுத்தாரரு... அப்ப போட்ட வழக்கு இன்னிய வரைக்கும் கிட்டதட்ட இருபத்தியோரு வருசமாக வாய்தாவில.. இருக்கு.. இதுக்கு இடையிலே..அந்தாளு  சாகுதுக்கு முன்னாடி.. என் அப்பன்கூட பிறந்வங்களை தூண்டிவிட்டு இடத்துல பங்கு கேட்டு என்னோட சண்டையிட்டனர். அப்பவும் போலீஸ் ஸ்டேசனுக்கு போயி என் மீது புகார் கொடுத்தார்கள்..... நானும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கிடை சொத்தில் அவர்களுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால் அவர்களும் என் மீது வழக்கு போட்டு எடுத்துக் கொள்ளட்டும் என்று என் தரப்பு வாதத்ததை அவர்களுக்கு சாதகமான போலீஸகாரர்களிடம் சொன்னதும் அவர்களும் என் அப்பனுடன் பிறந்த மூன்று சகோரர்களும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் ரெண்டு பேர் இறந்து போக அவர்கள் வாரிசுகள் ஆறும் பேரும்பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்னர்... 

அப்போ..அய்யணன் அம்பலமும் அந்தாளின் மூத்த மகனும் செத்துப்போனாங்களே....அவிங்க..வாரிசு.....


அவிங்க வாரிசுகளான..மொத்த உறுப்பினகளான 12 பேரும் வாதிகளாக சேர்க்கப்பட்டனர... இத்தோடு என் அம்மாவும் இறந்துவிட்டபடியால்  என் அக்காவும் என்னுடன் சேர்த்து பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது .

அடப்பாவிகளா...!!! மூன்று பேருல..விசாரிச்சு முடிக்கிறத விட்டுப்புட்டு... வாதி தரப்புல 12 பேரு... ஒன் தரப்புல உன்னையும் சேர்த்து ரெண்டு பேரு, உன் சித்தப்பங்கே தரப்புல...ஒன்னு..ரெண்டு..மூனு... ஆறு பேரு.... இத்தினி பேரையும் விசாரித்து தீர்ப்பு சொல்றதுக்குல்ல.....

அங்கு இடமே.. இருக்காது... சுத்தி இருக்கிறவங்கல்ல.... குருசாமி அவனின் உறவுக்காரர்கள் இப்பவே.... பாதியை ஆக்கிரமித்துவிட்டார்கள்....இந்த லட்சணத்துலதான்..... வெளிக்கு போக  கழிப்பறை கட்டியதுக்கு இவ்வளவு சண்டை சச்சரவு..... நானு ஒத்த  ஆளு..இவிங்கள எதித்து நிக்க முடியல.... அவிங்க பலபேரு...... பூசாரி குருசாமி..அவனோட சொந்தப் பிரச்சினையை பொதுப் பிரச்சினைன்னு சொல்லி  வீட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் வரி போட்டு  தெம்பா என்ன ஒழித்துக் கட்டுறாங்கே.....


இவ்வளவு பிரச்சினையில... ஏன்? அங்க இருக்கிற... வர்ர விலைக்கு வித்துட்டு வேறு பக்கம் வந்துடலாம்ல.....

அப்படித்தான் நெணச்சேன்... வயக்காட்டு பக்கம் போயி விலையை கேட்டா ஒரு சென்ட் ஐந்து இலட்சம்னு சொல்றாங்கே.. ஐந்து லட்சத்துக்கு எங்கே போவேன்.... ஏற்கனவே..நான் சேமித்து வைத்திருந்த ஆறு இலட்சத்தையும் டூவீலர் விபத்தில சிக்கிய என் மருமகனின் சிகிச்சைக்கு செலவழிச்சுட்டேன்... குடியிருக்கிற இடம் வழக்கு நடப்பதால் ரெம்ப ரெம்ப அடிமாட்டு விலைக்கு கேக்குறாங்கே.  வழக்க  அவனே நடத்திருக்கிறாங்களாம்....ஒருத்தனுக்கு நாலு பக்கம் இம்சைன்னா..உனக்கு  எட்டுப்பக்கமும் இம்சையாவுல..இருக்கு.கணேசு......


என்ன செய்யிறது.. இந்த என் நிலமையைத்தான்... சிங்க முத்துவம் நானும்.... அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.....உங்களுக்கு ரெம்ப போரடிச்சு இருக்கும்..  போய்ட்டு வாங்க.... அடுத்து ஒவ்வொன்னா சொல்றேன்..

5 comments :

  1. எல்லா ஊரிலும் இப்படித்தான் நடக்கிறது நண்பரே

    ReplyDelete
  2. அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லையா ?

    ReplyDelete
  3. ஆகா இப்படியும் கிளம்பிட்டாங்களா

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com